உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மொழியின் பெயரால் வன்முறையை கையில் எடுத்தால் சட்ட நடவடிக்கை: மஹா. முதல்வர் பட்னவிஸ் எச்சரிக்கை

மொழியின் பெயரால் வன்முறையை கையில் எடுத்தால் சட்ட நடவடிக்கை: மஹா. முதல்வர் பட்னவிஸ் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மொழியின் பெயரால் யாரும் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது என்று மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் எச்சரித்துள்ளார்.மஹாராஷ்டிராவில் அண்மையில் மராத்தி பேசாத உணவக உரிமையாளரை மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா அமைப்பினர் அடித்து உதைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையானது. தாக்குதலைக் கண்டித்தும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.இந் நிலையில், மொழியின் பெயரால் யாரும் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது என்று மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் எச்சரித்துள்ளார். இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது; நாங்கள் மராத்தி மொழியை மதிக்கிறோம். ஆனால் அதன் பெயரை பயன்படுத்தி வன்முறையில் ஈடுபடுவதை ஏற்க மாட்டோம். நாட்டில் எந்த மொழியையும், அவமரியாதை செய்வதை அனுமதிக்கவே முடியாது. யாராவது அப்படி வன்முறையில் ஈடுபட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சிலர் ஆங்கிலத்தை உயர்வாகவும், ஹிந்தியை தாழ்வான மொழியாகவும் கருதுகின்றனர். இது எப்படிப்பட்ட மனநிலை என்பது எனக்கு தெரியவில்லை.இவ்வாறு பட்னவிஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
ஜூலை 05, 2025 09:37

ஆனால் நாங்கள் மட்டும் மத அரசியல் செய்வோம், யாரும் கேட்கக்கூடாது என்கிறாரா?


தத்வமசி
ஜூலை 05, 2025 09:10

எங்க ஊரிலும் இது போன்ற குழுக்கள் உள்ளன. அவை ஆட்சிக்கு வருவதற்காக அல்லது ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க இப்படியெல்லாம் தங்களின் கட்சி உறுப்பினர்களை, கூட்டணி லட்டர் பேடு கட்சி தொண்டர்களை மற்றும் மாணவர்களை அவ்வப்போது மொழியின் பெயரால் போராட்டம் செய்ய தூண்டி விடுவார்கள். பொது மக்களுக்கு இது பற்றியெல்லாம் சிந்தனை கிடையாது. இவர்களாக மொழிப் பிரச்சினையை தொடங்குவார்கள், போராட்டம் நடத்துவார்கள், கலவரம் செய்வார்கள். கேட்டால் மொழியை உயர்த்தி பிடிக்கிறோம் என்பார்கள். இவர்களின் தலைவர்களின் பிள்ளைகள் மட்டும் உயர்ந்த கல்வி நிலையங்களில் ஆங்கிலம் மட்டுமல்ல, ஜெர்மன், பிரன்ச் என்று பல மொழிகளை கற்றுக் கொள்வார்கள். இது ஒரு நாடகம். இந்த நாடகத்தை முடித்து வைக்க வேண்டும்.


அப்பாவி
ஜூலை 05, 2025 07:42

உங்க இரும்புக்கரமும் துருப் புடிச்சிடும் ஜீ.


தாமரை மலர்கிறது
ஜூலை 05, 2025 00:50

இங்கே சீமான் தமிழ்மொழி வெறியை தூண்டிவிட்டு, பணம் வசூல் செய்துவருகிறார். அவரை பொறுத்தவரை, தேர்தலுக்கு முன், கட்சிகளுடன் பேரம் பேசி, அதற்குத்தகுந்தவாறு ஆட்களை போடுவார். ரொம்ப வீக்கான ஆள் போடனும்ம்னா, திமுக நிறைய பணம் கொடுக்கணும். சீமான் ஒரு அறிவாளி. அதனால் தான் பேரம் பேசி, தேர்தலுக்கு முன் வெற்றிபெறுபவர்.


Ramesh Sargam
ஜூலை 04, 2025 21:08

தமிழகத்தில் மொழியின் பெயரால், ஜாதிகளின் பெயரால்...தான் ஆட்சியே நடக்கிறது.


சமீபத்திய செய்தி