உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விற்பனைக்கு வந்ததா எம்எல்ஏ சீட்; விரட்டி விரட்டி தாக்கிய தொண்டர்கள்

விற்பனைக்கு வந்ததா எம்எல்ஏ சீட்; விரட்டி விரட்டி தாக்கிய தொண்டர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்தியா முழுவதும் ஆவலோடு நோக்கும் தேர்தல் பீஹார் சட்டசபை தேர்தல். 243 தொகுதிகளைக் கொண்ட பீஹாரில் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதி ஓட்டுப்பதிவு நடை பெற உள்ளது; 14ம் தேதி ஓட்டு எண்ணிக்கை. பா.ஜ., தற்போது ஆட்சியில் உள்ள நிதிஷ் குமார் கூட்டணியும், 'இண்டி' கூட்டணியும் மோதுகின்றன.காங்கிரஸ் கட்சி, 48 தொகுதிகளுக்கு முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. ஆனால், இது கட்சிக்குள் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, சீனியர் தலை வர்களுக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.டில்லியிலிருந்து திரும்பிய பீஹார் காங்., தலைவர்களை, தொண்டர்கள் விரட்டி விரட்டி தாக்கி உள்ளனர். 'பணம் வாங்கிக் கொண்டு, 'சீட்' ஒதுக்கப்பட்டுள்ளது' என, தொண்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு தொகுதிக்கு கிட்டத் தட்ட, 5 கோடி ரூபாய் வரை பணம் வசூலிக்கப்பட்டதாம். இதனால்,காங்கிரஸ் கட்சியின் வெற்றி பாதிக்கப்படும் என, சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் கட்சியினர், ராகுல் மீது கடுப்பில் உள்ளனர். மற்ற கட்சிகள் அனைத்தும் பீஹார் தேர்தல் விஷயத்தில் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்க, ராகுல் வெளிநாடு சென்றுவிட்டார். 'தேர்தல் என்றாலே ஏன் ராகுல் ஓடிவிடுகிறார்?' என, கிண்டலடிக்கின்றனர் பா.ஜ.,வினர். 'நவ., 7ம் தேதி டில்லி திரும்பும் ராகுல், பீஹார் தேர்தல் விஷயங்களில் தீவிரமாக ஈடுபட்டு, விரைவில் தேர்தல் பிரசாரம் செய்வார்' என்கிறது காங்கிரஸ். 'சீட்' வேண்டுமானால் காசு வைக்க வேண்டும் என்கிற இந்த லஞ்ச விவகாரம், காங்கிரசில் மட்டுமன்றி மற்ற கட்சி களிலும் உள்ளது என்பது வேதனைக்குரிய விஷயம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Nagarajan D
அக் 19, 2025 13:39

அதெல்லாம் சரி முதலாளி குடும்பத்துக்கு வசூலில் எவ்வளவு என்று சொல்லுங்க அப்பு


ஆரூர் ரங்
அக் 19, 2025 09:46

வேட்பாளர் நேர்காணலில் எவ்வளவு செலவழிக்க முடியும். கழக தலைமைக் குடும்பத்துக்கு பீஸ் எவ்வளவு தருவீர்கள், வாக்காளர்களுக்குப் பணம் தர உ.பி ஏஜெண்ட்கள் ஏற்பாடு வைத்திருக்கிறீர்களா என்பவை முக்கிய கேள்விகள். தகுதிகளும்தான்.


Sun
அக் 19, 2025 09:32

அப்பப்ப இந்தியாவுக்கு வரும் எதிர்கட்சித் தலைவர். அப்படி என்னதான் வேலை இவருக்கு வெளிநாடுகளில் ? வெளி நாடுகளில் காங்கிரஸ் கட்சியை விரிவு படுத்தப் போகிறாரோ?


Kumar Kumzi
அக் 19, 2025 10:46

எப்பிடி இந்தியா மேல் பாசம் இருக்கும்


Barakat Ali
அக் 19, 2025 08:47

குழந்தைகளுக்கான கட்டுரை போல இருக்கிறது ....... தேர்தலில் போட்டி என்பது எப்போது பிசினஸ் ஆச்சோ அப்பலேர்ந்து இருக்கு சாரே .....


ஜெய்ஹிந்த்புரம்
அக் 19, 2025 08:47

இந்த லஞ்ச விவகாரம், காங்கிரசில் மட்டுமன்றி மற்ற கட்சிகளிலும் உள்ளது என்பது வேதனைக்குரிய விஷயம். - பாஜாக்காவிலும் என்று சொல்ல பயமா??


Barakat Ali
அக் 19, 2025 09:43

உங்க காலில் ஒட்டிக்கொண்டிருப்பது மற்றவன் காலிலும் ஒட்டிக்கொண்டுள்ளது என்று சிரித்துக்கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை .... முதலில் நீங்கள் உங்க காலைக் கழுவிக்கொள்வது அவசியம் ..... புத்திசாலித்தனம் .....


ஜெய்ஹிந்த்புரம்
அக் 19, 2025 08:43

ரெண்டு மாசத்திலே முதலீடு பத்து மடங்காயிடுமே


Kalyanaraman
அக் 19, 2025 07:58

இந்த லஞ்ச கலாச்சாரம் திமுகவில் பல காலமாக இருக்கிறதே. ஆதலால் இந்த திராவிட மாடலை அகில இந்தியாவே பின்பற்றுகிறது என்பதில் ஒவ்வொரு தன்மான தமிழனும் பெருமை கொள்வோம்.


Kumar Kumzi
அக் 19, 2025 09:40

ஊழலை உலகுக்கு அறிமுகப்படுத்திய கட்டுமரம் வாழ்க ஒழிக


சமீபத்திய செய்தி