மேலும் செய்திகள்
தொடர்மழையால் திருத்தணயில் குறைந்த பக்தர்கள்
02-Dec-2024
கர்நாடகா புராதன கோவில்களுக்கு பிரசித்தி பெற்ற மாநிலமாகும். சிறப்பான வழிபாடுகள், மகத்துவங்கள் கொண்ட கோவில்கள் இங்குள்ளன. இவற்றில் ஆண்டில் இரண்டு மாதங்கள் மட்டுமே, தரிசனம் தரும் விட்டலர் கோவிலும் ஒன்றாகும்.அயோத்தியில் ராமர் கோவில் திறந்து வைக்கப்பட்ட பின், இந்தியாவில் மட்டுமல்ல, வெளி நாடுகளிலும் ஹிந்து கடவுள்களின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது.கடந்த 2023 ஜூன் மாதம், வட மாவட்டங்களில் வறட்சி சூழ்ந்தது. மழை இல்லாமல் ஆறுகள் வறண்டன. அணைகள் காலியாகின.சில இடங்களில் மூழ்கப்பட்டிருந்த கோவில்கள் தரிசனம் அளித்தன. பெலகாவி, சிக்கோடியின், ஹிடகல் அணை காலியான போது, 12 ஆண்டுகளுக்கு பின், புராதனமான விட்டலர் கோவில் தரிசனம் கிடைத்தது.கடந்த 1928ல், விட்டலர் கோவில் கட்டப்பட்டது. 1977ல் ஹிடகல் அணை கட்டிய போது, இக்கோவில் முற்றிலுமாக நீரில் மூழ்கியது. அதன்பின் அணையில் தண்ணீர் குறைவாக இருந்த போது மட்டுமே, கோவிலின் தரிசனம் கிடைத்தது. ஆண்டில் 10 மாதங்கள், நீரில் மூழ்கி இருக்கும். இரண்டு மாதங்கள் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கும். அதுவும் பாதியளவு மட்டுமே வெளியே தெரியும்.இரண்டு மாதங்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, நீரில் நடந்து சென்று இங்கு குடிகொண்டுள்ள விட்டலரை தரிசிப்பர். கோவில் முற்றிலும் கற்களால் கட்டப்பட்டதாகும்.மிகவும் சக்தி வாய்ந்த கடவுள். மனம் உருகி வேண்டினால், கஷ்டங்கள் மாயமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். பல ஆண்டுகளாக நீரில் மூழ்கி இருந்தாலும், கோவிலின் ஒரு கல்லும் சேதமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீரில் இருக்கும் போது விக்ரகத்துக்கு, கம்பளி போர்த்தி வைக்கின்றனர். அந்த கம்பளியும் பாழாவதில்லையாம். கோவில் இருப்பதால் ஹிடகல் அணைப்பகுதி திருத்தலமாக போற்றப்படுகிறது.தண்ணீர் வற்றி இருக்கும் போது, உள்ளே சென்று தரிசனம் செய்கின்றனர். தண்ணீர் இருந்தால் தொலைவில் இருந்து நமஸ்கரிக்கின்றனர். - நமது நிருபர் -
02-Dec-2024