உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதி செய்வோம்: பிரதமர் மோடி

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதி செய்வோம்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கியுள்ள டில்லி மக்களுக்கு தலைவணங்குகிறேன்' என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீங்கள் வழங்கிய அன்பு, ஆசிர்வாதத்திற்கு இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன்.டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதி செய்வோம்.வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை டில்லி மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். இதற்காக பணியாற்றிய பா. ஜ., தொண்டர்கள் அனைவரையும் நினைத்து பெருமைப்படுகிறேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6dsbqhz2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டில்லியின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்கிறேன்.வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் டில்லி முக்கிய பங்கு வகிப்பதை உறுதி செய்வோம்.இந்த மகத்தான வெற்றிக்காக, இரவு பகலாக உழைத்த நமது பா.ஜ., தொண்டர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். டில்லி மக்களுக்கு சேவை செய்வதில் இன்னும் வலுவாக நம்மை அர்ப்பணிப்போம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

T.sthivinayagam
பிப் 08, 2025 22:29

யமுனை நதியில் எப்போது உபி முதல்வர் புனித நீராடுவார் என்று மக்கள் கேட்கிறார்கள்.


venugopal s
பிப் 08, 2025 18:09

ஆமாம், இனிமேல் மத்திய பாஜக அரசு டெல்லியின் வளர்ச்சிப் பணிகள் எதிலும் முட்டுக்கட்டை போடாது!


google
பிப் 08, 2025 16:33

இனியாவது டெல்லி மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் பிரதமரே.


Oviya Vijay
பிப் 08, 2025 15:06

இதனால் சகலமானவர்களுக்கும் சொல்வது என்னவென்றால் இத்தனை நாட்கள் டில்லியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதற்கு நாங்களே முட்டுக்கட்டையாய் ஆளுங்கட்சிக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தோம். இனி டில்லியில் ஆட்சியை பிடித்துவிட்ட காரணத்தால் நாங்களே அதை செய்வோம் என வடை சுடப் போகிறோம்.


vikram
பிப் 08, 2025 16:10

200 ரூபாய் ஓசி என்று அடிமை


chettinadu food
பிப் 08, 2025 16:41

200 OP


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை