உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல் ஓய்வுக்கு பின் என்ன? மனம் திறந்தார் அமித் ஷா!

அரசியல் ஓய்வுக்கு பின் என்ன? மனம் திறந்தார் அமித் ஷா!

ஆமதாபாத்: அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதும், வேதம், உபன்யாசம் மற்றும் இயற்கை விவசாயத்தில் நேரத்தை செலவிட முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.பாஜ.,வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா. பிரதமரின் ஓய்வுக்கு பின் அமித் ஷாவே அந்த இடத்தை நிரப்புவார் என்று, பாஜ., தொண்டர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், அமித் ஷா, தன் ஓய்வுக்குப் பிறகான திட்டங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nchpq277&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தானைச் சேர்ந்த கட்சியின் மகளிரணியினர் மற்றும் கூட்டுறவுத் துறையை சேர்ந்த பெண்கள் முன்னிலையில் அமித் ஷா நேற்று பேசியதாவது:அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின், என் வாழ்நாள் முழுவதையும் வேதம், உபன்யாசம் மற்றும் இயற்கை விவசாயத்திற்கு அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளேன். https://www.youtube.com/embed/Sp3nRSw_Z9Aரசாயன உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் கோதுமையால் புற்றுநோய், ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்னைகள் வருகின்றன. ரசாயன உரங்கள் கலக்காத உணவுகளை சாப்பிட்டால், நாம் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது.இயற்கை விவசாயம், நோயைக் குறைப்பது மட்டுமல்லாமல் பயிர் உற்பத்தித் திறனையும் மேம்படுத்துகிறது. நான் என் சொந்த பண்ணையில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்; மகசூல் கிட்டத்தட்ட 1.5 மடங்கு அதிகம்.அதிக மழை பெய்யும் போது, ​​பொதுவாக பண்ணையில் இருந்து தண்ணீர் வெளியேறும். ஆனால் இயற்கை விவசாயத்தில், ஒரு துளி கூட தண்ணீர் வெளியேறாது. ஏனென்றால் இயற்கை விவசாயம் நீர்ப்பிடிப்பு பாதைகளை உருவாக்க அனுமதிக்கிறது. அதிகப்படியான உரங்களைப் பயன்படுத்துவது அந்த நீர்ப்பிடிப்பு பாதைகளை அழித்துவிட்டது. மண்புழுக்கள் இயற்கை உரங்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால், செயற்கை உரங்கள் அவற்றை அழித்துவிட்டன.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 11, 2025 11:18

நிறையபேர் இப்படி சொல்வதை கேட்கிறேன், படிக்கிறேன். உடல்வலு இழந்த முதுமையில் விவசாயம் செய்ய முயற்சிப்பது வீண் வேலை. விவசாயத்திற்கு உடலுறுதியும், செடிகொடிகளுடன் இளவயதுமுதல் பழகி, அவற்றின் தட்பவெட்ப, நோய்நொடி, வாழ்க்கை முறையை அறிந்திருக்கும் திறனும் முக்கியம். 60 வயதுவரை எதுவுமே தெரியாமல் வளர்ந்தபின்னர் கண்கெட்டபிறகு முயற்சிப்பது வீண்.


venugopal s
ஜூலை 11, 2025 10:55

வேதம், உபன்யாசம் ,இயற்கை விவசாயமா?


venugopal s
ஜூலை 11, 2025 10:54

பிரதமர் மோடி இருக்கும் வரை அமித்ஷா அவர்கள் மத்திய பாஜக அரசில் என்றும் நம்பர் டூ தான். இவரது பிரதமர் கனவு பலிக்காது என்ற உண்மையை உணர்ந்து கொண்டு விட்டார் போல் உள்ளது!


vivek
ஜூலை 11, 2025 15:24

குடும்ப வாழ்நாள் கொத்தடிமை வேணுகோபால் சொல்லிட்டாரு....


Sivagiri
ஜூலை 11, 2025 08:33

100 கோடிக்கு மேலான ஜனங்களுக்கு உணவளிக்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயம் உள்ளது, அனைவருக்கும் கார் தேவையில்லை, அனைவருக்கும் ஐபோன் தேவை இல்லை, ஆனால் அணைத்து ஜனங்களுக்கும் உயிரினங்களுக்கும், உணவு தொடர்ந்து தேவை, ஆனால் இப்போது உணவோடு மாத்திரைகளும் ஊசிகள், சத்து டானிக்குகள், பல்வேறு உபகரணங்கள் தேவை ஆகி விட்டது, ஒட்டு ரகங்களை கண்டுபிடித்து அதிக விளைச்சலை கொடுக்க முயன்ற முன்பிருந்த காங்கிரஸ் அரசு, பின் விளைவுகளை உணராமல், இறக்குமதி செய்த உரங்களை , பயன்படுத்த கட்டாயப்படுத்தியதே, இப்போதைய நிலைக்கு காரணம் . . . இதை சரி செய்ய நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகும் போல . . . அது வரை ? . .


