உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் துவக்கிய மேற்குவங்க டாக்டர்கள்

சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் துவக்கிய மேற்குவங்க டாக்டர்கள்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் நேற்று (அக்டோபர் 05) முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை டாக்டர்கள் துவக்கினர். மேற்குவங்கம், கோல்கட்டா அரசு மருத்துவமனையில் ஆக.9ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெண் டாக்டருக்கு நீதி கேட்டும், பாதுகாப்பை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.பணி செய்யும் இடங்களில் சி.சி.டி.வி., கேமரா உள்பட பாதுகாப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்பட 5 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தனர்.அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக முதல்வர் மம்தா ஒப்புக்கொண்டார். செப்டம்பர் 21ம் தேதி முதல் டாக்டர்கள் பணிக்கு திரும்பினர்.ஆனால் டாக்டர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை அரசு ஒப்புக் கொண்டபடி செயல்படுத்தவில்லை என கூறி ஜூனியர் டாக்டர்கள் கடந்த அக்.01) ம் தேதி மத்திய கோல்கட்டாவில் தர்மதாலாவில் மீண்டும் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தை துவக்கினர். அப்போது தங்கள் கோரிக்கையை 24 மணிநேரத்திற்குள் நிறைவேற்றவேண்டும் இல்லையெனில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர். அரசிடமிருந்து எந்த பதிலும் வரைவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து நள்ளிரவு முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர்.. இதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றனர்.மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தொடங்க உள்ள நிலையில், ஜூனியர் டாக்டர்கள் சாகும் வரை போராட்டத்தை துவக்கியுள்ளது அம்மாநில அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sankar
அக் 06, 2024 12:41

மேதகு முதல்வரும் வருவாரா? போராட்டத்துக்கு


சகுரா
அக் 06, 2024 12:19

நோயாளிகள் சாகும் வரையா?


M Ramachandran
அக் 06, 2024 11:17

வங்காள மக்களை மூட்டார்களாக்கி மம்தா செய்த செயற்கரிய காரியம். 1. ஆதாயம் கிடைக்காது என்று அறிந்து கார் கம்பெனி டாடா வை விரட்டி அதன் மூலம் அனுகூலம். 2. அடுத்துள்ள வாங்க தேச தீவிரவாதிகளை தெரிந்தும் ஒட்டு வங்கிக்காக இறக்குமதி செய்துமற்ற மாநிலங்களுக்கு அனுப்பி அந்த மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் தலை வலி உண்டாக்கியது. 3. ஊழல் செய்த மறுத்து கல்லூரி டீனை ஆதாயத்திற்காக ஆதரித்து கற்பழித்த அந்த கிராதகனை சட்டத்தின் முன் நிறுத்தாதது அது போலாகா இப்போர் குடுத்த வாக்கயை காப்பாற்றாமல் எத்து/ எனமற்ற முயலால் வேலை செய்வது


RAMAKRISHNAN NATESAN
அக் 06, 2024 09:03

அபயா வழக்கு விரைவாக நடத்தி முடிக்கப்பட்டு உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் .........


J.Isaac
அக் 06, 2024 09:01

உண்மையாகவே இவர்கள் மருத்துவர்களா?


raja
அக் 06, 2024 07:38

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கும் 2G புகழ் திருட்டு திராவிட மாடல் அரசையும் சாரதா சிடபண்ட் ஊழல் புகழ் கொள்ளைகாரி மமதை அரசையும் இன்னும் களைக்காமல் விட்டு வைத்திருப்பதால் பிஜேபி அரசு ஒரு கொலை அரசு...


M Ramachandran
அக் 06, 2024 02:53

மம்தா ஜெயலலிதா அம்மையார் போல் தாயுள்ளம் கொண்டவர் அல்ல. இரும்பு போனன்ற கடின மனம். எதுவரை பார்ப்போம். கடைசியில் காலில் உளுந்து மன்னிப்பு கேட்போம் என்றமன நிலையில் உள்ளார். விடாப்பிடியாக முதல்வர் நாற்காலியை தன மானம் இழந்து பிடித்து தொங்கி கொண்டிருக்கிறார். இவர் கடைய்யசி காலம் நிம்மதியற்று போகும்.


புதிய வீடியோ