இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அண்மையில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு, இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காக, ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் பிளேயிங் லெவன்: ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், கில், துருவ் ஜூரேல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி, குல்தீப் யாதவ், பும்ரா, சிராஜ். சீனியர் வீரர்கள் விராட் கோலி, ரோகித் ஷர்மா, அஸ்வின் ஆகியோர் ஓய்வை அறிவித்து விட்டதால், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இவர்கள் இல்லாமல் இந்திய அணி தனது சொந்த மண்ணில் முதல்முறையாக களம் இறங்குகிறது.