உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டு இயந்திரத்தை மாற்றினாலும் பலனில்லை: காங்கிரசுக்கு பா.ஜ., பதில்

ஓட்டு இயந்திரத்தை மாற்றினாலும் பலனில்லை: காங்கிரசுக்கு பா.ஜ., பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை மாற்றுவோம் என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார். ஆனால், அக்கட்சியை மக்கள் ஓரங்கட்டிவிட்டனர், '' என பா.ஜ., பதிலடி கொடுத்து உள்ளது.இது தொடர்பாக டில்லியில் நிருபர்களை சந்தித்த பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:நேற்று அரசியலமைப்பு நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை மாற்றிவிட்டு, ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வருவோம் என கூறியுள்ளார். நீங்கள் இவிஎம் இயந்திரத்தை நீக்குகிறீர்களோ இல்லையோ... ஆனால், காங்கிரசை மக்கள் ஓரங்கட்டி விட்டனர். பெரும்பாலான மாநில தேர்தலில் மக்கள் காங்கிரசை புறந்தள்ளிவிட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e2vrv6qg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவிஎம் இயந்திரத்தால், தலித்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள், ஏழைகளின் ஓட்டுக்கள் வீணாவதாக கார்கே போன்ற மூத்த தலைவர்கள் கூறுவது ஆச்சர்யம் அளிக்கிறது. மேற்கண்ட மக்கள் படிக்காதவர்கள், இவிஎம் இயந்திரத்தை பயன்படுத்த தெரியாது என கார்கே மற்றும் காங்கிரசார் நினைக்கின்றனரா? இதுபோன்ற சிந்தனை அவர்களை அவமானப்படுத்துவது ஆகும். பா.ஜ., வெற்றிக்கு காரணம் 'EVM' .E - ENERGY, V-VIKAS, M- MEHNAT( முயற்சி)காங்கிரஸ் தோல்விக்கு காரணம் 'RBM'R- RahulB- Bekar( worthless)M- Managementஇவ்வாறு சம்பித் பத்ரா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

முருகன்
நவ 28, 2024 07:22

ஒரு முறை மாற்றி தான் பாருங்களேன் உன்மை தெரிந்து விட போகிறது


har
நவ 28, 2024 08:40

அப்போ வயநாடு ஸ்டார்ட் பண்ணலாமா .....


நயன்
நவ 28, 2024 02:13

இந்த ஆள் ஒரு அடிவருடி… இப்படிதான் பேசுவார்


தனி
நவ 28, 2024 02:11

மக்கள் எல்லோருக்கும் ஓட்டுபோடும் இயந்தரத்தை பயன்படுத்த தெரியும் ...


Jay
நவ 27, 2024 22:15

தேர்தல் சீட்டு வந்தால் தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை வரும். திராவிட கட்சிகளிடமிருந்து 200 வாங்கும் டுமிலன் நன்றி கடனுக்காக இரண்டு சின்னங்களிலும் குத்தி விடுவான்.


SENTHIL NATHAN
நவ 27, 2024 21:03

வயநாட்டில் பிரியங்கா மிகவும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை கார்கேவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று மறைமுகமாக உணர்த்துகிறார்


M Ramachandran
நவ 27, 2024 20:31

ஒட்டு எந்திரத்தை மாற்றா துணிவதை விட தேச துரோகிகளை உங்கள் கட்சியிலிருந்து விரட்டி அடியுகள் அப்புறம் மக்கள் உங்கள் பக்கம் திரும்புவார்கள். அதற்கு தில் உண்டா கார்கே அவர்களே. தோற்பதற்கு நொண்டி காரணகங்களை கூறாமல் உருப்படியாக சிந்தியுஙகள்.


M Ramachandran
நவ 27, 2024 20:24

ஒட்டு எந்திரத்தை மாற்ற அவசியமில்லை. மாற்ற வேண்டியது இத்தாலி குடும்பதை இங்கிருந்து விரட்ட வேண்டியது.


Barakat Ali
நவ 27, 2024 19:47

மல்லிகார்ஜுன கார்கே தலித் என்பதால் அவரை ராயல் குடும்பம் அவ்வப்போது அவமதித்து வருகிறது ......


Ramesh Sargam
நவ 27, 2024 19:42

ஓட்டுசீட்டு முறையிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தால், அதன் பிறகு யார் மீது பழிபோடுவார்கள்? தேர்தல் கமிஷன் மீதா? சொல்லமுடியாது, தேர்தல் கமிஷன் மீது பழி போட்டாலும் போடுவார்கள்.


kalyan
நவ 27, 2024 21:38

அது தான் ஏற்னவே ஹரியானா தேர்தலில் தேர்தல் கமிஷன் மீது பழி போட்டு மூக்குடைப்பு பட்டாயிற்றே ?


sankar
நவ 27, 2024 19:36

"இவிஎம் இயந்திரத்தால், தலித்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள், ஏழைகளின் ஓட்டுக்கள் வீணாவதாக கார்கே போன்ற மூத்த தலைவர்கள் கூறுவது"- சிந்தனை எவ்வளவு கீழ்த்தரமாக சென்றுவிட்டது - மஹா கேவலம்


rama adhavan
நவ 27, 2024 21:41

யார் யார் ஓட்டு வீண் ஆகிறது, அவர்கள் ஜாதி, பொருளாதார நிலை, ஆணா, பெண்னா, அவர்கள் வயது முதலியவை எப்படி இவரால் மட்டும் கண்டுபிடிக்க முடிக்கிறது? ஏதாவது ஒரு தொகுதியில் புள்ளி விபரம் சொல்லு நம்ப.சுத்த ஹம்பக் மனிதர்.


புதிய வீடியோ