உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சரக்கு கப்பலில் தொடர்ந்து எரியும் தீ; அரபிக்கடலில் அணைக்கும் பணி தீவிரம்!

சரக்கு கப்பலில் தொடர்ந்து எரியும் தீ; அரபிக்கடலில் அணைக்கும் பணி தீவிரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளா அருகே நடுக்கடலில் 2வது நாளாக சிங்கப்பூர் சரக்கு கப்பலில் தீ பற்றி எரிகிறது. அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து கடந்த ஜூன் 7ம் தேதி புறப்பட்ட சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் சீன சரக்கு கப்பல், நேற்று கேரளாவின் பேய்பூர் கடல் பகுதியில் இருந்து வடக்கே 70 கடல் மைல் தொலைவில் வந்து கொண்டு இருந்த போது தீ விபத்து ஏற்பட்டது.பெயிண்ட், வார்னிஷ், ரெசின், எனாமல், லித்தியம் பேட்டரிகள், டைசிட்டோன் ஆல்கஹால் உள்ளன. 100 டன் எரி எண்ணெய், பூச்சிகொல்லி மருந்தும் கப்பலில் உள்ளன. இந்திய கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கப்பலில் இருந்து 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.2வது நாளாக கப்பலில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. கப்பலில் தீ பற்றி எரியும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வரதராஜ்
ஜூன் 10, 2025 22:46

யாரு மேலே பழியப் போடலாம்?


Nada Rajan
ஜூன் 10, 2025 16:11

கேரளாவுக்கு நேரம் சரியில்லை... கண்டைனர் சரி இது.... இப்போ கப்பல்அப்பாவே தீப்பிடிக்கு


SUBBU,MADURAI
ஜூன் 10, 2025 19:31

China THANKS Indian Navy and Mumbai Coast Guard for their swift RESCUE after the MV Wan Hai 503 EXPLOSION off the Kerala coast yesterday.


முக்கிய வீடியோ