உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜக்தீப் தன்கர் ராஜினாமா: நீதிபதி பதவி நீக்க தீர்மானம் காரணமா?

ஜக்தீப் தன்கர் ராஜினாமா: நீதிபதி பதவி நீக்க தீர்மானம் காரணமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பணமூட்டை விவகாரத்தில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க தீர்மானம் குறித்த விஷயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு தனது உடல்நிலையை காரணம் கூறியிருந்தார். பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளில் அவரது ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wfltxmwp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உடல்நிலையை ஜக்தீப் தன்கர் காரணம் சொல்லியிருந்தாலும் அதனை ஏற்காத அரசியல் கட்சியினர் காரணங்களை கேட்டு அறிக்கை வெளியிடவும், பேட்டி கொடுக்கவும் துவங்கினர் .இந்நிலையில், பணமூட்டை சர்ச்சையில் சிக்கிய ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் விவகாரம் காரணமாக ஜக்தீப் தன்கரும் பதவி விலக நேர்ந்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும். இது தொடர்பாக டில்லியில் ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரை எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசியிருந்தனர். அப்போது தீர்மமானத்தை அளித்தனர். இதனை அவரும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. ஆனால், மத்திய அரசுக்கு இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், துணை ஜனாதிபதிக்கும். அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னரே ஜக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்தார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Natarajan Ramanathan
ஜூலை 22, 2025 21:05

கோடிகளில் ஊழல் செய்த நீதிபதி ஜாலியாக இருக்கிறார் ... பாவம் துணை ஜனாதிபதி ராஜினாமா செய்கிறார். நாடு எங்கே போகிறது?


தாமரை மலர்கிறது
ஜூலை 22, 2025 18:52

வரும் பீகார் தேர்தலில் நிதிஷிற்கு பதில், பிஜேபியிலிருந்து ஒருவர் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். பீஹாரிலிருந்து நிதிஷ் துணை ஜனாதிபதி ஆக போகிறார். கட்சிக்காக தன்கர் பதவியை விட்டுக்கொடுக்கிறார். பிஜேபி பிஹாரில் ஜெயிக்க போகிறது.


Anbuselvan
ஜூலை 22, 2025 20:36

இதுவும் காரணமாக இருக்கலாம்


GMM
ஜூலை 22, 2025 18:12

நீதிபதி வீட்டில் கோடி ரூபாய் பண மூட்டை. போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி. நீதிபதிக்கு சிறையில் முதல் வகுப்பு மரியாதை.? ஆனால் மத்திய அரசும், நாடாளுமன்றமும் சட்ட ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறது. நீதிபதிக்கு மட்டும் ஆங்கிலேயர் விதிகள்? ஆளும், எதிர்கட்சி இணைந்து ஒரு போதும் தீர்மானிக்காது. துணை ஜனாதிபதி துணிந்து செயல்பட்டார். மத்திய அரசு நீதிமன்றத்திற்கு பணிந்து செயல்படுகிறது. இந்திரா எப்படி துணிந்து செயல்பட்டார்? பிஜேபிக்கு பின் நாடு பெரும் பிரச்சனைகள் எதிர்கொள்ளும்.


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 22, 2025 17:05

ஒருத்தர் இந்த மாதத்துக்கான வெளிநாட்டு பிரயாணம் செய்ய தேதி குறித்த சமயத்தில் பாராளுமன்றத்துக்கு வரவெச்சா அவருக்கு புஸ்சுக்குனு கோவம் வராதா ????


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 22, 2025 17:03

சனிப்பிணம் துணையோடு தான் போகும்


ஆரூர் ரங்
ஜூலை 22, 2025 16:49

இப்போது கூட குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி வர்மாவை மிக்க மரியாதையுடன் அழைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் நீதிபதிகள் கூறுகின்றனர். இந்த நிலையில் யார் விலக்கல் தீர்மானத்தில் மும்முரமாக இருந்து கோர்ட்டைப் பகைத்துக் கொள்ள விரும்புவர்?. எரிந்தது தனி ஒருவருடையதுதானா?.


Sudha
ஜூலை 22, 2025 16:49

ஒரு நீதிபதி கொலை செய்திருந்தால் என்ன நடைமுறை?இந்தியா எப்போது இந்தியர் விடமிருந்து கைமாறும்?


Ramesh Sargam
ஜூலை 22, 2025 16:46

ஏதோ காரணம் இருக்கு. ஆனால் உடல்நிலை காரணம் ஏற்ப்புக்குரியதல்ல.


சமீபத்திய செய்தி