உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான் என்ன பழைய இரும்பு சாமானா? பா.ஜ., - எம்.பி., கரடி சங்கண்ணா காட்டம்

நான் என்ன பழைய இரும்பு சாமானா? பா.ஜ., - எம்.பி., கரடி சங்கண்ணா காட்டம்

கொப்பால்: ''நான் என்ன பழைய இரும்பு சாமானா. துாக்கி வீசுவதற்கு,'' பா.ஜ., - எம்.பி., கரடி சங்கண்ணா காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.கொப்பால் பா.ஜ., - எம்.பி., கரடி சங்கண்ணா, 73,வுக்கு லோக்சபா தேர்தலில் 'சீட்' மறுக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் அதிருப்தியில் உள்ளார்.கொப்பால் கினிகேரி கிராமத்தில் நேற்று அளித்த பேட்டி:லோக்சபா தேர்தலில் போட்டியிட, எனக்கு 'சீட்' மறுக்கப்பட்டது. அதன் பின்னர் கர்நாடகா பா.ஜ., தலைவர்கள் யாரும் என்னிடம், மொபைல் போனில் கூட பேசவில்லை. நான் என்ன பழைய இரும்பு சாமானா. என்னை அப்படி தான் நினைக்கின்றனர். எனக்கு சீட் மறுக்கப்பட்டற்கு, என்ன காரணம் என்று சொல்ல வேண்டும்.பதில் கிடைத்த பிறகே, பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன். கொப்பால் மக்களுக்கு, நிறைய கடமைப்பட்டு உள்ளேன். அவர்கள் பிரச்னைக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, தொண்டர்களிடம் ஆலோசித்து முடிவு எடுப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி