உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குப்பை லாரிகளை சிறைபிடித்து  கிராம மக்கள் போராட்டம்

குப்பை லாரிகளை சிறைபிடித்து  கிராம மக்கள் போராட்டம்

பெங்களூரு ; அதிவேகமாக செல்வதாக கூறி மாநகராட்சி குப்பை லாரிகளை சிறை பிடித்து, கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் அருகே தொட்ட பெலவங்கலாவில் குப்பைகளை தரம் பிரிக்கும் அலகு உள்ளது. பெங்களூரு நகரில் சேரும் குப்பைகளை எடுத்து கொண்டு, மாநகராட்சி லாரிகள் தொட்டபெலவங்கலா செல்கின்றன. தொட்டபல்லாபூரில் இருந்து தொட்டபெலவங்கலா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக சுங்க சாவடி அமைக்கப்பட்டுள்ளது.அங்கு கட்டணம் செலுத்தாமல் தவிர்ப்பதற்காக, மாநகராட்சி லாரி ஓட்டுநர்கள் கொடிகேஹள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் வழியாக செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலையில், மாநகராட்சி குப்பை லாரிகளை, சிக்கரேனஹள்ளி என்ற இடத்தில் கிராம மக்கள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.'குப்பை லாரிகள் கிராமங்களின் வழியாக செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. லாரிகளிலிருந்து கழிவு நீர், குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. லாரிகள் வேகமாக செல்வதால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது' என்று கோஷம் எழுப்பினர்.அங்கு வந்த ஆர்.டி.ஓ., மாநகராட்சி அதிகாரிகள், போலீசார், கிராம மக்களிடம் பேச்சு நடத்தினர். லாரிகளை நெடுஞ்சாலை வழியாக இயக்க வேண்டும் என்று டிரைவர்களுக்கு அறிவுறுத்துவதாக உறுதி அளித்தனர். இதனால், போராட்டம் கைவிடப்பட்டது. லாரிகளும் விடுவிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி