வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திருநெல்வேலி தென்காசியில் கனமழை கொட்டி தீர்ப்பதால் கட்டிட வேலை பாதிக்கப்பட்டுள்ளது
சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (நவ.,05) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வரும் நவ.,8ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ppi2yj3i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களிலும் இன்று இடியுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.நவம்பர் 9ம் தேதி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி தென்காசியில் கனமழை கொட்டி தீர்ப்பதால் கட்டிட வேலை பாதிக்கப்பட்டுள்ளது