உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேடப்பட்ட ரவுடி சுட்டுப் பிடிப்பு

தேடப்பட்ட ரவுடி சுட்டுப் பிடிப்பு

புதுடில்லி:குற்றவழக்குகளி தேடப்பட்ட ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.கொலை, வழிப்பறி, திருட்டு மற்றும் சட்டவிரோத ஆயுத விற்பனை ஆகிய வழக்குகளில் தொடர்புடையவர் தலிப்,24. கடந்த அக்டோபரில் நடந்த கொலையிலும் போலீசார் தேடி வந்த நிலையில், வடகிழக்கு டில்லி சீலம்பூரில் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தது.வட கிழக்கு மாவட்ட துணை கமிஷனர் ராகேஷ் பவேரியா தலைமையில் போலீசார், நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் சீலம்பூரில் தேடுதல் வேட்டை நடத்தினர். நேற்று அதிகாலை 1:40 மணிக்கு சீலம்பூர் மீன் பண்ணை அருகே, தலிப்பை பார்த்தனர். சரண் அடையுமாறு எச்சரிக்கை விடுத்த நிலையில், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.போலீசாரும் பதிலடி கொடுத்தனர். காலில் குண்டு பாய்ந்து சரிந்த தலிப்பை, சுற்றி வளைத்துக் கைது செய்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வாயிலாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, காலில் குண்டு அகற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை