உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  தெலுங்கானா தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?: காங்., சோனியாவுக்கு மத்திய அமைச்சர் கேள்வி

 தெலுங்கானா தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?: காங்., சோனியாவுக்கு மத்திய அமைச்சர் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: 'தெலுங்கானாவில் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு தேர்தலின் போது அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா' என, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார். தெலுங்கானாவில் கடந்த 2023ல் நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, 'அபயஹஸ்தம்' எனப்படும் 'அபயமளிக்கும் கை' என்ற பெயரில் தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

இரு ஆண்டுகள்

அப்போது, 'மாநிலத்தில் காங்., ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் ஆறு திட்டங்கள் உடனே நிறைவேற்றப்படும்' என தெரிவித்திருந்தார். இதையடுத்து வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த காங்கிரசின் ரேவந்த் ரெட்டி முதல்வராக உள்ளார். அவர் ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி சமீபத்தில் சோனியாவை சந்தித்த முதல்வர் ரேவந்த் ரெட்டி அவரிடம், 'தெலுங்கானா எழுச்சி - 2047 தொலைநோக்கு ஆவணம்' என்ற வளர்ச்சி திட்ட ஆவணத்தை சமர்ப்பித்தார். இதை குறிப்பிட்டும், தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாததைக் கண்டித்தும், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கனிமவள துறை அமைச்சர் கிஷன் ரெட்டி திறந்த கடிதம் ஒன்றை சோனியாவுக்கு எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: தெலுங்கானாவில் காங்., ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் தேர்தலின் போது நீங்கள் தெலுங்கானா மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா என்பதை ஆய்வு செய்தீர்களா? இது குறித்து சமீபத்தில் உங்களை சந்தித்து பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் கேள்வி எழுப்பினீர்களா? தேர்தல் வாக்குறுதிகளை கைவிட்டு விட்டீர்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

எதிர்கால திட்டம்

தேர்தல் வாக்குறுதியாக அளித்த 420 அம்சங்களும் மூசி ஆற்றில் வீசப்பட்டு விட்டதா? அல்லது காந்தி பவனில் மண் தோண்டி புதைக்கப்பட்டு விட்டதா என தெளிவுபடுத்த வேண்டும். புதிய தொலைநோக்கு பார்வை என்ற எதிர்கால திட்டத்தை வெளியிடும் முன், ஏற்கனவே அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா என்பதை உறுதி செய்யவேண்டும். இல்லாவிட்டால், 'அபயமளிக்கும் கை' அழிக்கும் கையாக மாறி, அதிகாரத்தில் இருந்து உங்களை துாக்கி எறிந்துவிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

naranam
டிச 22, 2025 15:28

எல்லாம் அன்னையின் இலவசத்துக்கு அடிமைகள்!


Anand
டிச 22, 2025 10:31

இத்தாலி மாபியா மற்றும் அதன் கூட்டுக்களவாணி கூட்டம் சொல்வதெல்லாம் உண்மை என நம்பும் ஜந்துக்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். எப்பவோ அழிந்தொழிய வேண்டிய கூட்டம் இப்படிப்பட்ட ஜந்துக்களால் இன்னமும் உண்டு கொழுத்து அழிமாட்டம் செய்துக்கொண்டிருக்கிறது.


RAJ
டிச 22, 2025 08:22

இப்டி டக்குனு கேள்விகேட்ட எப்புடி பதில் சொல்றது...


mindum vasantham
டிச 22, 2025 07:51

வெள்ளையா இருந்தா நல்லவர் என்ற நினைப்பில் இவர் போன்ற இத்தாலியர்களை நம்புகின்றனர்


duruvasar
டிச 22, 2025 07:35

இதெற்கெல்லாம் ஸ்டாலின்தான் முன்னோடி .மக்களை மாக்களாகுவதுதான் புள்ளி கூட்டணியின் முக்கியம் குறிக்கோள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை