உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் நிலையங்களில் எடை கட்டுப்பாடு; ஏர்போர்ட் விதியை பின்பற்ற முடிவு

ரயில் நிலையங்களில் எடை கட்டுப்பாடு; ஏர்போர்ட் விதியை பின்பற்ற முடிவு

புதுடில்லி: விமான நிலையங்களில் பின்பற்றப்படும் எடை விதிமுறையை, முக்கிய ரயில் நிலையங்களில் பின்பற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில்களில் பயணியர் எவ்வளவு எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்ற விதிமுறை பல ஆண்டுகளாக அமலில் உள்ளது. ஆனாலும், அவை எப்போதாவது தான் பின்பற்றப்படுகின்றன. இந்நிலையில் உ.பி.,யின் பிரயாக்ராஜ், கான்பூர், மிர்சாபூர், அலிகாரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் புதிய எடை விதிமுறையை பின்பற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ரயில்வே மூத்த அதிகாரி கூறியதாவது: விமான நிலையங்களில் பின்பற்றப்படும் எடை விதிமுறையை முக்கிய ரயில் நிலையங்களில் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. நெரிசலை குறைத்தல், அமரும் இடங்கள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்டவற்றை எளிதாக்கும் வகையில் இந்த விதிமுறை கடுமையாக அமல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, 'ஏசி' முதல் வகுப்பு பயணியர், 70 கிலோ வரையிலான உடைமைகளை இலவசமாக எடுத்து செல்லலாம். இரண்டாம் வகுப்பு 'ஏசி' பயணியர், 50 கிலோ, 'ஏசி' மூன்றாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி பயணியர் 40 கிலோ, பொதுப் பெட்டிகளில் பயணிப்போர் 35 கிலோ லக்கேஜை கட்டணமின்றி எடுத்து செல்லலாம். அமரும் இடத்தை அடைக்கும் அளவுக்கு எடையுள்ள பொருட்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள், பெரிய பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல முடியாது. கூடுதலாக உள்ள உடைமைகளை, பயணத்தைத் துவங்கும் முன்னரே லக்கேஜ் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

cpv s
ஆக 20, 2025 10:37

yes good idea, follow as per airport rules


கூத்தாடி வாக்கியம்
ஆக 20, 2025 09:44

அண்ணே ஏ சி ல போரவன் எதுக்கு 70 கிலோ எடுத்துட்டு போக போரான் அரிசி பருப்பு தூக்கிட்டு அலையிறவன் லோயர் கிளாஸ்ல போரவன் தான


திகழும் ஓவியன், Ajax Ontario
ஆக 20, 2025 16:09

கூத்தாடி...ஏ சி ல போகிறவன் வரி கட்டினால் மட்டுமே உன்னை போன்றவர்கள் சாவரி செய்யலாம். 150 கோடி மக்களுக்கு வெறும் 10 சதவீதம் மக்கள் மட்டுமே தாங்கி பிடிக்கிறார்கள்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 20, 2025 08:02

ஜனநாயகத்தின் சாபக்கேடு. வருமுன் காப்பது என்பதைப்பற்றி சிந்திப்பதில்லை. ஆரம்பத்திலிருந்தே இதுபோன்ற கட்டுபாடுகளை கண்டிப்புடன் அமல்படுத்தி இருந்தால் பிரச்சினையில்லை. இப்போது மக்களை "எம்புட்டு" வேண்டுமானாலும், "எதை" வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல பழக்கிவிட்டு, இப்போது திடீரென விழித்துக்கொண்டு, அதை செய்யாதே, இதை செய்யாதே என்றால் இதுவரை அனுமதித்ததை முன்னுதாரணமாக காட்டி மக்கள் எதிர்பார்கள். உடனே அரசியல்வாதிகள் ஏழைகளை ஆளுங்கட்சி வஞ்சிப்பதாக அரசியல் செய்வார்கள். இதுபோன்ற புதிய நடைமுறை செயலில் உள்ளது தெரியாமல் "ஏகப்பட்ட" லக்கேஜ் உடன் வரும் எளியமக்கள் செய்வதறியாது திகைத்து, வன்முறையில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகம். எனவே இந்த நடைமுறையை அமல்படுத்தும் முன்னர் தொடர்ந்து ரயில் நிலையங்கள், தொலைக்காட்சிகளில் பிரசாரம் செய்து, குறைந்த கட்டணத்தில் அனுமதி கொடுத்து, தேவைபட்டால் குறிப்பிட்ட ரயில்களில் பெரிய லக்கேஜ் வைக்க தனியாக ஒதுக்கி, இப்படி படிப்படியாக நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும்.


rama adhavan
ஆக 20, 2025 07:23

அப்படியயே எடுத்துச் செல்லும் சுமைகளின், பெட்டிகளின் அளவு, எண்ணிக்கைகளையும் வரையறை செய்யவேண்டும். ஆமாம் குறுகலான சாதாரண இரண்டாம், மூன்றாம் குளிர் பெட்டிகளில் ஒரு பிரிவில் எட்டு பயணிகள் உள்ளனர் அவர்களுக்கான 280 கிலோ பொருட்களை அவர்கள் இருக்கையின் கீழ் ஒன்றேகால் அடி சந்தில் வைக்க எங்கே இடம் உள்ளது? அதையும் ரயில்வே தெரிவிக்க வேண்டும்.


ديفيد رافائيل
ஆக 20, 2025 07:19

இத எப்பவோ எடுத்திருக்கலாம் luggage கொண்டு வர்றவங்க இடத்தை அடைச்சுக்குறானுங்க


Rajan A
ஆக 20, 2025 06:17

நல்ல முடிவு. பல சமயங்களில் நடக்கும் வழியை அடைத்து பொருட்கள் ஏற்றி வருகின்றனர். அதுவும் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் போவோர்கள் தொல்லை அதிகம்.தனியாக ஒரு பெட்டியை இணைத்து தீர்வு காணவேண்டும்


புதிய வீடியோ