உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணை ஜனாதிபதிக்கு சம்பளம் இல்லை; சலுகைகள் ஏராளம்

துணை ஜனாதிபதிக்கு சம்பளம் இல்லை; சலுகைகள் ஏராளம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டின் இரண்டாவது உயரிய பதவியான துணை ஜனாதிபதி பதவிக்கு, சம்பளம் எதுவும் கிடையாது; ஆனால் சலுகைகள் ஏராளமாக இருக்கின்றன.உடல் நிலையை காரணம் காட்டி ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்த நிலையில், துணை ஜனாதிபதி தேர்தல் செப்.,9ல் நடக்கிறது. இதில், ஆளும் கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர்.துணை ஜனாதிபதி பதவியானது, அரசியல் சட்ட ரீதியாக நாட்டின் இரண்டாவது உயரிய பதவியாகும். அரசியல் சட்ட அந்தஸ்து கொண்ட பதவிகளில், சம்பளம் இல்லாத ஒரு பதவி இது மட்டும் தான்.ஆனால், ராஜ்யசபாவின் தலைவராக பணியாற்றுவதற்காக, துணை ஜனாதிபதியாக இருப்பவருக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும்.இது தவிர சலுகைகளும் நிறைய உண்டு. இலவச பங்களா, மருத்துவப்படி, விமான பயணம், பாதுகாப்பு வசதி, பணியாளர்கள் என பலப்பல வசதிகள் அரசு சார்பில் செய்து தரப்படும். துணை ஜனாதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு (முன்னாள் துணை ஜனாதிபதிக்கு), மாதம் 2 லட்சம் ரூபாய் பென்சன் கிடைக்கும். டைப் 8 என்ற தரத்தில் பங்களாவும் உண்டு. தனிச்செயலாளர்கள் இருவர், தனி உதவியாளர், மருத்துவர், நர்சிங் அதிகாரி, நான்கு பணியாளர்களும் அவரது அலுவலகத்தில் பணியில் இருப்பர்.முன்னாள் துணை ஜனாதிபதி இறந்து விட்டாலும், அவரது மனைவிக்கு ஆயுட்காலம் முழுவதும் தங்குவதற்கு டைப் 7 பங்களா ஒதுக்கீடு செய்யப்படும் என்கின்றனர், அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Anantharaman Srinivasan
செப் 08, 2025 15:27

எந்த தலைப்பில் வந்தாலென்ன.. ஆகமொத்தம் மாதம் 4 லட்சம் சம்பளம் + பல சலுகைகள். போத்திண்டு படுத்தாலென்ன, படுத்துண்டு போத்தினாலென்ன..? மொத்தத்தில் குளிராமலிருக்க போர்வை வேண்டும்.


Ramesh Sargam
செப் 08, 2025 00:26

துணை ஜனாதிபதியாக சம்பளம் கிடைக்காவிட்டாலும், ராஜ்ய சபா தலைவராக ரூ. 4 லட்சம் சம்பளம். இது போதாதா குடும்பத்தை நடத்துவதற்கு?


Chess Player
செப் 07, 2025 20:07

போபால் விஷவாயு துயர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை இந்தியாவை விட்டு வெளியேற அனுமதித்தவர் இந்த ரெட்டிதான். துணை ஜனாதிபதியாக யார் இருக்க விரும்புகிறார்கள் என்று பாருங்கள், வெட்கமின்றி போபால் விஷவாயு துயர சம்பவத்தில் ஈடுபட்டவரை தப்பிக்க அனுமதித்தார். அரசியலமைப்பை காப்பாற்றுவது போல் அவர் கையில் ஏந்திச் செல்கிறார். அவருக்குள் அணு அணுவாயுத அவமானம் இருக்கிறதா?


SS Shiv
செப் 07, 2025 19:59

சமூக விரோதிகளுக்கு கடைசிப் புகலிடம் திமுக போல.....


Natarajan Ramanathan
செப் 07, 2025 19:44

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.


Oviya Vijay
செப் 07, 2025 19:31

பாஜக ஆட்சியில் கடைசிப் புகலிடம் கவர்னர் பதவியிலோ அல்லது துணை ஜனாதிபதி பதவியிலோ முடியும் போல...


SANKAR
செப் 07, 2025 20:00

Hope he opens up before next Parliament election.


G Mahalingam
செப் 07, 2025 20:17

காங்கிரஸ் ஆட்சியில் அப்படிதான் நடந்தது.


வாய்மையே வெல்லும்
செப் 07, 2025 20:38

மண்டைய கசக்கி உண்மைய கண்டுபிடித்த ஓவியவிற்கு ஒரு சுண்டல் , பருப்புவடை பார்சல்


Anantharaman Srinivasan
செப் 08, 2025 15:21

உழைப்பேயில்லாமல் குடும்ப பாரம்பரியத்தை வைத்து Back door வழியாக வந்து உட்கார்ந்திருக்கும் உதயநிதியை பற்றி சொல்லு ஓவியா..


புதிய வீடியோ