உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமருக்கும், ஜக்தீப் தன்கருக்கும் இடையே என்ன பிரச்னை; கார்கேவுக்கு தீராத சந்தேகம்

பிரதமருக்கும், ஜக்தீப் தன்கருக்கும் இடையே என்ன பிரச்னை; கார்கேவுக்கு தீராத சந்தேகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: நாட்டின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே என்ன நடந்தது என்பதை, ஜக்தீப் தன்கர் வெளிப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். கடந்த 21ல், பார்லி., மழைக்கால கூட்டத் தொடர் துவங்கிய முதல் நாளே, துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். ராஜ்யசபா தலைவராகவும் பதவி வகித்த அவர், கூட்டத்தொடரின் முதல் நாளில் வழக்கம் போல சபை நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், அன்று இரவே திடீரென ராஜினாமா செய்தது, டில்லி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.ஜக்தீப் தன்கரின் ராஜினாமா முடிவின் பின்னணியில் ஏதோ மர்மம் இருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், ஜக்தீப் தன்கருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே என்ன நடந்தது என்பதை அவரே வெளிப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் விஜயபுராவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; அவர் ஏன் ராஜினாமா செய்தார் என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால், அவர் எப்போதும் அரசுக்கு ஆதரவாகவே நடந்துகொண்டார். விவசாயிகள், ஏழைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க முயன்ற போது எல்லாம், அவர் எங்களை சந்திக்க அனுமதி கொடுக்கவில்லை. தலித்துகளுக்கு எதிரான கொடூரங்கள், பெண்கள் மீதான வன்முறைகள், இந்து-முஸ்லிம் பிரச்சினைகள் குறித்து நாங்கள் நோட்டீஸ் கொடுத்தாலும், அவர் விவாதிக்க அனுமதிக்கவே இல்லை. ஜக்தீப் தன்கருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே என்ன நடந்தது என்பதை அவரே வெளிப்படுத்த வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Subburamu Krishnasamy
ஜூலை 28, 2025 16:10

Number of bonded labourers are more in Khan cross


venugopal s
ஜூலை 28, 2025 10:59

பங்கு பிரிப்பதில் ஏதாவது பிரச்சினையா?


பாரத புதல்வன்
ஜூலை 28, 2025 09:34

உனக்கும் பப்புவுக்கும் என்ன பிரச்சினையோ அதே பிரச்சினைதான்.... அவங்களுக்கும்...குறுக்கே.... அவர்களே


vbs manian
ஜூலை 28, 2025 09:19

சந்தேகமே உங்கள் கட்சிதான்.


Joseph Inbaraj Santhiyagu
ஜூலை 28, 2025 01:17

As the President of the Congress Party, this matter does not concern him. He should focus on resolving the issues within his own party first. I have rarely seen him speak out in support of public welfare. During the Congress regime, there were numerous instances of financial mismanagement and alleged corruption. He began his political journey as a local municipal councillor, and today his familys net worth exceeds ₹1,500 crore. Its worth questioning how such immense wealth was accumulated legitimately. Before pointing fingers at others, one should reflect on their own past.


Bhakt
ஜூலை 27, 2025 23:52

"பிரதமருக்கும், ஜக்தீப் தன்கருக்கும் இடையே என்ன பிரச்னை" காங்கிரஸ் தான் இந்த நாட்டுக்கே பிரச்சினை.


Bhakt
ஜூலை 27, 2025 22:53

காங்கிரஸ் மேலிடம் கேக்க சொல்லிச்சா கருகே?


C.SRIRAM
ஜூலை 27, 2025 22:46

சும்மா கூவாதே கிழவா . முதலில் உங்க கட்சியின் பிரச்னையை பாருங்க .


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 27, 2025 21:25

காங்கிரஸ் கால தமிழக வரி வசூலை விட இப்போது எத்தனை மடங்கு தமிழக வரிவசூல் அதிகரித்தது.


Mahendran Puru
ஜூலை 27, 2025 21:12

துணை ஜனாதிபதியோ ஜனாதிபதியோ நம்ம சொன்னபடி கேக்கலையென்றல் ராஜினாமாதான் ஒரே வழி. ஜனநாயகத்திற்கு இந்த அரசு கொடுக்கும் மரியாதை அவ்வளவு.


V K
ஜூலை 27, 2025 21:54

அவங்க பிரச்சனை இருக்கட்டும் பெருசு உமக்கு என்ன இப்போ பிரச்சனை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை