உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூகுள் குரோம் பிரவுசர் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

கூகுள் குரோம் பிரவுசர் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இணையத்தில் தேடுவதற்காக 'குரோம்' எனப்படும் கூகுள் பிரவுசரின் பழைய பதிப்பை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், 'சி.இ.ஆர்.டி., இன்' எனப்படும் இந்திய கணினி அவசரகால நடவடிக்கை குழு செயல்படுகிறது. இது சைபர் அச்சுறுத்தல்களான ஹேக்கிங் எனப்படும் கணினியை முடக்குவது, தரவுகளை திருடுவது போன்றவற்றை கண்காணித்து தடுக்கிறது. தற்போது இவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கணினியில் விண்டோஸ் உள்ளிட்ட இயங்குதளங்களில் கூகுள் குரோம் பிரவுசரின் தற்போதைய பதிப்புக்கு முந்தைய பதிப்புகளில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக பதிவாகியுள்ளது. இதை பயன்படுத்தி ஹேக்கர்கள் கணினியில் உள்ள தகவல்களை திருட முடியும். இதை தடுக்க, கணினியில் தற்போதைய பதிப்பு குரோம் பிரவுசரை நிறுவ வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
மார் 16, 2025 11:25

ஒண்ணும் புரியல. எதுக்கும் விடியல் சார் கிட்ட கேட்டு பார்க்கலாம்.


karthikeyan
மார் 16, 2025 12:16

"ஒண்ணும் புரியல. எதுக்கும் விடியல் சார் கிட்ட கேட்டு பார்க்கலாம்." அப்படியே உங்களுடைய அரசு முறை பயணமாக மத்தியில டீ கடையிலும் கேட்டு பாருங்க. ஆரூ ரங்


Pandi Muni
மார் 16, 2025 12:36

ஆமாமா சரிதான் விங்ஞான திருடனுங்களுக்கு தெரியும் எப்படி தப்பிக்கலாமுன்னு


ஆரூர் ரங்
மார் 16, 2025 11:22

WINDOWS வெர்ஷன் 10 அல்லது அதற்கு மேற்பட்ட மாடல்கள் மட்டுமே பாதுகாப்பு என்கிறார்கள்?.


K V Ramadoss
மார் 16, 2025 07:21

செய்தி குழப்புகிறது. குறைபாடு குரோம் பிரௌசரின் தற்போதைய பதிப்பிலா அல்லது முந்தைய பதிப்பிலா? குறைபாடு இதில் உள்ளது அதனால் இதை தவிர்க்கவேண்டும் என்று செய்தி தெளிவாக இருக்க வேண்டும்.


Kasimani Baskaran
மார் 16, 2025 06:53

விண்டோவ்ஸ் என்றால் ஹேக்கர்கள் டோர் வைத்து அனைத்தையும் அள்ளிக்கொண்டு சென்று விடுவார்கள்... லினக்ஸ் வைத்து பில் கேட்ஸுக்கு செல்லும் பணத்தை குறைக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை