உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீய சக்திகளிடம் அடி பணிய மாட்டோம்: மம்தா

தீய சக்திகளிடம் அடி பணிய மாட்டோம்: மம்தா

கோல்கட்டா: தீயசக்திகளிடம் திரிணாமுல் காங்கிரஸ் அடிபணியாது என அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாளை முன்னிட்டு மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:தாய்மார்கள், நிலம் மற்றும் மக்களுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டு 1998 ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பயணம் துவங்கியது. இன்றும் எங்கள் கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் இந்த இலக்கில் உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும் இருக்கிறார்கள்.அவர்களின் முயற்சிகள் மற்றும் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். கட்சிக்கு எண்ணற்ற மக்களின் கருணை, அன்பு மற்றும் பிரார்த்தனைகள் கிடைத்துள்ளன. மக்களின் ஆதரவே தனது பலமாக கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் நாட்டில் உள்ள ஒவ்வொரு தனி நபருக்காகவும் தனது போராட்டத்தில் உறுதியாக நிற்கும்.எந்தவொரு தீய சக்திகளுக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். அனைத்து பகைமைகளையும் புறக்கணித்து சாமானிய மக்களுக்கான எங்களின் போராட்டம் வாழ்நாள் முழுவதும் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !