உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தியப் பிரமாணம் தாக்கல் செய்யணும் அல்லது மன்னிப்பு கேட்கணும்: ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு

சத்தியப் பிரமாணம் தாக்கல் செய்யணும் அல்லது மன்னிப்பு கேட்கணும்: ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு

புதுடில்லி: '' ஓட்டுத் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் சத்தியப்பிரமாணம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும். இதில் 3வது வாய்ப்பு என்பது கிடையாது, '' , என தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் கூறியுள்ளார்.இந்தியா முழுவதும் ஓட்டு திருட்டு நடப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதனை காங்கிரஸ் வழிமொழிந்து வருகிறது. தேர்தல் கமிஷன் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jfl4fdxv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பேட்டி

இந்நிலையில் டில்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் நிருபர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது: அரசியலமைப்பு சட்டப்படி 18 வயதான குடிமகன்கள் வாக்காளர்களாக மாறலாம். ஓட்டுப் போடலாம். அதேபோல் சட்டப்படி, அனைத்து கட்சிகளும் தேர்தல் கமிஷனில் பதிவு செய்த பிறகே உதயமாகின்றன. பிறகு எப்படி அரசியல் கட்சிகள் இடையே தேர்தல் கமிஷன் வேறுபாடு காட்டும். தேர்தலை கமிஷனை பொறுத்தவரை அனைவரும் சமம். யார் எந்த கட்சியை சேர்ந்தவர் என்ற கவலை எங்களுக்கு இல்லை. அரசியல்சாசன கடமையில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

பங்களிப்பு

அனைவருக்காகவும் தேர்தல் கமிஷன் கதவுகள் திறந்தே இருக்கும். களப்பணியில், அனைத்து வாக்காளர்களும், அரசியல் கட்சிகளும், பூத் மட்ட அதிகாரிகளும், வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகின்றனர் . அனைத்தையும் வீடியோ பதிவு செய்கின்றனர். கள நிலவரத்தை பற்றி புரிந்து கொள்ளாமல் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வது கவலை அளிக்கிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை களைய வேண்டும் என அரசியல் கட்சிகள் கேட்டு வந்தன. இதனால், பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத் தீவிரப் பணி(எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது. இதற்கான நகல் உங்களிடம் வழங்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் முகவர்கள் கையெழுத்துப் போட்டனர். இதில் உள்ள குறைகளை சரி செய்ய வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் பங்களிப்பை செய்து வருகின்றன.

உறுதி

பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத் தீவிரப் பணிகளை(எஸ்ஐஆர்) வெற்றி பெறச் செய்ய கடுமையாக உழைக்கவும் முயற்சி செய்யவும் அனைத்து தரப்பினரும் உறுதிபூண்டுள்ளனர். பீஹாரில் 7 கோடி வாக்காளர்கள் தேர்தல் கமிஷனுக்கு ஆதரவாக நிற்கின்றனர். தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மை அல்லது வாக்காளர்களின் நம்பகத்தன்மை குறித்து எந்தக் கேள்வியும் எழுப்பக்கூடாது.பீஹாரில் எஸ்ஐஆர் துவங்கிய பிறகு, வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் 1.6 லட்சம் பூத் ஏஜென்ட்கள் ஈடுபட்டனர். பூத் வாரியாக இந்த பட்டியல் தயாரித்த போது, கட்சிகள் நியமித்த பூத் ஏஜென்ட்கள் இதனை ஆய்வு செய்து கையெழுத்து போட்டனர். இதுவரை 28,370 புகார்களும், ஆட்சேபனைகளையும் வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

எப்படி நடக்கும்

சில நாட்களுக்கு முன்னர், சில வாக்காளர்களின் புகைப்படங்கள், அவர்களின் அனுமதியின்றி மீடியாக்களில் வருகிறது. அவர்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்படுகிறது. எந்த வாக்காளர்களிடமும், அவர்களின் தாயார், மருமகள், மகள்கள் உள்ள சிசிடிவி காட்சிகளை தேர்தல் கமிஷன் பகிர வேண்டுமா வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே ஓட்டுப் போட்டு தங்களது வேட்பாளரை தேர்வு செய்தனர்.லோக்சபா தேர்தலில் 1 கோடிக்கும் மேலான ஊழியர்கள், 10 லட்சத்துக்கும் மேலான பூத் ஏஜென்ட்கள், 20 லட்சத்துக்குமான வேட்பாளர்களின் முகவர்கள் பணியாற்றினர். இவ்வளவு வெளிப்படையாக நடந்த தேர்தலில் எப்படி வாக்காளரின் ஓட்டு திருட முடியும்.

பயப்பட மாட்டோம்

சில வாக்காளர்கள், இரட்டை ஓட்டு என குற்றம்சாட்டினர். அவர்களிடம் ஆதாரம் கேட்டால், பதில் தர மறுக்கிறார்கள். இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை கண்டு தேர்தல் கமிஷனும் அல்லது எந்த வாக்காளர்களும் பயப்படவில்லை. தேர்தல் கமிஷன் தோளில் துப்பாக்கியை வைத்து இந்திய வாக்காளர்கள் குறிவைத்து அரசியல் செய்கின்றனர். ஏழை, பணக்காரர், முதியவர், இளைஞர்கள், பெண்கள், என வேறுபாடின்றி, அனைத்து தரப்பு வாக்காளர்களுடன் தேர்தல் கமிஷன் பாறை போன்று உறுதியாக நின்றது. எதிர்காலத்திலும் இந்த ஆதரவு தொடரும்.

எப்போது

முடிவை அறிவித்த பிறகும், அதனை எதிர்த்து, 45 நாட்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் மனுவை முறையிடலாம். 45 நாட்களுக்கு பிறகு கேரளா, கர்நாடகா அல்லது பீஹாரில் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. 45 நாட்கள் இடைப்பட்ட காலத்தில் எந்த கட்சியும், வேட்பாளரும் எந்த முறைகேட்டையும் கண்டுபிடிக்கவில்லை. தேர்தல் முடிந்த பல நாட்கள் கடந்த நிலையில், இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் உள்ள நோக்கங்களை வாக்காளர்களும், மக்களும் புரிந்து கொண்டுள்ளனர். மேற்கு வங்கம் அல்லது வேறு மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்வது குறித்து 3 தேர்தல் கமிஷனர்களும் ஆலோசித்து முடிவு செய்வார்கள்.

விசாரணைக்கு பிறகு

இந்திய அரசியல் சாசனப்படி, இந்திய குடிமகன் மட்டுமே தனது எம்எல்ஏ அல்லது எம்பியை தேர்வு செய்ய முடியும் என்பதை தெளிவாக கூற விரும்புகிறேன். வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு அந்த உரிமை கிடையாது. அத்தகைய மக்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற மனு தாக்கல் செய்தால் எஸ்ஐஆர் பணியின் போது அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் மூலம் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை கண்டுபிடிக்க முடியும். விசாரணைக்கு பிறகு அவர்களின் பெயர் நீக்கப்படும்.

கடமை

எஸ்ஐஆர் பணிகள் கடந்த 20 ஆண்டுகளாக செய்யப்படவில்லை. அதற்கு முன்னர், நாட்டில் 10க்கும் மேற்பட்ட முறை செய்யப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலின் உறுதித் தன்மையை உறுதி செய்யவே இது செய்யப்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகளிடம் இருந்து புகார் மனுவை பெற்ற பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எஸ்ஐஆர் திருத்தப் பணிகள் அவசரமாக நடத்தப்படுவது ஏன் என சிலர் தவறாக வழிநடத்துகின்றனர். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும் என மக்கள் பிரதிநிதித்தவ சட்டம் சொல்கிறது. இது தேர்தல் கமிஷனின் சட்டப்பூர்வ கடமை. அடுத்ததாக பீஹாரில் 7 கோடி பேரை தேர்தல் கமிஷன் எப்படி அணுகியது என கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், உண்மையில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 24 ம் தேதி துவங்கியது. ஒட்டு மொத்த பணிகளும் ஜூலை 20ல் நிறைவு பெற்றது. இந்தப் பணிகள் குறித்து வெளியான பிறகு ஆக., 1 முதல் தற்போது வரை எந்த அரசியல் கட்சிகளும் புகார் தெரிவிக்கவில்லை. எனவே இரண்டு விஷயங்கள்தான் எடுத்து கொள்ளப்பட முடியும்.

வேண்டுகோள்

ஒட்டுமொத்த வரைவு வாக்காளர் பட்டியல் சரி என்பதே. இதில் உள்ள குறைகள் இருந்தால், அதனை திருத்த செப்டம்பர் 1 வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இதற்கு பிறகும் குறை இருந்தால், அதற்கு யார் பொறுப்பு. அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் இன்னும் 15 நாள் அவகாசம் உள்ளது. எனவே, இந்த பட்டியலில் உள்ள குறைகளை செப்டம்பர் 1க்குள் தெரிவி்கும்படி தேசிய மற்றும் மாநில கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன். இதனை சரி செய்ய தேர்தல் கமிஷன் தயாராக உள்ளது. செப்டம்பர் 1க்கு பிறகு வாய்ப்பு இருக்காது.

3வது வாய்ப்பு கிடையாது

ராகுல் தனது குற்றச்சாட்டு தொடர்பாக சத்திய பிரமாணம் தாக்கல் செய்ய வேண்டும். அல்லது மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதில் 3வது வாய்ப்பு என்பதற்கு இடமில்லை. 7 நாட்களுக்குள் சத்திய பிரமாணம் வராவிட்டால், அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்பது அர்த்தம்.

மவுனம்

மஹாராஷ்டிரா வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட போது எந்த ஆட்சேபனையும் குற்றச்சாட்டுகளையும் சொல்லாதது ஏன்? முடிவுகள் வந்த பிறகு, தவறு உள்ளது என தெரிவிக்கின்றனர். இன்றைய தேதி வரை மஹாராஷ்டிரா மாநில தேர்தல் அதிகாரி, இது குறித்து எந்த ஆதாரத்தையும் பெறவில்லை. தேர்தல் முடிந்து 8 மாதங்கள் ஆகிறது. ஆனால், இப்போது வந்து கடைசி ஒரு மணி நேரத்தில் எப்படி வாக்குப்பதிவு அதிகரித்தது என கேட்கின்றனர். 10 மணி நேரம் ஓட்டுப்பதிவு நடந்தால், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சராசரியாக 10 சதவீதம் ஓட்டுப்பதிவாகும் என தேர்தல் கமிஷன் கூறிவருகிறது. 20 அல்லது 30 முறை இதனை நீங்கள் திருப்பி திருப்பி சொன்னால், அது உண்மையாகி விடாது. சூரியன் கிழக்கில் தான் உதிக்கும், ஒருவர் கூறினார் என்பதற்காக மேற்கில் உதிக்காது.

'0' முகவரி வாக்காளர்கள் யார்?

நாட்டின் பல பஞ்சாயத்துகளில் வசிப்பவர்களுக்கு வீட்டு நம்பரே இல்லை பாலங்களுக்கு அடியிலும், தெருவிளக்குகளுக்கு கீழும் தங்கியிருப்பவர்களுக்கும், நகரின் அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் வசிப்போருக்கும் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன அவர்களுக்கு '0' என்ற முகவரி கொடுக்கப்பட்டுள்ளது; அவர்களை போலி வாக்காளர்கள் என்று முத்திரை குத்தினால், அது ஏழை வாக்காளர்களுக்கு செய்யப்படும் மிகப்பெரிய அநீதி.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Suppan
ஆக 31, 2025 16:20

சோரோஸ் கும்பல் காங்கிரசின் ஐ டி விங்கிக்கிற்கு வழி காட்டி.


Swami Nathan
ஆக 18, 2025 14:35

நான் இந்த விஷயத்தில் ராகுல் காந்தியை முழுவதுமாக ஆதரிக்கிறேன். கோட் சூட் போட்டுக்கொண்டு ஆணவமாக இன்று பேசிக்கொண்டு இருக்கிற இந்த தேர்தல் ஆணையர்கள் காட்சிகள் மாறும்போது ஒரு நாள் சிறையில் தள்ளப்பட்டு களி தின்பார்கள்.


Rajasekar Jayaraman
ஆக 18, 2025 09:55

நீங்கள் வழக்கு தொடுக்காமல் இவர்கள் திருந்த மாட்டார்கள் வெற்று அறிக்கைகளை நிறுத்துங்கள் இரு தரப்புமே வழக்கு தொடுக்கலாம் அதுவும் தேர்தல் கமிஷன் பெயரை காப்பாற்றிக் கொள்ள வழக்கு தொடுத்து தீர வேண்டும்.


Appan
ஆக 18, 2025 08:14

இந்த தேர்தல் ஆணையர் மோடியால் நியமிக்க பட்டவர். இதற்க்கு முன் தேர்தல் ஆணையாளர்களை தேர்வு செய்ய பிஎம். எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உறுப்பினர்கள் கொண்ட குழு தேர்வு செய்யும். ஆனால் மோடி உச்ச நீதிபதியை நீக்கி அவருக்கு வேண்டிய இருவரை நியமித்து தேர்தல் ஆணையரை நியமித்தார். அப்படின்னா இந்த தேர்தல் ஆணையர் மோடிக்கு வேண்டியவர் தானே. ஏன் மோடிக்கு ஆதரவாக செயல் பட்டு இருக்க கூடாது? ஏன் மோடி இப்படி செய்தார் என்று யாரவது சொல்ல முடியுமா .?.முதலில் இந்த தேர்தல் ஆணையர் நேர்மையாக செயல் படுகிறேன் என்று காட்டணும். இல்லை பதவி விலகனும்


Shivakumar
ஆக 18, 2025 06:21

உங்களை எல்லாம் ராகுல்காந்தி ஒரு மனுஷனாகவே மதிக்கல. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கணும். ராகுல் உங்க பேச்சை மதிக்காம பீகாரில் பொய் பிரச்சாரம் செய்ய கிளம்பிவிட்டார். எனவே விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி மன்றம் மூலமாக இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது. புடிச்சி புடுங்கி எடுக்கணும். கடுமையான நடவடிக்கை மூலமே இதற்கு ஒரு தீர்வு எட்டும்.


Rajan A
ஆக 17, 2025 22:40

உச்ச நீதிமன்றம் எப்படியும் பெயில் கொடுக்கும் நம்பிக்கை தான் இதற்கு காரணம்


ManiMurugan Murugan
ஆக 17, 2025 22:19

அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோகன் கட்சி தி மு கா கூட்டணி வேறு நாடுகளில் ஏன் அமெரிக்கா சென்று குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அங்கு இருந்து க் காட்டட்டும் முடிந்தால் பங்களாதேஷத்திற்குள் பாத யாத்திரை நடத்தட்டும் முடிந்தால் சாராயம் போதை கலாச்சார கூட்டமும் சேர்ந்து நடை விளம்பரகாரர்கள் நடந்துக் காட்டட்டும் விரைவில் SRI தமிழகம் வர வேண்டும்


Ramesh Sargam
ஆக 17, 2025 22:02

பொய்யைத்தவிர எதுவும் பேசத்தெரியாதவர் இடத்தில் சத்திய பிரமாணம் செய் என்றால் அவர் எப்படி செய்வார்?


பேசும் தமிழன்
ஆக 17, 2025 20:56

எனக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும் .....பதில் சொல்ல தெரியாது .....இப்படிக்கு இத்தாலி பப்பு.


Venkatesh
ஆக 17, 2025 20:50

இங்க இருக்கிறது முரட்டு திருட்டு பீசுகள் அங்க முட்டாப்பீசு... மொத்த கூட்டமும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம எப்படித்தான்...... சோறு தின்னா இப்படி இருக்க முடியாதே..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை