உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியது என்ன: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியது என்ன: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

புதுடில்லி: '' பள்ளி கல்வித்துறைக்கான நிதி, கோவை, மதுரை மெட்ரோ, கோவை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன்'', என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் நிருபர்களை சந்தித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cb1xsrf8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது அவர் கூறியதாவது:*பள்ளி கல்வித்துறைக்கான எஸ்எஸ்ஏ நிதியை பெறுவது* மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம், * அந்த நகரங்களில் உள்ள விமான நிலையம் விரிவாக்கம், *சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைப்பது, *செங்கல்பட்டு திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை எட்டு வழிச்சாலையாக மாற்றுவது,* கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை * கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிட மக்களை ஆதி திராவிடர் பட்டியலில் சேர்ப்பது* இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவித்தல் ஆகிய கோரிக்கைகளை நிடி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தி பேசினேன்.நிடி ஆயோக் கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டேன். இதனை ஏற்று 2 நிமிடங்கள் வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் இந்த கோரிக்கையை அளித்தேன்.இதனை செய்வேன் என சொன்னார். செய்வாரா மாட்டாரா என்பது போகப்போக தெரியும். தமிழகத்திற்கான கல்வி நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வர வேண்டிய நிறுத்தி வைத்தனர். அதனை , பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்திய பிறகு நிதியை விடுவித்தார். இதனை நினைவுபடுத்தி நன்றி தெரிவித்த போது, நீங்கள் சொன்னீர்கள். அதை செய்தேன் எனக்கூறினார். அதை போன்று இதை கூறியுள்ளேன். அதனை செய்யுங்கள் எனக்கூறினேன். தமிழகத்திற்கான கல்வி நிதி கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருப்போம்.சோனியா, ராகுலை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு. டில்லி வரும்போது எல்லாம் அவர்களை சந்திப்பது வழக்கம். அதேநேரத்தில் அரசியல் பேசவில்லை எனக்கூற மாட்டேன்.அமலாக்கத்துறை தொடர்பான சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் கருத்து நியாயமானது. நியாயமான தீர்ப்பை கூறியுள்ளார். அமலாக்கத்துறை சோதனை அரசியல் ரீதியானது அதனை முறைப்படி சந்திப்போம்.நான் வெள்ளைக்கொடி காட்டுவதாக அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் கூறுகிறார். அவர் போன்று என்னிடம் வெள்ளைக்கொடியும் இல்லை. அவரிடம் இருப்பது போன்று காவிக் கொடியும் இல்லை.டாஸ்மாக் மற்றும் குவாரி ஊழல் நடந்ததாக இடி கூறுவது பொய். பித்தலாட்டம். தேவையில்லாம பிரசாரம் செய்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மறுத்து உள்ளனர். தேர்தல் நெருங்க நெருங்க இதனை செய்கின்றனர். அதனை சமாளிக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

Barakat Ali
மே 25, 2025 18:56

மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வு ....... இதில் எப்படி நீதிமன்றங்கள் தலையிடலாம் ????


venugopal s
மே 25, 2025 12:52

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை என்ற நடிகர் சந்திரபாபு பாடல் ஞாபகம் வருகிறது!


Barakat Ali
மே 25, 2025 18:46

உங்களுக்கு ரூபாய் இருநூறு சரியாகக் கிடைப்பதில்லை என்கிற வருத்தம் தொனிக்கிறது .....


Haja Kuthubdeen
மே 25, 2025 10:04

இரண்டு நிமிட சந்திப்பில் என்னதான் பேசமுடியுமோ!!!!


Suresh sridharan
மே 25, 2025 09:22

இவர்கள் என்ன உரையாடல் நடத்தி இருப்பார்கள் மோடி ஸ்டாலின் எப்படி இருக்கிறீங்க ஸ்டாலின் ஈ ஈ ஸ்டாலின் ஏதோ கேட்கணும் சொல்லிட்டு வந்தீங்க ...ஆக..? ஆக...? சொல்லுங்க ஸ்டாலின் ok ok பேசணும்னு தோணுது அந்த வார்த்தை


sundar
மே 25, 2025 02:30

அங்கிட்டு: தெய்வமே நம்ம ரத்துவ விட்ருங்க தெய்வமே நம்ம விக்கி ஜு வ விட்ருங்க தெய்வமே 9 நட்சத்திரத்த விட்ருங்க தெய்வமே என் புள்ளாண்டான விட்ருங்க. தெய்வமே டாஸ்மாக் காசுல தான் கால் கஞ்சி குடிக்கிறேன்.கால்ல விழுறேன் விட்ருங்க தெய்வமே இங்கிட்டு நான் யார் தெரியுமா ஓங்கிப் பேசிட்டேன் பயந்து நடுங்கிட்டாங்க எச்சரிக்கை குடுத்திருக்கேன்.. தலிவரு மகனா ?? கொக்கா அடுத்த வாட்டி கைய வெச்சா மகனே நடக்குறதே வேற அப்டின்னு சத்தம் போட்டேன்.மனுஷன் பயந்து நடுங்கிட்டாரு அவ்வ்வ்வ்வ்வ்வ்


SVR
மே 25, 2025 01:28

ஒய் மூவன்நா கூவன்நா, நீ செலவழிக்க வேண்டிய உன்னோட பங்கான 40% சமைக்கிற சிக்ஷா திட்டத்திற்கு செலவழிச்சிட்டியா? இல்லைன்னு டெல்லி கோர்ட்டுல சொல்லியிருக்கே மத்திய அரசு. உன் பங்கை குடுக்க மாட்ட ஆனா மத்திய அரசு அதோட 60% ஐ கொடுக்கணும். மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள். இவர்களுக்கு ஒத்த ரூபாய் கூட கொடுக்க வேண்டாம். கோர்ட்டில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து மேல் நடவடிக்கை எடுக்கவும்.


உ.பி
மே 24, 2025 23:44

அடங்கப்பா... கால்ல விழவே இல்லையாம்


தாமரை மலர்கிறது
மே 24, 2025 23:42

ஸ்டாலின் பிரதமரிடம் சொன்ன கதையை அவர் நம்ப மாட்டார்.


krishna
மே 24, 2025 23:28

OSI QUARTER BONUS.


தமிழ்வேள்
மே 24, 2025 22:40

கைகள் தேய்ந்து ரத்தம் கொட்டும் அளவுக்கு திருட வேண்டியுள்ளது..எனவே, அந்த வகையில் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.. ஆனால் கணக்கு மட்டும் கேட்கவே கூடாது....இதைக் கேட்க வேண்டும், கேட்காமலேயே தரவேண்டும் என்பது சுடாலினார் மைண்ட் வாய்ஸ்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை