உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்ப் திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம்; முதல்வர் மம்தா பானர்ஜி

வக்ப் திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம்; முதல்வர் மம்தா பானர்ஜி

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் வக்ப் திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பார்லிமென்டில் நடந்த காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில், இரு அவைகளிலும் வக்ப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, ஜனாதிபதி ஒப்புதல் அளித்த நிலையில், நேற்று முதல் வக்ப் திருத்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.இந்த நிலையில், கோல்கட்டாவில் ஜெயின் சமூகத்தினர் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தில் வக்ப் திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: வக்ப் திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதால், நீங்கள் வருத்தப்பட்டிருப்பது எனக்கு தெரியும். நம்பிக்கையாக இருங்கள், மேற்கு வங்கத்தில் பிரித்தாளும் ஆட்சி ஒருபோதும் நடக்காது. வங்கதேசத்தின் நிலைமையை பாருங்கள். இப்படியிருக்கும் போது, வக்ப் மசோதாவை தற்போது நிறைவேற்றி இருக்கக் கூடாது, எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Thetamilan
ஏப் 09, 2025 19:09

மடோய் ஆட்சியின் இந்து மதவாத குண்டர்கள் கொள்ளையடித்து வைத்துள்ளது கணக்கிலடங்காதது . அனைத்தையும் மிஞ்சியது . முதலில் கவனிக்க வேண்டியது அது


Kanakala Subbudu
ஏப் 09, 2025 18:56

எந்த ஒரு மாநிலமும் இவ்வாறு சட்டத்தை அமுல் படுத்த முடியாது என்று சொல்ல அனுமதிக்க வேண்டாம். தேவையானால் உச்ச்நீதி மன்றம் அப்படி ஒரு ஆணை பிறப்பிக்க வேண்டும்


visu
ஏப் 09, 2025 18:18

அதில் இவங்க என்ன செய்யமுடியும் ஏதாவது சொத்தை வக்ப் அபகரித்தல் நீதிமன்றம் எழுவார்கள் அதை இவர்களால் எப்படி தடுக்க முடியும் மற்றபடி வாரியம் அமைப்பது தாமதிக்கலாம்


Loganathan Balakrishnan
ஏப் 09, 2025 17:46

இன்னொரு கோமாளி


sankaranarayanan
ஏப் 09, 2025 17:38

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ப் திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதைப்பார்த்துக் கொண்டுமா சும்மா இருக்கிறது மத்திய அரசு உடனே அதை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லையேல் இது காட்டு தீ போன்று நாடு பூராவும் பரவி விடும். உச்ச நீதி மன்றமும் மவுனம் காப்பது நாட்டின் ஸ்திர தன்மைக்கே ஆபத்தாகும்


Ramesh Sargam
ஏப் 09, 2025 17:28

மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு நீ என்றைக்குத்தான் ஒப்புதல் அளித்திருக்கிறாய் , சொல்லு பார்க்கலாம். நீ தவறிப்போய் இந்தியாவில் பிறந்துவிட்டாய்.


Rajan A
ஏப் 09, 2025 16:47

என்னிக்கு தான் மக்களுக்கு நல்லதை செஞ்சீங்க?


TRE
ஏப் 09, 2025 16:32

வெறுப்பேற்றிய மம்தாவின் பேச்சு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை