உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாங்களும் ‛‛லுங்கி க்கு மாறிட்டோம்ல: ஒடிசா முதல்வர் வீடியோ வைரல்

நாங்களும் ‛‛லுங்கி க்கு மாறிட்டோம்ல: ஒடிசா முதல்வர் வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வரம்: ஒடிசாவை லுங்கி அரசியல் விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இம்மாநிலத்திற்கு மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 21 லோக்சபா தொகுதிகளுக்கு முறையே நான்காம் , ஐந்தாம் ஆறாம் கட்டம், மற்றும் ஏழாம் கட்டம் என நான்கு கட்டங்களாக மே. 13, 20, 25 மற்றும் ஜூன் 01 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது.இந்நிலையில் ஒடிசா ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஐ.டி. பிரிவைச் சேர்ந்த ஸ்வயாம் பிரகாஷ் என்பவர் வீடியோ ஒன்றை ‛எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டார். அதில் முதல்வர் நவீன் பட்நாயக், சம்பல்பூர் லுங்கி அணிந்து கையில் கட்சியின் சங்கு சின்னத்துடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.இந்த வீடியோ குறித்து பா.ஜ., மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேர்தல் பிரசாரத்தின் போது, விமர்சித்து பேசினார். அதில் ஒரு மாநில முதல்வர், அதுவும் வயதில் மூத்த நவீன்பட்நாயக், பொது இடத்தில் பைஜாமாவுடன் வருபவர் இப்படி ஒடிசா கலாச்சாரத்தை அவமதிக்கும் விதமாக லுங்கி அணியலாமா எனவும் அவரது நம்பிக்கைக்குரியவராகவும் முதல்வரின் குமாஸ்தாவாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.தர்மேந்திர பிரதானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிஜூ ஜனதா தளம் கட்சி நடத்திய செய்தியாளர் கூட்டத்தின் போது இனி பிஜூ ஜனதா தள கட்சியினர் அனைவரும் சம்பல்பூர் லுங்கி அணிந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவர் எனவும் கூறியுள்ளதால், ஓடிசாவில் லுங்கி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான ‛‛ சென்னை எக்ஸ்பிரஸ்'' என்ற படத்தில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான, ஆடிய லுங்கி நடனம் பிரபலமானது, அதே போன்று தற்போது ஒடிசா அரசியலில் லுங்கி கலாச்சாரம் , தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி