என்ன தகுதி உள்ளது?
நடிகைக்கு தொந்தரவு அளித்த குற்றச்சாட்டில் பாலக்காடு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராகுல் மாங்கூட்டத்திலை ராஜினாமா செய்ய கேரள பா.ஜ., வலியுறுத்துகிறது. அக்கட்சியின் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதே போக் சோ வழக்கு உள்ளது. இப்பிரச்னையை பற் றி பேச அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது? சதீஷன், கேரள எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்எதிர்பார்ப்புகள் சிதைந்துவிட்டன!
ஜம்மு - காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை திரும்ப அளிப்பது தொடர்பாக மழைக்கால கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம். எங்கள் எதிர்பார்ப்பு சிதைந்துவிட்டது. எங்களுக்கு அளித்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம். தொடர்ந்து அதற்காக பாடுபடுவோம். ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சிபா.ஜ., வெல்லாது!
நாட்டில் நேர்மையாக தேர்தல் நடந்தால் பா.ஜ.,வால் வெற்றி பெற முடியாது. அவர்கள் எப்படி ஓட்டுகளை திருடுகின்றனர் என்பதை ராகுல் வெளிப்படுத்தி உள்ளார். மஹாராஷ்டிராவிலும் பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி, ஓட்டுகளில் இது போன்ற தகிடுதத்தங்களை செய்தது. உத்தவ் தாக்கரே தலைவர், சிவசேனா உத்தவ் அணி