உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அழுத்தம் தந்தோம்!

அழுத்தம் தந்தோம்!

ஆயுள் காப்பீடு பிரீமியம் மற்றும் மூத்த குடிமக்கள் செலுத்தும் மருத்துவ காப்பீடு பிரீமியங்களுக்கான ஜி.எஸ்.டி.,யை விலக்கிக்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. மக்கள் பலனடைய வேண்டும் என மேற்கு வங்க அரசு தந்த தொடர் அழுத்தமே இந்த முடிவுக்கு காரணம்.- மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

தனித்து போட்டி!

ஜார்க்கண்டில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 20 தொகுதிகளில் வலுவாக உள்ளது. இண்டி கூட்டணியில் 12 சீட்டுகளுக்கு குறைவாக தந்தால் ஏற்கமாட்டோம். எங்களின் ஒரே நோக்கம் பா.ஜ.,வை தோற்கடிப்பது. நாங்கள் தனித்துப் போட்டியிட்டாலும், பிற தொகுதிகளில் இண்டி கூட்டணிக்கு ஆதரவளிப்போம்.- மனோஜ் குமார் ஜா, ராஜ்யசபா எம்.பி.,, ஆர்.ஜே.டி.,

அனுமதிக்க மாட்டோம்!

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை 1960களில் துவங்கப்பட்டது. ஆனால், 1980களில் எய்ம்ஸ் ஒரு பிராண்டாக உருவானது. புதிதாக அமைக்கப்படும் எய்ம்சில் தரம் குறைவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்; அதன் பிராண்ட் மதிப்பை காப்பாற்றுவேன். - நட்டா, மத்திய அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை