உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னை கண்காணித்தது போதும் சாமி: இசட் பிளஸ் பாதுகாப்பை நிராகரித்தார் சரத்பவார்

என்னை கண்காணித்தது போதும் சாமி: இசட் பிளஸ் பாதுகாப்பை நிராகரித்தார் சரத்பவார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: இசட் பிளஸ் பாதுகாப்பு மூலம் தன்னை உளவு பார்ப்பதாக கூறியிருந்த சரத்பவார், பாதுகாப்பை தற்போது நிராகரித்து விட்டார். அவர் கூடுதல் பாதுகாப்பும் வேண்டாம் என தெரிவித்தார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா - பா.ஜ., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. பிரதான எதிர்க்கட்சி கூட்டணியாக, 'மகா விகாஸ் அகாடி' உள்ளது. இதில், காங்., உத்தவ் தாக்கரேவின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., பிரிவு அங்கம் வகிக்கின்றன.

உளவு பார்ப்பதா?

சரத் பவாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவலின்படி, அவருக்கு, இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பை வழங்கி, சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதன்படி, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஆயுதமேந்திய 55 வீரர்கள், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் சரத் பவாருக்கு பாதுகாப்பு வழங்கினர். இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், நான் யாரை சந்திக்கிறேன்; எங்கு செல்கிறேன் என்பதை அறிய, இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி உள்ளது' என சரத்பவார் குற்றம் சாட்டியிருந்தார்.

நிராகரிப்பு

இந்நிலையில், இன்று(ஆகஸ்ட் 31) இசட் பிளஸ் பாதுகாப்பை சரத் பவார் நிராகரித்துவிட்டார். டில்லியில் உள்ள தனது வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்களை நியமிப்பது, நகரத்திற்குள் அவர் பயணிக்கப் பயன்படுத்தும் வாகனத்தை மாற்றுவது மற்றும் அவரது காரில் இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை அழைத்துச் செல்வது உள்ளிட்ட வசதிகளையும் நிராகரித்து விட்டார் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பேசும் தமிழன்
ஆக 31, 2024 21:24

அதுவும் நல்லதுக்கு தான்....விட்டு தள்ளுங்கள்


Nandakumar Naidu.
ஆக 31, 2024 16:59

இவர் செய்யும் அரசியல் தில்லு முல்லுகளுக்கு தடையாக இருப்பார்கள் போல. சரத் பவார் ஒரு மகாராஷ்டிராவின் கருணாநிதி.


theruvasagan
ஆக 31, 2024 16:15

பல்லும் போய் சொல்லும் போனாலும் இன்னும் பதவி ஆசை விடவில்லை பார் இந்த மராத்தா கட்டூஸுக்கு.


kulandai kannan
ஆக 31, 2024 15:01

இவரது ரகசிய பேரங்களுக்கு இடைஞ்சலாக இருந்திருக்கலாம்.


nagendhiran
ஆக 31, 2024 13:58

இல்லைனா இவரு அறுத்து தள்ளிடுவாரு?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 31, 2024 13:14

மராட்டிய கட்டுமரம் ...... மக்களை அட்டைபோல் உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணி குடும்பம் .... நாட்டின் சாபக்கேடுகள் .....


A Viswanathan
ஆக 31, 2024 14:58

பல்லு பிடுங்கிய பாம்பை யாராவது சீண்டுவார்களா. அவருக்கு வேண்டாம் என்றால் கொடுக்காதீர்கள்


சமீபத்திய செய்தி