உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுத்து என்ன? டில்லியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

அடுத்து என்ன? டில்லியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தான் உடனான தாக்குதல் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் மோதல் உச்சத்தில் இருந்தது. போர் மேலும் தீவிரமடைய இருந்த நிலையில், நேற்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டன. தற்போது போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.இந்நிலையில், டில்லியில் இன்று (மே 11) காலை 11 மணிக்கு பிரதமர் மோடி அவரது இல்லத்தில் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.எல்லைப் பகுதியில் தற்போது நிலவும் சூழல் குறித்து முப்படை தளபதிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். எல்லையில் தாக்குதல் நிறுத்தப்பட்ட நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார். முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார் என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

kumarkv
மே 11, 2025 17:30

பாகிஸ்தானை நம்ப முடியாது. பிறக்கும்போதே மிருகமாக பிறக்கிரார்கள்.


Nada Rajan
மே 11, 2025 15:52

எல்லையில் போர் பதட்டத்தை தணிக்க வேண்டும்


முக்கிய வீடியோ