Sambath
ஜூலை 11, 2025 07:46

இயற்கை விவசாயம் இந்தியா முழுவதும் படிப்படியாக வளர்ச்சி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தன் பண்ணை, தன் உணவு, தன் ஆரோக்கியம் என்று இருப்பது அமித் ஷா போன்றோருக்கு அழகல்ல


Oviya Vijay
ஜூலை 11, 2025 07:39

இதுவரை செய்த பாவத்தின் பலனை இவ்வுலகை விட்டு செல்லும் முன் கடைசிக் காலத்தில் அனுபவிப்பீர்கள். கர்மா என்பது யாரையும் என்றைக்கும் விடாது. கர்மாவிற்கு உள்துறை அமைச்சர் என்றோ பிரதமர் என்றோ ஜனாதிபதி என்றோ ஏழை என்றோ பணக்காரன் என்றோ பாகுபடுத்திப் பார்க்கத் தெரியாது...


vivek
ஜூலை 11, 2025 08:08

ரொம்ப மொக்கை கருத்து


Mettai* Tamil
ஜூலை 11, 2025 10:31

இதுவரைக்கும் மத சார்பற்ற என சொல்லிக்கொண்டு, இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தியும் ,இந்து கடவுள்களை கிண்டல் செய்வதையும் தொடர்ந்து செய்து வரும் பிரிவினைவாத விஞ்ஞான ஊழல் கட்சிக்கு மெகா முட்டு கொடுக்கும் உங்களைப்போன்ற சிலரின் பாவத்தின் பலனை இவ்வுலகை விட்டு செல்லும் முன் கடைசிக் காலத்தில் அனுபவிப்பீர்கள். கர்மா என்பது யாரையும் என்றைக்கும் விடாது.


Vaduvooraan
ஜூலை 11, 2025 10:48

ஏன் இத்தனை எரிச்சல்?


HoneyBee
ஜூலை 11, 2025 11:30

அப்போ திராவிட ஆட்சியாளர்கள். அஜித் குமார் கொலை மற்றும் நேற்று ஒரு சகோதரி ஹெல்மெட் போடாம வந்ததால் நடுரோட்டில் செத்தது. இது எல்லாம் என்ன தண்டனை கிடைக்கும். அடிமைகள் குவார்ட்டர் பிரியாணி கூட்டம் கூட்டமாக வாழும்


vivek
ஜூலை 11, 2025 15:25

வாழ்நாள் குடும்ப கொத்தடிமை ஓவிய விஜய் சொன்ன சரியானிருக்கும்


subramanian
ஜூலை 11, 2025 06:53

நல்லவர்களின் நல்ல எண்ணங்களை நிறைவேற்ற வேண்டும் இறைவா.


Karthik Madeshwaran
ஜூலை 11, 2025 06:41

தெளிவான பேச்சு, வாழ்த்துக்கள். ரசாயன உரம் முதல் பூச்சி கொல்லி, mutant விதைகள், அதனால் மக்களுக்கு உருவாகும் நோய்கள், அதற்கு தயாரிக்கப்படும் மருந்துகள் என்று இது ஒரு மிக பெரிய Chain . கார்ப்பரேட்டுகள் முழுவதுமாக இந்த Chain Process மூலமாக "பல லட்சம் கோடிகளை" மக்களிடம் இருந்து சம்பாதிக்கிறார்கள். இது மிக பெரிய SCAM. இது ஒன்றிய அரசுக்கும் தெரியும், ஏன் இந்த உள்துறை அமைச்சருக்கும் நன்றாக தெரியும். தெரிந்தும் ராசாயன உரங்களை இந்திய சந்தையில் திறந்து விட்டு காசு பார்த்து, மக்களை நோயாளிகளாக்கியது யார் ? ஒருவர் புற்று நோயால், தோல் நோயால், இதய பிரச்சனையால் பாதிக்க படுகிறார் என்றால் அது எங்கோ ஒருவர் விவசாயத்திற்கு ரசாயணம் , பூச்சிக்கொல்லி பயன்படுத்தியதால் வந்த வினை என்று தான் அர்த்தம். உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். இன்று அதே உணவினை Slow Poison ஆக மாற்றி விட்டார்கள். மக்கள் யோசிக்கணும்.


பா மாதவன்
ஜூலை 11, 2025 05:52

வாழ்த்துக்கள்.


Kasimani Baskaran
ஜூலை 11, 2025 03:50

சிறப்பு.


புதிய வீடியோ