உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமலுக்கு வந்தது வக்ப் திருத்த சட்டம்

அமலுக்கு வந்தது வக்ப் திருத்த சட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வக்ப் வாரிய திருத்த சட்டம், நேற்று (பிப்.,8) முதல் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது.நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வக்ப் வாரிய சட்டத்தில், மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை செய்தது. இது தொடர்பான சட்டத்திருத்த மசோதா, கடந்த வாரம் பார்லி.,யின் இரு சபைகளில் நிறைவேறியது. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், நேற்று முதல் வக்ப் வாரிய திருத்த சட்டம் அமலுக்கு வந்ததாக, மத்திய அரசு அறிவித்தது.இதற்கிடையே, வக்ப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, தி.மு.க., உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் இதுவரை, 15 பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை, வரும் 16ல் உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இதற்கிடையே, தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில், 'கேவியட்' மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
ஏப் 09, 2025 04:01

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்பது இதுதான். தீவிரவாதத்துக்கு பணம் போகும் இன்னொரு முறைதான் வக்ப் சொத்து வருமானம்.. அதை கடிவாளம் போட்டவுடன் தீவிரவாதம் முழுவதுமாக குறைந்துவிடும்.


Sri
ஏப் 08, 2025 23:32

மக்கள் பிரதிநிதியான எம் பி கள் கொண்டு வந்த சட்டத்தை எப்படி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்கும்


GMM
ஏப் 08, 2025 22:03

ஜனாதிபதி ஒப்புதல் வழங்கிய சட்டத்தை குடிமகன் எதிர்க்க முடியுமா.? நீதிமன்றம் விசாரிக்க முடியுமா.? மத்திய அரசு நிறுத்தாமல் ஏன் கேவிட் தாக்கல். ? சட்டத்தில் எந்த பிரிவு நியாயம் சட்டத்திற்கு புறம்பாக உள்ளது. ? அதனை திருத்த கோரலாம். நீதி விசாரணை மிக விலை உயர்ந்தது. இழப்பை ஈடு செய்ய சட்டம் வேண்டும். இது போன்ற சந்தேக வழக்கு செலவுகள் மொத்தம் மனுதாரர் பொறுப்பு ஆக்க வேண்டும். வரி வசூல் மிக கடுமையான பணி. 20 ல் 1 வர் வரி செலுத்தி வருகிறார். நினைவு கொள்க.


M S RAGHUNATHAN
ஏப் 08, 2025 21:35

கேரளாவில் புதிய, திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்தை கம்யுனிஸ்ட் அரசு அமல் படுத்த தொடங்கி விட்டது. ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார் ? தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் நிலை என்ன ?


Karthik
ஏப் 08, 2025 22:39

ஏமாளி மக்களோட வரிப்பணத்தில வழக்கு போட்டு ஜாலியா வாழ்க்கையை ஓட்டுவாங்க நிதிமன்றத்தில. இதைத்தவிர வேறேதும் தெரியாதே ஆக்கப்பூர்வமா..


sankaranarayanan
ஏப் 08, 2025 20:43

பள்ளியில் படிக்கும்போது ஒழுங்காக வக்ப்புகளுக்கு போகாத அரசியல்வாதிகள் எல்லாம் சேர்ந்து செய்யும் அக்கப்போர் நாடகம். நாட்டை கெடுக்க வந்திருக்கும் நயவஞ்சகர்கள்தான் இந்த ஆர்ப்பாட்டத்தை செய்வார்கள்


Ramesh Sargam
ஏப் 08, 2025 20:11

அந்த சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்கள் நாட்டைவிட்டு போகலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை