வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பலே..பலே... மர்மநபர்கள் போய் இப்போ மர்ம நோய் வந்திருச்சா.
ரஜோரி: ஜம்மு - காஷ்மீரில் மர்ம நோயால் 17 பேர் உயிரிழந்த நிலையில், இந்நோய் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கில் அக்கிராமம் முழுதும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தின் பாதல் கிராமத்தில் வசிக்கும் மூன்று குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, கடந்த மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.கட்டுப்பாடுகள்
இதில், அடுத்தடுத்து 17 பேர் உயிரிழந்தனர்; 38 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், மர்ம நோய் குறித்து ஆய்வு செய்ய பல்வேறு அமைச்சகங்களின் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, அக்கிராமத்தில் முகாமிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு நேற்று முன்தினம் அனுப்பியது.இதற்கிடையே, பாதல் கிராமம் முழுதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை, மூன்று நிலைகளாக பிரித்து, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. முதலில், மர்ம நோயால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உள்ள பகுதி முழுதும் சீல் வைக்கப்பட்டு, உள்ளே மற்றும் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சிகளுக்கு தடை
இதேபோல், அக்குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து, அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அவர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதுதவிர, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வசிக்கும் மக்களுக்கு அளிக்கப்படும் உணவை தொடர்ந்து கண்காணிக்கும்படி, அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.இதேபோல், மர்ம நோய் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கில் கும்பலாக கூடவும், பொது நிகழ்ச்சிகள் நடத்தவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
பலே..பலே... மர்மநபர்கள் போய் இப்போ மர்ம நோய் வந்திருச்சா.