உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்து அதிகாரிகளுக்கான வாட்ஸ் அப் குரூப்: சர்ச்சையில் சிக்கிய கேரள ஐ.ஏ.எஸ்., அதிகாரி

ஹிந்து அதிகாரிகளுக்கான வாட்ஸ் அப் குரூப்: சர்ச்சையில் சிக்கிய கேரள ஐ.ஏ.எஸ்., அதிகாரி

திருவனந்தபுரம்: கேரளாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான கோபாலகிருஷ்ணன் என்பவரை அட்மினாக கொண்டு வாட்ஸ் அப் செயலியில் ' ஹிந்து ஐஏஎஸ் அதிகாரிகள் ' என்ற குழு துவங்கப்பட்டது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தனது மொபைல் எண் ஹேக் செய்யப்பட்டதாக அவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.தீபாவளி அன்று, கேரளாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலரின் வாடஸ் அப் செயலியில், ' ஹிந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ' என்ற பெயர் கொண்ட குழுவில் சேர்க்கப்பட்டு இருந்தனர். இந்த குழுவில் ஜூனியர்கள் முதல் மூத்த அதிகாரிகள் பலர் இடம்பெற்று இருந்தனர். மதம் மற்றும் ஜாதி ரீதியில் எந்த முடிவு அல்லது செயல்களில் ஈடுபடக்கூடாது என்பது சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கான பொதுவான விதி ஆகும். அப்படி இருக்கையில் மத ரீதியில் பெயர் கொண்ட 'வாட்ஸ் அப் குரூப்' ல் சேர்க்கப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது. குரூப்பை ஆய்வு செய்த போது அதன் அட்மின் ஆக இருந்தது மாநில தொழில்துறை இயக்குநரான கோபாலகிருஷ்ணன் பெயரை காட்டியது. ஆனால், அடுத்த சில நாட்களில் இந்த குரூப் கலைக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், கோபாலகிருஷ்ணன் தனது மொபைல்போன் ஹேக் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இது குறித்து போலீசில் புகார் அளித்த அவர், தனது நண்பர் ஒருவர் கூறியபிறகே வாட்ஸ் அப் குரூப் துவங்கப்பட்டது தெரியவந்தது. எனது போன் ஹேக் செய்யப்பட்டதுடன், அதன் மூலம் பல வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டன எனக்கூறியுள்ளார்.மேலும், போன் ஹேக் செய்யப்பட்டது குறித்து ஒவ்வொரு அதிகாரிக்கும் தனித்தனியே செய்தி அனுப்பி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sathyanarayanan Sathyasekaren
நவ 05, 2024 01:13

இப்போது தான் தெரியுமா? உமா சங்கர் என்ற IAS அதிகாரி வெளிப்படையாக கிருத்துவமத போதனை செய்துகொண்டிருப்பது யாருக்குமே தெரியாதா?


Barakat Ali
நவ 04, 2024 21:32

வாட்ஸ் ஆப் official அல்ல ... out of office, ஒரு வாட்ஸ் ஆப் குழு வைத்திருப்பதில் தவறில்லையே ???? அதே கேரளாவில் ஒரு பொதுத்துறை வங்கியின் ஊழியர்கள் சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியுள்ளனர் .... அந்த விவகாரம் இன்னும் சீரியஸானது .... ஆனால் அது சர்ச்சை ஆகவில்லை ....


தமிழ்வேள்
நவ 04, 2024 20:33

மதரீதியாக கோஷ்டியாக ஹிந்துக்களுக்கு எதிராக இயங்கும் ஆப்ரஹாமிய அரசு ஊழியர் அதிகாரி கும்பலை குறைந்த பட்சம் கண்டிக்கவாவது திராணி இருக்கிறதா? ஹிந்துக்களை காஃபிர் பாவி என்று அழைத்து கேவலப்படுத்தி பிழைப்பு நடத்தும் பயல்களுக்கு எதிராக ஹிந்து அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கோஷ்டி சேருவது எந்த விதத்தில் தவறாகும்? ஹிந்து துரோக காந்தி நேரு வகையறா வின் பருப்பு இனிமேல் பாரதத்தில் வேகாது..


Raa
நவ 04, 2024 17:38

"மதம் மற்றும் ஜாதி ரீதியில் எந்த முடிவு அல்லது செயல்களில் ஈடுபடக்கூடாது என்பது சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கான பொதுவான விதி ஆகும்." > இந்த விதி அரசியல் வாதிகளுக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்


user name
நவ 04, 2024 17:35

அவரின் பின்புலத்தை ஆராய்ந்தால் கண்டிப்பாக காவி சிந்தனை உடையவராக இருப்பார்


ஆரூர் ரங்
நவ 04, 2024 16:48

இதுவே பாலைவன குரூப் ன்னு போட்டிருந்தா பாராட்டுடன் இலவச சிலிண்டர் கூட வந்திருக்குமோ?


Amruta Putran
நவ 04, 2024 16:42

Hindu is not religion, it's nationality


jayvee
நவ 04, 2024 16:19

இது சர்ச்சையென்றால் உயர்நீதிமன்ற அலுலவலர்கள் வாட்ஸாப்ப் குரூப்பில் மோடியை அவமதித்து ஹிந்துக்களை இந்தியாவை அவமதித்து கருத்துக்களை இடும் திராவிட கிருத்துவ ஊழியர்களை என்ன செய்வது ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை