உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல் தான்; ஓவைசி திட்டவட்டம்

டில்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல் தான்; ஓவைசி திட்டவட்டம்

புதுடில்லி: டில்லியில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவம், பயங்கரவாத தாக்குதல் தான் என்று ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். கடந்த நவ.,10ம் தேதி டில்லி செங்கோட்டை அருகே சதிகாரன் டாக்டர் உமர் நபி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 12 பேர் உள்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 'ஒயிட் காலர்' பயங்கரவாதத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனிடையே, இந்த தாக்குதல் நடத்துவதற்கு முன், உமர் நபி தற்கொலைப்படை தாக்குதலை நியாயப்படுத்தி பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், டில்லியில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவம், பயங்கரவாத தாக்குதல் தான் என்று ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; டில்லி கார் குண்டுவெடிப்பு பயங்கரவாதி பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. முஸ்லிம் சமூகத்தில் தற்கொலை என்பது தடை செய்யப்பட்டது. அப்பாவி மக்களை கொல்வது பாவம் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய செயல்கள் சட்டத்திற்கு எதிரானவை. அவனது செயல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது அல்ல. டில்லியில் நிகழ்த்தப்பட்டது பயங்கரவாத தாக்குதல் தான், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

nms
நவ 19, 2025 13:54

சதிகாரன் டாக்டர் உமர் நபி இல் உள்ள டாக்டர் பட்டத்தை குறிப்பிட தகுதி இல்லை. இவனை பயங்கர சதிகாரன் உமர் நபி என்று கூப்பிட்டால் போதும். டாக்டர் மரியாதை கொடுக்க வேண்டாம்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி