உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹாத்ரஸ் சம்பவம்: விசாரணை அறிக்கையில் போலே பாபா பெயர் இல்லை

ஹாத்ரஸ் சம்பவம்: விசாரணை அறிக்கையில் போலே பாபா பெயர் இல்லை

லக்னோ: உ.பி., மாநிலம் ஹாத்ரஸில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்ததற்கு விவகாரத்தின் பின்னணியில் பெரிய சதி இருக்க வாய்ப்பு உள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு கூறியுள்ளது. அதேநேரத்தில், இந்த அறிக்கையில் போலே பாபாவின் பெயர் இடம்பெறவில்லை.உ.பி.,யின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் கடந்த 2ம் தேதி ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. சுராஜ்பால் என்கிற போலே பாபா என்பவர் இந்த சொற்பொழிவில் பங்கேற்று பேசினார். இதில்,80 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்ட நிலையில், 2.50 லட்சம் பேர் திரண்டனர். சாமியார் புறப்படும் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி அடிபட்டும், மிதிபட்டும், மூச்சு திணறியும் 121 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்தது. ஏடிஜிபி அனுபம் குல்ஷ்ரேஷ்தா மற்றும் அலிகார்க் கமிஷனர் சைத்ரா ஆகியோர் தலைமையிலான குழுவினர், 128 சாட்சிகள், சொற்பொழிவு நிகழ்ச்சியில் பணியில் இருந்த போலீசார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்குமூலம் பெற்று, 855 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மாநில அரசிடம் தாக்கல் செய்தனர்.அந்த அறிக்கையில் ,ஹாத்ரஸ் சம்பவத்தின் பின்னணியில் பெரிய சதி உள்ளதை மறுக்க முடியாது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். கூட்ட நெரிசலுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு. உள்ளூர் நிர்வாகம், போலீசார் இந்நிகழ்ச்சியை சாதாரணமாக எடுத்துக் கொண்டனர் எனக் கூறப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்யாமலேயே அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். நிகழ்ச்சி நடந்த போது பொது மக்கள் வெளியேற போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உரிய தகவல்களை வழங்காமல் அனுமதி பெற்றனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது ஏற்பாட்டாளர்கள் தடுத்து உள்ளனர் எனக்கூறியுள்ளனர்.அதேநேரத்தில், இந்த அறிக்கையில் போலே பாபாவின் பெயர் இடம்பெறவில்லை. இந்த அறிக்கை குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்த உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்புசாமி
ஜூலை 09, 2024 17:25

அங்கேயும் ஜாதி பாத்துதான் வழக்கு பதிவு. பண்ணுவாங்க போலிருக்கே. . ஜாதி ஓட்டு முக்கியம்.


D.Ambujavalli
ஜூலை 09, 2024 16:54

அவர் எந்த விதத்திலும் தொடர்பு இல்லாதவறாகி விட்டாரா ? ஆட்சி யோகியின தாயிற்றே அவர் பாதுகாப்பு தானே முக்கியம்


chandrasekar
ஜூலை 09, 2024 15:33

உங்கள் கருத்து 100 சதவீதம் சரி. ஐயங்காரில் வேலன் என வைக்க மாட்டார்கள். பொய் பெயர் வைக்கும் முன் கொஞ்சமாவது ேஹாம்ஒர்க் செய்யவேண்டும்... இல்லையேல் இப்படி அசிங்கப்படத்தான் வேண்டும்.


தஞ்சை மன்னர்
ஜூலை 09, 2024 14:16

58 பெருசா 158 பெருசா வட இந்திய பி சே பிகள் எங்க உள்ளார்கள் என்று தெரியவில்லை


Swaminathan L
ஜூலை 09, 2024 12:12

நம் மக்கள் அதீத உணர்ச்சி வசப்படுகிறவர்கள் வெகு சுலபமாக. யாராவது ஏதாவது ஒரு வகையில் கொஞ்சம் பிரபலமாக இருந்தால் போதும், அவரை அருகில் பார்க்க வேண்டும் என்று உணர்ச்சிப் பெருக்கில் சுய அறிவிழந்து, விழிப்புணர்வின்றி ஒரூவர் மேல் நூறு விழுமளவுக்கு முண்டியடித்து உயிரை மலிவாக விடுவார்கள்.


Velan Iyengaar
ஜூலை 09, 2024 11:50

அது எப்படி?? நேரு தானே காரணம் ?? அது ராமராஜ்யம் ஆச்சே


Mettai* Tamil
ஜூலை 09, 2024 13:10

கரெக்ட் அ தான் சொல்லுறீங்க , ராமராஜ்யம் தான் . ஆமாம் நேரு தான் காரனம் .நேதாஜி கையால் சுதந்திரம் வாங்க வேண்டியது .............. இரும்பு மனிதர் படேல் பாரதத்தின் முதல் பிரதமர் ஆக வேண்டியது ...........


தத்வமசி
ஜூலை 09, 2024 14:06

திபெத்தை சீனா ஆக்கிரமித்தது, அதை நேரு அங்கீகரித்தது, காஷ்மீரின் ஒரு பகுதியை சீனா பிடித்துக் கொண்டது, இந்திய சரித்திர புத்தகத்தில் போலியே நிறைந்து இருப்பது, மொழிவாரி மாநிலமாக மக்களை பிரித்தது, காஷ்மீர் பிரச்சினை, அதற்கு ஏற்ப சில சட்டங்கள், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் நேருவின் சாதனைகளை.


Yaro Oruvan
ஜூலை 09, 2024 14:26

கருத்து எழுதுறதுக்கு புனை பெயர் வைக்கணும்னா பொதுவான ஒரு பெயர் வச்சுக்கோ.. எதுக்கு அடுத்த மதத்தின் பெயரில் ஒளிந்து கொண்டு அந்த மதத்தை இழிவு படுத்த வேண்டும்? ம்ம்ம் பொறப்பு வளர்ப்பு எல்லாம் எம்புட்டு முக்கியம்னு நல்லா புரியுது எங்களுக்கு...


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை