உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அச்சச்சோ... தாஜ் மஹாலுக்கு என்ன ஆச்சு... தொல்லியல் துறை அலர்ட்!

அச்சச்சோ... தாஜ் மஹாலுக்கு என்ன ஆச்சு... தொல்லியல் துறை அலர்ட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆக்ராவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டிய நிலையில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் முக்கிய குவிமாடத்தில் நீர் கசிவு ஏற்பட்டது. இதனால் பாதிப்பு ஏற்படாது என அதனை பராமரிக்கும் தொல்லியல் துறை கூறியுள்ளது.வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. உ.பி.,யின் ஆக்ராவிலும் கனமழை பெய்தது. இதனையடுத்து அங்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, தாஜ்மஹாலின் மேற்கூரையிலும் நீர்கசிவு ஏற்பட்டது. இதனை இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், உறுதி செய்துள்ளனர்.இது குறித்து ஆக்ரா சரக தொல்லியல் துறை அதிகாரி ராஜ்குமார் படேல் கூறுகையில், தாஜ்மஹாலின் முக்கிய குவிமாடத்தில் நீர்கசிவு ஏற்பட்டதை கண்டுபிடித்தோம். டுரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தோம். அதில், குவிமாடத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. இவ்வாறு அவர் கூறினார்.இதனிடையே, தாஜ்மஹாலில் உள்ள தோட்டங்கள் வெள்ளநீரில் மூழ்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

N.Purushothaman
செப் 14, 2024 19:01

சமாதிக்கு உலக அங்கீகாரம் கொடுத்தது வெட்கக்கேடான ஒன்று ...


D.Ambujavalli
செப் 14, 2024 18:32

ராமர் கோயில் ஆறு மாதத்திலேயே ஒழுகுகிறது இத்தனை காலம் மழை, இடிக்கு தாக்குப்பிடித்து நிற்கிறதே அதிசயம்


எவர்கிங்
செப் 14, 2024 17:47

நாசமாகப் போகட்டும்


தமிழ்வேள்
செப் 14, 2024 16:14

இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை ..


பாரதி
செப் 14, 2024 15:46

அதெல்லாம் ஒரு கட்டிடமா. மண்டுகளுக்குத் தான் பிடிக்கும்...


ram
செப் 14, 2024 15:44

இங்கு எவ்வளவோ ஹிந்து கோவில்களை அரசுகளே இடித்து தரை மட்டமாக aakuthu , இது எண்ணிலடங்கா கொலைகளை செய்து அதன் மீது கட்டப்பட்டது, இதற்கு ஒன்னும் கவலை பட வேண்டாம். இடிந்து போனால் ரொம்ப நல்லது.


Kasimani Baskaran
செப் 14, 2024 14:32

எவ்வளவு நாளுக்குத்தான் இதை கல்லறை என்று உருட்ட முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை