உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிர்வாக நியமனங்களில் தலைமை நீதிபதி ஏன்: துணை ஜனாதிபதி கேள்வி

நிர்வாக நியமனங்களில் தலைமை நீதிபதி ஏன்: துணை ஜனாதிபதி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: 'சி.பி.ஐ., இயக்குநர் நியமனம் உள்ளிட்ட நிர்வாக நியமன குழுவில், சட்டப்பூர்வ பரிந்துரை மூலம் கூட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எப்படி தலையிட முடியும்' என துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.ம.பி., மாநிலம் போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் ஜெக்தீப் தன்கர் பேசியதாவது: இந்தியாப் போன்ற ஒரு நாட்டில் அல்லது எந்த ஒரு ஜனநாயக அமைப்பில் சட்டப்பூர்வ பரிந்துரையின் படியே இருந்தாலும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எவ்வாறு சி.பி.ஐ., இயக்குநர் தேர்வில் ஈடுபட முடியும்.இதற்கு ஏதாவது ஒரு சட்டப்பூர்வ காரணம் இருக்க முடியுமாஅன்றைய நாளில் அரசு நிர்வாகி நீதித்துறையில் உத்தரவுக்கு கீழ்ப்படித்ததால் அந்த சட்டப்பூர்வ பரிந்துரை வடிவம் பெற்று இருக்கும் என்று நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அதனை மாற்றுவதற்கான நேரம் இது. இந்த நடைமுறை ஜனநாயகத்துடன் ஒத்துப்போகவில்லை. அனைத்து அமைப்புகளும் அரசியலமைப்பு வரம்பிற்குள் செயல்பட வேண்டும்.அரசுகள் என்பது பார்லிமென்ட், சட்டசபைகளுக்கு பொறுப்பு கூற வேண்டும். சில நேரங்களில் ஓட்டுப்போட்ட மக்களுக்கும் பொறுப்பு கூற வேண்டும். ஆனால், அரசு நி ர்வாகம் அதிகாரத்தால், அவுட்சோர்சிங் மூலம் நிர்வகிக்கப்பட்டால், பொறுப்பு கூறல் திறன் பலவீனம் அடையும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Mohan Loganathan
பிப் 16, 2025 20:14

துணை குடியரசுத் தலைவர் சொல்வது சரிதான்.. அப்படி எனில் உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தலைமை நீதிபதியும் அங்கம் வகிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்கள் என்றால் பழைய நடைமுறையில் தவறு நடந்து இருக்கிறது என்று தான் பொருள்...இப்ப நிலைமை மாறிவிட்டதா.. மக்கள் விரும்புவது தலைமை நீதிபதியும் அங்கம் வகிக்க வேண்டும் என்று தான்


sankaranarayanan
பிப் 16, 2025 10:51

இவைகளுக்கெல்லாமே காரணம் கொலிஜியம் என்ற புது முறையை நீதிபதிகள் எந்த நாட்டிலும் ஊர்களிலும் இல்லாத முறையை தங்களது அதிகாரத்தில் கொண்டுவந்ததின் விளைவுகள் தான் இதனால் ஆட்சியாளர்களுக்கும் நீதி மன்றத்திற்கும் ஒற்றுமையே இல்லை சமரசம் இல்லை நீதிபதிகள் நியாயமான எல்லா நாடுகளிலும் அரசு நீதிபதிகளின் பெயர்களை முன்மொழியும் அதை பாராளுமன்றம் ஊர்ஜிதம் செய்யும் நீதிபதிகளுக்கு இதில் எந்தவிதமான தொடர்பும் கிடையாது


venugopal s
பிப் 15, 2025 21:33

மத்திய பாஜக அரசின் ஆட்சியில் உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் இரண்டும் இருப்பதால் தான் இன்னும் இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு இருக்கிறது.அதனால் தான் பாஜக நீதிமன்றங்களை சீர்திருத்தம் என்ற பெயரில் தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சி செய்கிறது!


GMM
பிப் 15, 2025 20:00

நிர்வாக நியமன பணியில் தலைமை நீதிபதி உள்ளே வர விரும்பும் போது, உச்ச நீதி மன்ற விசாரணை, தீர்ப்பு பணியை மூத்த ஐ ஏ. எஸ். அதிகாரி மேற்கொள்ளலாமா ?


Mahendran Puru
பிப் 15, 2025 19:11

துணை ஜனாதிபதி அரசியல்வாதி போல் செயல்படலாமா?


Barakat Ali
பிப் 15, 2025 20:04

அவரது அதிகார வரம்பிற்கு உட்பட்ட விஷயத்தில் அவர் கேள்வி கேட்கலாம் .. கேட்க வேண்டும் .....


naranam
பிப் 15, 2025 19:05

மிகச் சரியான கேள்வி!


Dharmavaan
பிப் 15, 2025 16:47

மோடி ஜனாதிபதி ஆணை மூலம் இதை கட்டுப்படுத்த துணிய வேண்டும் .


Dharmavaan
பிப் 15, 2025 16:44

துணிச்சலான மனிதர் .நீதித்துறை எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருக்க வேண்டும் வரம்பு மீறும் நீதிக்கு கடிவாளம் தேவை .மக்கள் பாராளுமன்றத்துக்கேஅதிகாரம் கொடுத்துள்ளனர் நீதி மன்றத்துக்கு அல்ல.நீதி பாராளுமன்றத்துக்கு கட்டுப்பட வேண்டும் இல்லையேல் பாராளுமன்றம் தன இம்பீச்மெண்ட் அதிகாரத்தை காட்ட வேண்டும்.நிர்வாக விஷயத்தில் நீதி தலையிடக்கூடாது.இந்திரா காலத்து நீதித்துறை வேண்டும்


A.Gomathinayagam
பிப் 15, 2025 14:00

தன்னாட்சி நிறுவன தலைவர்களை தேர்தெடுப்பதில் அரசியல் வாதிகள் கையில் மொத்தமாக கொடுக்காமல் உச்ச மன்ற தலைமை நீதிபதியை குழுவில் சேர்த்து தேர்ந்து எடுக்கிறர்களஅரசியல் வாதிகள் குழு வில் பெரும்பான்மையாக இருப்பதால் எஸ் மனிதர்கள் தான் தேந்தெடுக்க படுகிரறார்கள்


Ray
பிப் 15, 2025 13:45

அதிகாரங்களை ஓரிடத்தில் குவிப்பது நல்லதல்ல ஆபத்தானதும் கூட. பல ராணுவ அரசாங்க உயர் அதிகாரிகளும், ஏன் நீதியரசர்களும் கூட இன்று அதிகார மையத்தை மகிழ்விக்கும் விதமாக நடந்து கொள்வதும் காண்கிறோம். அதன் பலனாக திறமை புறந்தள்ளப் பட்டு ஓய்வுபெறும் நாளிலேயே உயர் பதவிகளை பெறுவதையும் காண்கிறோம். நான்காம் தர பணிகளுக்கும் தேர்வு நடைமுறைகள் கடுமையாக்கப் படும் காலகட்டத்தில் உயர் பதவிகள் அடிவருடிகளுக்கே கிடைக்கிறது என்பது அநீதி.. இவரும் அந்த வழி வந்தவரே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை