உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தில் அடுத்த மாதம் வாக்காளர் பட்டியல் திருத்த பணி

தமிழகத்தில் அடுத்த மாதம் வாக்காளர் பட்டியல் திருத்த பணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாடு முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை இரு கட்டங்களாக நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கும் மாநிலங்களில் நவம்பரில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. பீஹாரைத் தொடர்ந்து, நாடு முழுதும் சிறப்பு தீவிர திருத்தப் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் என தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இது தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தலைமையில் டில்லியில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் துவங்கியது. தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இரண்டு நாள் கூட்டத்திற்கு பின் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், அசாம், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் அடங்கும். இதற்கான பணிகள் அடுத்த மாதம் துவங்கப்படும். அடுத்த மூன்று மாதங்களில் இந்த பணிகள் நிறைவடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
அக் 24, 2025 14:53

இங்குள்ள சார் ஆட்சி இடம் தருமா ?


Rengaraj
அக் 24, 2025 13:54

இனி மீண்டும் ஒருமுறை வோட்டு திருட்டு என்ற கூச்சல் தமிழகம் முழுவதும் மீண்டும் ஒலிக்கும். ஊடகங்களுக்கு அருமையான கன்டென்ட் கிடைச்சாச்சு. அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் கட்சிக்காரர்களை கூட்டிவைத்துக்கொண்டு தொலைக்காட்சிகளில் ஆ. ஓஒ. ஊ என்ற ஓலங்கள் அரங்கேறும். அந்த அந்த தொகுதிகளில் புதிதாக வாக்காளர்களை சேர்ப்பதற்கு பணம் பட்டுவாடா பண்ண நேரம் வந்தாச்சு. இருக்கிற லிஸ்ட் வைச்சு பூத் ஏஜெண்டுகளுக்கு காசு கொடுப்பதற்கு சரியான நேரம் அமைந்துவிட்டது. அரசியல் கட்சிகளுக்கு அருமையான வாய்ப்பு. மக்களுக்கு லாட்டரி . சூப்பர்.


duruvasar
அக் 24, 2025 13:17

வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது. கட்டாயம் பொதுநல வழக்கு எதிர்பார்க்கலாம்.


Iyer
அக் 24, 2025 06:47

தமிழகத்தில் வடஇந்தியர்கள் அதிகம் வேலைசெய்கிறார்கள். அதில் தவறேதும் இல்லை. ஏன் எனின் அவர்கள் இந்தியர்கள். ஆனால் கணிசமான அளவில் பங்களாதேஷிகளும், ரோஹிணிக்காக்களும் கூட உள்ளதாக தெரிகிறது. ஆகையால் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை செவ்வனே செய்து பங்களாதேஷிகள் பெயரை அகற்றி அவர்களை நாடுகடத்துவது மிக மிக முக்யம்


Kasimani Baskaran
அக் 24, 2025 04:02

அதெப்படி திருத்த முடியும்? சாத்தியமில்லை இராசா.


தாமரை மலர்கிறது
அக் 24, 2025 02:02

தமிழகத்தில் ரெண்டுகோடிக்கும் அதிகமாக வடஇந்தியர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக ஓட்டுரிமை கொடுக்கப்படவேண்டும். அவர்கள் இங்கு தான் வாழ்கிறார்கள். மேலும் ரெண்டு கோடிக்கு மேல் குறைந்தது வெளிநாட்டில் வெளி மாநிலத்தில் வசிக்கும் போலி கள்ள ஓட்டுகள் உள்ளன. அதை அனைத்தையும் நீக்க வேண்டும்.


சமீபத்திய செய்தி