உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிராவில் தொடரும் காத்திருப்பு; பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் நாளை சந்திப்பு

மஹாராஷ்டிராவில் தொடரும் காத்திருப்பு; பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் நாளை சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை, : மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக, 10 நாட்களாக நிலவி வந்த இழுபறி தொடர்கிறது. பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நாளை நடக்க உள்ளது. இதில், முதல்வர் யார் என்பது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நவ., 20ல் நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு, 23ம் தேதி முடிவுகள் வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில், ஆளும் மஹாயுதி கூட்டணி 230 இடங்களில் வென்று, ஆட்சியை தக்க வைத்துள்ளது.கூட்டணியில் உள்ள பா.ஜ., 132 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா 57 இடங்களிலும், துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்., 41 இடங்களிலும் வென்றன.இருப்பினும், முதல்வர் பதவி யாருக்கு என்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. பலகட்ட விவாதங்கள், ஆலோசனைகளுக்கு பின், பா.ஜ., தலைமை எடுக்கும் முடிவை ஏற்பதாக ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார். ஆனால், துணை முதல்வர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று அவர் கூறினார்.பா.ஜ., சார்பில் முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அவரே முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னிலையில் உள்ளார்.தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களாகியும், புதிய அரசு அமைப்பதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. நாளை மறுதினம் புதிய அரசு பதவியேற்கும் என, பா.ஜ., சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், முதல்வர் பதவி, துணை முதல்வர் பதவிகள் யாருக்கு கிடைக்கும் என்பதில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது.பா.ஜ.,வுக்கு முழு ஆதரவு தருவதாக கூறிஉள்ள அஜித் பவார், மீண்டும் துணை முதல்வர் பதவியை ஏற்பார் என்று கூறப்படுகிறது. சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவியை வழங்குவதாக பா.ஜ., கூறியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே மறுத்துள்ள நிலையில், அவருடைய மகனும், எம்.பி.,யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு அந்தப் பதவி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஆனால், துணை முதல்வர் பதவி போட்டியில் தான் இல்லை என்று ஸ்ரீகாந்த் ஷிண்டே நேற்று கூறியுள்ளார். இதனால், அந்தக் கட்சியைச் சேர்ந்த யாருக்காவது துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.சிவசேனா இல்லாமலேயே, தேசியவாத காங்., ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைக்க முடியும். இருப்பினும், சிவசேனாவை புறந்தள்ள பா.ஜ., தலைமை தயாராக இல்லை. முதல்வர் பதவி கிடைக்காத நிலையில், துணை முதல்வர் பதவியை நிராகரித்துள்ள ஏக்நாத் ஷிண்டே, கூட்டணியில் தொடருவாரா; அவருடைய கட்சியினர் அமைச்சர் பதவிகளை ஏற்பரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலிட பார்வையாளர்கள்

மஹாராஷ்டிர மாநில பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம், மும்பையில் நாளை நடக்க உள்ளது. பா.ஜ.,வின் மேலிட பார்வையாளர்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தில், கட்சியின் சட்டசபை தலைவர், அதாவது முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகே, புதிய அரசு அமைவது தொடர்பாக உறுதியான தகவல்கள் தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

KumaR
டிச 03, 2024 12:41

மேல ரய்டு நடக்கும் போதே கீழ கூட்டணி கால புடிச்சி விழுந்திங்களே அப்படியா..


Velan Iyengaar
டிச 03, 2024 13:36

உலக மகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் கட்சியின் இன்னொரு பெயர் சலவை மெஷின் .... அஜித் பவார் எப்படி புனிதர் ஆனார் ??


KumaR
டிச 03, 2024 15:39

செந்தில் பாலாஜி எப்படி யோக்கியன் ஆனான் முதல சொல்லுங்க.. அவர் ஜெயிலுக்கு போனதே உங்க தலைவர் போட்ட கேஸ் தான்.


Velan Iyengaar
டிச 03, 2024 17:35

எவனும் யோக்கியன் இல்லை .....உலக மகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் கட்சி கூடுதலாக மதவாதத்தையும் பரப்புது ... அவ்ளோ தான் சங்கதி .....


பாமரன்
டிச 03, 2024 11:33

மத்ததுக்கெல்லாம் பாஞ்சு பாஞ்சு மாஞ்சு மாஞ்சு எழுதும் வார் ரூம் பாய்ஸ் டோட்டலி மிஸ்ஸிங் இங்கே ... சோ சேட் ... நானே சொல்றேன் பாஜகதான் முதர்வர் பதவி வச்சிக்கிணும்னு... வெளியே வாங்கப்பா...


Anand
டிச 03, 2024 11:29

புயல் மழை வெள்ளத்தை விடியாமூஞ்சி அரசு சரியான முறையில் கையாளவில்லை என ஊர் உலகமே கழுவி கழுவி ஊத்துகிறது, அந்த விஷயத்தை பற்றி பேச வக்கில்லாத போலி ஹிந்து பெயரில் முக்காடு போட்டுக்கொண்டிருக்கும் இருநூறு ரூவா அல்லக்கைஸ் மஹாராஷ்டிரா அரசியல் பற்றி இவ்விடம் ஊளையிடுவது ஏன்?


KumaR
டிச 03, 2024 10:44

எப்போதும் தேர்தல் பத்திரம் ஊழல் பத்தி பிஜேபிய சொல்லுறாரு.. உங்க திருட்டு தீயமுக லாட்டரி மார்ட்டின் ஐநூறு கோடி தேர்தல் பத்திரம் வாங்குனதா பத்தி மட்டும் வாய துறக்க மாட்டான்


Velan Iyengaar
டிச 03, 2024 12:09

தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகி உள்ளன?? மேலும் ரைடு விட்டு பின்னாடியே தேர்தல் பத்திரம் நிதி வாங்கிய கட்சி இல்லை திமுக ...கட்சிகளுக்கு என்ன காரணத்துக்கு தேர்தல் பத்திர பாண்டுகள் வாங்க அனுமதிக்கப்பட்டதோ அதே காரணத்துக்கு லாட்டரி மார்ட்டின் இடம் இருந்து திமுக பணம் பெற்றது .. எந்த விதமான quid-pro-qou அதாவது எதிர்ப்பலனும் இல்லாமல் மார்ட்டின் கொடுத்த தேர்தல் நிதி. அதே லாட்டரி மார்ட்டின் அலுவலகத்தில் ரைடு விட்ட தேதிக்கு பின்னர் மார்ட்டின் எத்தனை நூறு கோடிகளுக்கு தேர்தல் பத்திரம் வாங்கி bj கட்சிக்கு கொடுத்தார் என்று தேதி வாரியாக பத்திர பாண்டு நம்பர் வாரியாக வெட்டவெளிச்சமாகி இருப்பத தான் நான் குறிப்பிடுகிறேன். மார்ட்டின் மட்டுமா?? அது போல நூற்றுக்கணக்கான ஆட்களிடம் இருந்து ரைடு விட்டு அதற்க்கு பிற்பாடு பாண்டு வாங்கி குவித்த கட்சி தான் இந்த கட்சி ... அதிலும் இந்தியர்களின் உயிருடன் விளையாடும் மருந்து கம்பெனிகளிடம் இருந்து கூட பத்திரம் வாங்கி அவர்கள் திலல்லுமுல்லுகளை கண்டுக்காமல் விட்ட கொடுமையும் இந்த கேடுகெட்ட கட்சி செய்துள்ளது ஆதாரபூர்வமாக பொதுவெளியில் இருக்கு ...


AMLA ASOKAN
டிச 03, 2024 10:25

ஒன்றிணைந்து வெற்றி பெற்றுவிட்டார்கள் , ஆனால் ஒருங்கினைந்து எத்தனை வாரங்கள், மாதங்கள் ஆட்சி நடத்துவார்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும் வந்துவிட்டது. சினிமா போல் அடுத்தடுத்த காட்சிகள் கொண்ட திகில் படமாக தான் இருக்கும். அல்லது பிஜேபியின் சுனாமியில் ஷிண்டே கட்சி காணாமலும் போகலாம். ஊழல் குற்றச்சாட்டில் உள்ள அஜித் பவார் அடிபணிந்து புத்திசாலித்தனமாக நடந்துகொள்வார் .


பாமரன்
டிச 03, 2024 09:35

பார்வையாளர் நிம்மியாம்ல... விளங்கின மாதிரிதான் அப்போ...


பாமரன்
டிச 03, 2024 08:57

பகோடா கம்பெனி மற்றும் நம்ம தள பகோடாஸ் நிலைமை பரிதாபமா இருக்கு...


Velan Iyengaar
டிச 03, 2024 08:32

ஆள்காட்டி கேடுகெட்ட ஆளுங்க கண்ணுல விரலை விட்டு ஆட்டுவது பார்க்க சந்தோஷமா இருக்கு இதைவிட கேவலப்படமுடியுமா இந்த கும்பல் ??


Velan Iyengaar
டிச 03, 2024 08:29

ஜனநாயக மரபுகளை காற்றில் பறக்கவிடுவதில் இந்த கட்சியை மிஞ்ச உலகத்திலேயே வேற கட்சி இல்லவே இல்லை ....


Jagannathan Narayanan
டிச 03, 2024 10:33

How you tell like this


KumaR
டிச 03, 2024 10:47

அத திருட்டு திமுக கு முட்டு குடுக்கும் நீங்க அத பத்தி பேசலாமா.


Velan Iyengaar
டிச 03, 2024 08:27

தேர்தல் முடிந்து இத்தனை நாட்கள் ஆன பின்னரும் ஆட்சி அமைக்க துப்புக்கெட்ட கட்சி மக்கள் நலனை எவ்வாறு காப்பாற்றும் ???


முக்கிய வீடியோ