உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொலை வழக்கில் சிக்கிய நடிகர்; கர்நாடக சிறையில் ராஜ உபசாரம்: இணையத்தில் படம் வைரல்!

கொலை வழக்கில் சிக்கிய நடிகர்; கர்நாடக சிறையில் ராஜ உபசாரம்: இணையத்தில் படம் வைரல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு சிறையில் இருக்கும் கன்னட நடிகர் தர்ஷன், நாற்காலியில் அமர்ந்தபடி கையில் காபி மற்றும் சிகரெட் உடன் மூன்று பேருடன் ஜாலியாக பேசி கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் குற்றவாளியா? வி.ஐ.பி.,யா என இணையத்தில் நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். தர்ஷனுக்கு சிறை சட்டத்தை மீறி சலுகைகள் அளித்த 7 சிறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கர்நாடகா சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது காதலியான நடிகை பவித்ரா உட்பட 17 பேர் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சட்ட விதிமுறைகளை மீறி, சிறையில் தர்ஷனுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சிறை விதிகள்

நடிகர் தர்ஷன் நாற்காலியில் அமர்ந்தபடி கையில் காபி மற்றும் சிகரெட் உடன் மூன்று பேருடன் ஜாலியாக பேசி கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் தர்ஷன் உடன் ரவுடி வில்சன் மற்றும் அவரது மேலாளராக பணிபுரிந்த நாகராஜ் ஆகியோர் அமர்ந்து கொண்டு அரட்டை அடிக்கும் அந்த புகைப்படம், சிறை விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

விவாதம்

இவர் கொலை குற்றம் சாட்டப்பட்டவரா? வி.ஐ.பி.,யா என இணையத்தில் விவாதம் கிளம்பி உள்ளது. சிறை அதிகாரிகளின் உதவியின்றி இது எப்படி நடக்கும் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த புகைப்படம் குறித்து சிறை அதிகாரிகள் இதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

சி.பி.ஐ., விசாரணை

இந்த விவகாரம் தொடர்பாக, உயிரிழந்த ரேணுகாசாமியின் தந்தை காஷிநாத் எஸ்.ஷிவானா கூறியதாவது: 'ரேணுகாசாமி கொலை வழக்கில், போலீசார் மீது நம்பிக்கை இருந்தது. இந்த புகைப்படத்தை கண்டதும், சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என எண்ணம் வந்துள்ளது. இது தொடர்பாக முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

7 பேர் சஸ்பெண்ட்

கன்னட நடிகர் தர்ஷனுக்கு சிறை சட்டத்தை மீறி சலுகைகள் அளித்த 7 சிறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து கர்நாடகா அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சிறையில் தர்ஷன் டீ மற்றும் சிகரெட் உடன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

D.Ambujavalli
ஆக 26, 2024 16:38

இங்கு மட்டும் என்ன வாழுதாம் ? அமைச்சர் சிறையில் pineapple கேசரி saappida இல்லையா? சட்டம், சிறை, தண்டனை எல்லாம் குப்பனுக்கும் சுப்பனுக்கும்தான்


தமிழ்வேள்
ஆக 26, 2024 14:52

கூத்தாடிகள் பவிஷு தெரிந்தே வேண்டாத்தனம் செய்த ரேணுகா சாமி அப்பன் இப்போது புலம்பி ஒரு புண்ணியமும் இல்லை.. கட்டுமரம் செய்த மாதிரி ரேணுகா சாமி தன் புள்ளையே இல்லை..அநாதை என்று அறிக்கை வாங்க முடியும் இந்த திராவிட நண்பர் கும்பலால்...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 26, 2024 13:08

அவனுக்கு சித்து-சிவகுமார் ஆட்சி என்னென்ன ஏற்பாடு பண்ணிச்சோ ???? கட்டிங் வாங்குற கச்சி கர்னாடக பாஜக ன்னு இங்கே பாஜகவுக்கு எதிரா பேசுன டீம்கா கொத்தடிமைஸ் எங்கே ????


venugopal s
ஆக 26, 2024 14:50

கர்நாடகாவில் உங்கள் பாஜக ஆட்சியில் சிறையில் இருந்த சின்னம்மாவை ஷாப்பிங் பண்ண அனுமதி கொடுத்ததை மறந்து விட்டீர்களா?


Ramesh Sargam
ஆக 26, 2024 12:43

சிறைக்குள் தண்டனை என்பது சிறு குற்றங்கள் செய்தவர்களுக்கு மட்டும்தான். பெரிய பெரிய குற்றங்களை, மன்னிக்கக்கூட முடியாத குற்றங்களை செய்தவர்களுக்கு ராயல் டிரீட்மென்ட் . பணம் இருந்தால் போறும் சிறைச்சாலையையே, சிறை அதிகாரிகளையே வாங்கிவிடலாம். இதெல்லாவற்றையும் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்.


N.Purushothaman
ஆக 26, 2024 10:25

விசாரணைக்கைதிகளை தாறுமாறாக அடைத்து வைக்கும் சிறை நிர்வாகம் இவர்களுக்கு மட்டும் பல்லை இளித்துக்கொண்டு பணிவிடை செய்வது தான் மகா கேவலமாக உள்ளது


rsudarsan lic
ஆக 26, 2024 10:11

போட்டோ எடுத்த புண்ணியவான் யாரோ? அவனுக்கு இருக்கு ஆப்பு


Sampath Kumar
ஆக 26, 2024 09:17

காசு தான் கடவுள் காசுக்கு மயங்கும் சிறை அதிகாரிகள் சசிகலா கேஸ் என்ன ஆச்சு அதே தான் ஆக கர்நாடக தான் ரோல் மாடல்


Indian
ஆக 26, 2024 08:48

பணம் இருந்தால் , சிறையும் , ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆக மாறும் , நம் நாட்டில்


RAJ
ஆக 26, 2024 08:24

அங்க ஷாப்பிங் கூட போகமுடியும் சார்.. இவர் சினிமா ஷூட்டிங் உள்ள இருந்துகூட பண்ணுவார். .. ஏன்னா.. அந்த ஜெயிலு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு... ஸ்ட்ரிக்ட்டு... ஸ்ட்ரிக்ட்டு..


Indhuindian
ஆக 26, 2024 08:23

இதுல என்ன பெரிய ஆச்சரியம் இருக்கு நம்ம வூரு சின்னம்மா அப்படியே காலாற வாக்கிங் போயி ஷாப்பிங் பண்ணிட்டு எங்கயோ வூருக்கு போயிட்டு வந்த மாதிரி விடியோவெல்லாம் வோடிச்சே. அங்கே நடக்கற அக்கிரமங்களை போட்டு கொடுத்த்ட்ட ஐ பி எஸ் அதிகாரி ரெண்டு கோடி ரூவா அன்பளிப்பு வாங்கிகிட்டு ஷாப்பிங் போக அனுமதித்தார்ன்னு குற்றச்சாட்டு வெச்சாங்க என்ன ஆச்சு அந்த ரெண்டு கோடி ரூவா வாங்கினவரு ஜாலியா இருக்காரு அந்த அம்மாவை தண்ணி இல்லாத காட்டுக்கு தூக்கி அடிச்சிட்டாங்க. எல்ல ஜெயில்லயும் இது நடக்கறது தான் காசிருந்த அது ஜெயில்லே பைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி


முக்கிய வீடியோ