மேலும் செய்திகள்
பொருளாதார 'பவர் ஹவுஸ்' ஆகும் அயோத்தி!
23-Oct-2025
உத்தர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் தலைமை யில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்தாண்டு நடந்த பார்லிமென்ட் தேர்தலில் உ.பி.,யில் பா.ஜ., அதிக அளவில் வெற்றி பெற முடியவில்லை. இதன் பின், 'யோகி முதல்வராக தொடர்வாரா?' என, கேள்விகள் எழுந்தாலும், மேலிடம் எதுவும் செய்யவில்லை.சமீபத்தில், தீபாவளியை முன்னிட்டு, அயோத்தியில் தீப உற்சவத்தை நடத்தினார் யோகி. 26 லட்சம் தீபங்கள் அயோத்தி முழுவதும் ஏற்றப்பட்டு, எங்கும் தீப ஒளியாக இருந்தது; இந்த நிகழ்வு கின்னஸ் சாதனைகளில் இடம் பிடித்துவிட்டது.கேசவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பாதக் ஆகிய இருவரும் உ.பி.,யின் இரண்டு துணை முதல்வர்கள். இவர்கள், அயோத்தியின் தீப உற்சவத்தில் பங்கேற்கவில்லை; இது அரசியல் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே உறவு சரியில்லை' என, சொல்லப்படுகிறது.'பீஹார் சட்டசபை தேர்தலின் முக்கிய பொறுப்பு மவுரியாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அவர் பங்கேற்கவில்லை' என, சொல்லப்படுகிறது. இந்த ஒன்பதாண்டு பா.ஜ., ஆட்சியில் இந்த முறை தான், துணை முதல்வர் பாதக், தீப உற்சவத்தில் பங்கேற்கவில்லை.இந்த இருவருக்கும் இந்த நிகழ்ச்சி குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லையாம்; அத்துடன் அழைப்பிதழிலும் இருவரின் பெயரும் இல்லை. இதனால், இருவருமே கடைசி நேரத்தில், நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருந்துவிட்டனர்.
23-Oct-2025