உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவில்களில் வி.ஐ.பி., தரிசனம் தவறுதான்... ஆனால் தடுக்க கோர்ட் மறுப்பு

கோவில்களில் வி.ஐ.பி., தரிசனம் தவறுதான்... ஆனால் தடுக்க கோர்ட் மறுப்பு

புதுடில்லி : கோவில்களில் வி.ஐ.பி., சிறப்பு தரிசன முறையை ரத்து செய்ய, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.உத்தர பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராதா மதன் மோகன் கோவிலில் பணியாற்றும் விஜய் கிஷோர் கோஸ்வாமி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:நாட்டில் உள்ள பிரதான கோவில்களில் விரைவாக தரிசனம் செய்ய, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் வசதி படைத்தோர் பயனடைகிற நிலையில், ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்படுகின்றனர். கடவுளை தரிசனம் செய்வதில் பாகுபாடு நிலவுகிறது. இதை ரத்து செய்து, அனைவருக்கும் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு உத்தரவிட்டதாவது: கோவில்களில் சிறப்பு தரிசனம் அளிக்கப்படக் கூடாது என, நாங்கள் கருதினாலும், இதில் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தில் கோவில் நிர்வாகம் தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Balamurugan
பிப் 01, 2025 12:33

தடுத்தால் பாதிக்கப்படுவது உங்களை போன்ற நீதிபதிகளும் சேர்ந்து தானே. அப்புறம் எப்படி நல்ல தீர்ப்பு வரும். திருட்டு தீர்ப்பு.


Balamurugan
பிப் 01, 2025 12:27

VIP தரிசனத்தை தடுக்க கோர்ட் மறுப்பு. ஏன்? இதுக்கு கூடவா எங்களுக்கு பதில் தெரியாது? தடுத்தால் நீதிபதிகளுக்கும் VIP தரிசனம் மறுக்கப்படுமே? அப்புறம் எப்படி தடுப்பார்கள்.


kulandai kannan
பிப் 01, 2025 12:49

சபாஷ், சரியான நெத்தியடி. தனிமனிதன் தலை கவசம் அணியவேண்டும் என்று மூக்கை நுழைக்கும் நீதிமன்றத்திற்கு இதற்கு மட்டும் ஏன் தயக்கம். ஊருக்கு உபதேசிக்கும் உத்தமர்கள்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 01, 2025 12:01

கோவில் நிர்வாகங்களில் நீதி மன்றம் அல்லது அரசு தலையிடுவது கூடாது. முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த விஜபி தரிசன முறை வந்ததற்கு யார் காரணம். நாம் தானே. இந்த விஜபி தரிசன முறைகள் இல்லாத 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் என்ன செய்தோம். ஒழுங்காக வரிசையில் நின்று சென்றோமா. இல்லையே. எனக்கு தெரிவதன் உனக்கு தெரிந்தவன் என சொல்லி கொண்டு சிபாரிசு பிடித்து நடுவிலே புகுந்து சென்று தரிசனம் செய்தோம். பின்னர் அதனையே வியாபாரம் ஆக்கி கட்டணம் நிர்ணயம் செய்தார்கள். ஒழுக்கம் இல்லாமல் ஒற்றுமை இல்லாமல் இருந்ததால் வந்த வினை. இப்பொழுது அதற்கு ஒருபடி மேலே போய் கோவில்களில் அர்ச்சனை டிக்கெட் கட்டண நுழைவு டிக்கெட் போன்றவை சிறிதளவு நேர்மையாக கொடுத்து விட்டு பின்னர் அர்ச்சனை டிக்கெட் அர்ச்சகர் மூலமாகவும் கட்டண தரிசன டிக்கெட் டிக்கெட் பரிசோதகர் மூலமாகவும் திரும்பவும் கவுண்டர் வந்து மீண்டும் அதை விற்று காசு திருடுகின்றார்கள். இந்துக்கள் நம்மிடையே ஒற்றுமை ஒழுக்கம் இல்லாவிட்டால் கோயில்கள் அனைத்தும் வியாபாரம் ஸ்தாபனமாக மாற்றி விடுவார்கள். கடவுள் சிலைகள் எல்லாம் பொருட்காட்சி ஆகி விடும். திருந்தாத இந்துக்கள்.


Bhaskaran
பிப் 01, 2025 11:27

வடபழனி கோவிலில் தக்கார் அவர்களின் ஏற்பாட்டில் சீனியர் citizen களுக்கு தனி வரிசை உள்ளது இதை மற்ற பெரிய கோவில்கள் பின்பற்றனும் ஆனால் மயிலையில் இந்த வசதி இல்லை


Bhaskaran
பிப் 01, 2025 10:33

நேற்று தை வெள்ளி திருவொற்றியூர் வடிவுட அம்மன் கோவில் சென்றேன் தர்ம தரிசனம் கூட்டம் அதிகம் ஆனாலும் பணியாளர்கள் நல்லமுறையில் அனைவரையும் விரைவாக தரிசனம் செய்ய வைத்து அனுப்பினார்கள்.இந்த பணியாளர்களிடம் மற்ற பெரிய கோவில் பணியாளர்களை அனுப்பி பயிற்சி தரவேண்டும்.அறக்கொள்ளைதுறை கவனிக்குமா.


Dharmavaan
பிப் 01, 2025 10:22

கேவலமான தீர்ப்பு தங்களுக்கு பாதிப்பு வந்து விடுமோ என்று .பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் .


Karthik
பிப் 01, 2025 10:16

அதேநேரம் சாமானிய மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டுமே??


Jayaram S
பிப் 01, 2025 09:18

நிர்வாகம் என்பது யார் அவர்களுக்கு அரசுகள் கட்டளை இடுகின்றன அதிகாரிகள் அதை செயல்படுத்துகின்றனர் எனவே இதில் முடிவு எடுக்க வேண்டியது அந்தக் கோவிலின் நிர்வாக அதிகாரி தனிப்பட்ட முறையில் இதில் அரசோ வேறு யாரும் தலையிட உரிமை இல்லை மந்திரிகள் உள்பட .


GMM
பிப் 01, 2025 08:38

முதியோருக்கு விரைவில் வழிபட கோவில் நிர்வாகம் வசதி செய்து தர வேண்டும். - வி. ஐ பி - யார் என்று நிர்ணயிக்க வேண்டும்.


M S RAGHUNATHAN
பிப் 01, 2025 07:32

சுய நலத்துடன் சொன்ன கருத்து, முடிவு. உயர்நீதி மன்றத்தில் வேலை பார்க்கும் " அனைவரும்" தங்கள்.அடையாள அட்டையை காட்டி சிறப்பு தரிசனம்.செய்கின்றனர். அரசியல் வியாதிகளை பற்றி கேட்கவெண்டாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை