உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகிறோம்: துணை ஜனாதிபதி வேதனை

மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகிறோம்: துணை ஜனாதிபதி வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:'' பார்லிமென்ட் நடவடிக்கைக்கு ஏற்பட்ட இடையூறு மூலம் பொது மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகிறோம்,'' என ராஜ்யசபாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறினார்.

நம்பிக்கை சிதைப்பு

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று அவர் பேசியதாவது: பழைய பார்லிமென்ட் கட்டடத்தில் அரசியலமைப்பு சட்ட தினத்தை கொண்டாடியது ஜனநாயக மாண்புகளை உறுதிப்படுத்தி இருந்தாலும், இந்த அவையில் நமது நடவடிக்கை வேறு விஷயங்களை சொல்கிறது. இந்த அவை 43 மணி நேரம் 27 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டுள்ளது. இந்த அப்பட்டமான உண்மை கவலை அளிக்கிறது. எம்.பி.,க்கள் ஆகிய நாம் இந்திய மக்களிடம் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறோம். இந்த தொடர்ச்சியான இடையூறுகள், நமது ஜனநாயக அமைப்புகளின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை சிதைத்து வருகின்றன.

மக்கள் எதிர்பார்ப்பு

சில சட்டங்களை நிறைவேற்றியும், இந்தியா சீனா உறவுகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்தை கேட்டது என பல சாதனைகள் படைக்கப்பட்டு இருந்தாலும் அது அனைத்தையும் நமது தோல்வி மறைத்துவிட்டது.நாம் அனைவரும் முக்கியமான காலகட்டத்தில் உள்ளோம். நாட்டின் 140 கோடி மக்கள் நம்மிடம் இருந்து சிறந்ததை எதிர்பார்க்கின்றனர். அர்த்தமுள்ள விவாதம், இடையூறுக்கு இடையேயான நேரத்தை நாம் தேர்வு செய்ய வேண்டும். நமது ஜனநாயக மரபானது, அரசியல் வேறுபாடுகளை தாண்டி எழுச்சி பெறுவதையும், பார்லிமென்டின் புனிதம் உறுதி செய்யப்படுவதையும் எதிர்பார்க்கிறது. இந்த அவை தனித்துவமானது. நமது ஜனநாயகத்தை இந்த உலகம் எதிர்பார்த்து கொண்டு உள்ளது. நமது நடத்தை மூலம் நமது மக்களை தோல்வி அடையச் செய்துவிட்டோம். பார்லிமென்ட்டிற்கு இடையூறு என்பது மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் கேலி செய்கின்றன. அனுபவமிக்க விவாதம் மேலோங்க வேண்டிய நிலையில் இடையூறு மட்டுமே காண்கிறோம். மக்களின் நன்மைக்காக சேவை செய்ய கிடைத்த பொன்னான வாய்ப்பை வீணடித்தோம். இவ்வாறு ஜக்தீப் தன்கர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

அப்பாவி
டிச 21, 2024 08:46

அப்பாடா... தோண்டியெடுத்த அம்பேத்காருக்கு மீண்டும் அமைதி கிட்டியது. அடுத்த பாராளுமன்ற கூட்டம் வரை அமைதி. மன்னிப்பு புண்ணாக்கெல்லாம் மறைந்து, மறந்து போயிடும். மணிப்பூர் விவகாரம் மறந்து போன மாதிரி, அதானி லஞ்ச விவகாரமும் மறந்து போயிடும்.


K.n. Dhasarathan
டிச 20, 2024 21:03

மக்கள் மன்னிக்க மாட்டார்கள், ஆளும் கட்சியின் அதிகார போக்கும், அமைச்சர்கள் பெரும் மன்னர்கல் போல நடந்து கொள்வதும், சபையை நடத்தும் எண்ணமின்றி எதையோ மறைப்பதற்கு பரலு மன்றத்தை உபயோகிப்பதும் மிகவும் கவலைக்குரிய விஷயம். மக்கள் கண்டிப்பாக பதில் கொடுப்பார்கள்.


Raj S
டிச 21, 2024 01:20

மக்கள் திருடர்களுக்கு தக்க பதில் கொடுத்ததால் தான் இந்த போலி காந்தி கும்பமும் அவர்களின் அடி வருடி ரௌடிகளும் எதிர்கட்சியா பத்து வருஷத்துக்கு மேல இருக்காங்கங்கறத கூட புரிஞ்சுக்க முடியாத அளவு இந்த திருட்டு திராவிட கும்பல் இருக்கீங்க போல


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 21, 2024 07:31

தசரதன் என்ற பெயர் கொண்டவர் போர்கிஸ்தான் மூர்க்க காட்டேரி என்பது புரிகிறது .....


V வைகுண்டேஸ்வரன்
டிச 20, 2024 20:26

ஹலோ துணை ஜனாதிபதி, உங்களை யாரும் விமர்சனம் செய்யவில்லையே? ஏன் இப்படி உளறுகிறீர்கள்? ஓ.. இப்படித்தான் எழுதிக் கொடுத்தார்களா? சரி சரி.. கிளம்புங்க, காத்து வரட்டும். ஆளைப் பாரு ...விமர்சனத்துக்கு உள்ளாகிறோம் " என்று பேசுகிறார். உம்மை யாருங்காணும் விமர்சனம் பண்ணினா???


ghee
டிச 20, 2024 21:18

ஹலோ புருடா வைகுண்டம்...உன் புராணத்தை திராவிட சொம்பு கிட்ட போய் சொல்லு....கெட்ட கருத்தை போடாதே


s.sivarajan
டிச 20, 2024 20:08

இவ்வளவு பலவீனமான உதிரியான எதிர்கட்சிகளை வைத்துகொண்டே இப்படி புலம்பினால் எப்படி?


mahalingamssva
டிச 20, 2024 19:33

அரசியல்வாதிகளுக்கு பக்குவம் வரும் வரை ,பேசாமல் ஆன்லைன் மூலமாகவே கூட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பாதுகாப்பாகவும் இருக்கும், M P க்களும் டில்லி செல்லாமல் தொகுதியில் இருந்தபடியே நாட்டிற்கு சேவையாற்றலாம்.


Anantharaman Srinivasan
டிச 20, 2024 19:32

இனி ஜனநாயகம் இந்தியாவுக்கு சரிபடாது. பதவிக்கு வந்து கொள்ளையடித்து சொத்து சேர்த்து கொள்ளவே அனைத்து MP களும் விரும்புகின்றனர்.


AMLA ASOKAN
டிச 20, 2024 19:17

இவரது தேவையற்ற , சர்ச்சைக்குரிய , ஒரு தலை பட்சமான கருத்துக்களால் தான் ராஜ்ய சபா இயங்கவில்லை . எதிர்கட்சியினருடன் எப்பொழுதும் வாக்குவாதத்தில் ஈடுபடுவார் . இவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் ஆளானார் . இவர் இந்த பதவியில் இருந்து எப்பொழுது விலகுவார் அல்லது நீக்கப்படுவார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு . முந்தைய சபாநாயகர்கள் காலத்தில் இத்தகு நிகழ்வுகள் நடந்ததில்லை ...


PARTHASARATHI J S
டிச 20, 2024 19:10

மக்கள் பிரச்னைகளை நன்றாக எடுத்து வைத்த எதிர்கட்சி எம்.பி கட்கு பரிசு அளிக்கலாம். பிரச்னை தரும் உறுப்பினர்களின் டீ.ஏ வை நிறுத்தி வைக்கலாம். அந்த மாத சம்பளத்தையும் நிறுத்தி வைக்கலாம். சபாநாயகரை அவமதிக்கும் மெம்பர்களின் பதவியை தற்காலிகமாக பறிக்கலாம்.


GMM
டிச 20, 2024 18:57

தலைமை ஆசிரியர் பள்ளி மாணவர்களை ஒழுங்கு படுத்துவது போல், துணை ஜனாதிபதி ஒழுங்குபடுத்த அதிகாரம் பெற்று இருக்க வேண்டும். மாணவர்கள் தலைமை ஆசிரியர் மீது நம்பிக்கை இல்லை என்று தீர்மானிக்க முடியுமா? பள்ளியை விட்டு அனுப்பிவிடுவர். பொது மக்களின் ஜனநாயக நம்பிக்கை குறையும் முன் துணிந்து நீதி, நிர்வாகத்தை சீர் செய்க.


Nagarajan S
டிச 20, 2024 18:34

காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டுப்போட்டு மக்கள் செய்த தவறினால், அவர்களே சிரமத்திற்கும் சொல்லொண்ணா இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை