உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பக்தி இல்லாத இடத்தில் புனிதம் இருக்காது: சத்குரு

பக்தி இல்லாத இடத்தில் புனிதம் இருக்காது: சத்குரு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: 'பக்தி இல்லாத இடத்தில் புனிதம் இருக்காது. ஹிந்து கோவில்களை அரசு நிர்வகிக்காமல், பக்தியுள்ள ஹிந்துக்கள் நடத்த வேண்டிய காலம் இது' என்று, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து ஈஷா யோகா நிறுவனர் சத்குரு, சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கோவில் பிரசாதத்தில் பக்தர்கள் மாட்டுக் கொழுப்பை உண்பது, அருவருப்பு என்பதை விடவும் கொடுமையானது. அரசு நிர்வாகம் செய்யாமல், பக்தர்களே கோவில்களை நிர்வாகம் செய்ய வேண்டும் என்பது, இதனால் தான்.பக்தி இல்லாத இடத்தில் புனிதம் இருக்காது. ஹிந்து கோவில்களை, அரசு நிர்வகிக்காமல், பக்தியுள்ள ஹிந்துக்கள் நடத்த வேண்டிய காலம் இது.இவ்வாறு சத்குரு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

J.Isaac
செப் 23, 2024 08:29

இவருக்கும் புனிதத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஜெய் ஸ்ரீராம் சொல்லும் வடநாட்டவர், போலி பொருட்கள், போலி பில்கள்,போலி கணக்கு தயாரிப்பதில் திறமையானவர்கள்


கண்ணன்,மேலூர்
செப் 23, 2024 09:16

ரொட்டிக்காக மதம் மாறிய உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் தேவையில்லாமல் எங்கள் இந்து மதத்தில் தலையிடாதே!


J.Isaac
செப் 23, 2024 17:10

கண்ணன் அவர்களே உண்மையாக நான் "மதம்" மாற்றியுள்ளேன். ஏன் கோபம். இந்து மத கடவுள் யார்?


Mullaikani
செப் 22, 2024 23:33

சரியாய் சொன்னாரு எதுலேயும் பக்தி இல்லேனா machine போலதான் வேலை நடக்கும். மனசுல பக்தி இருந்தா மனித உணர்வோட செயல்படமுடியும். கோவில்கள் அனைத்தும் அரசு வேலை செய்யும் ஆஃபீஸ்ர்ஸ் கிட்ட இருக்கக்கூடாது, பக்தர்களால் நிர்வகிக்க வேணும்?


SUDHA KL
செப் 22, 2024 23:19

கண்டிப்பா பக்தி இல்லேனா robot/machine போலதான் வேலை நடக்கும், மனசுல பக்தி இருந்தா மனித உணர்வோட செயல்படமுடியும். அரசு வேலை பாக்ரவங்க கிட்ட இருக்கக்கூடாது நம்ம கோவில்கள்.. பக்தர்கள் தான் நிர்வகிக்க வேணும் ?


Brahmavidhya Kanchipuram Veanu
செப் 22, 2024 23:05

பக்தி கடவுள் மீது மட்டும் அல்ல, செய்யும் தொழிலில், செயலில் பக்தி இருந்தால் இந்த ஈனத்தனமான செயலை எவரும் செய்ய மாட்டார்கள்.


சுந்தர்
செப் 22, 2024 22:26

சத்குரு மற்றும் பல பக்தர்கள் நீண்ட காலமாக கோயில்கள் பக்தர்களால் நிர்வகிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். உண்மையான Secular நாடு எனில், மதம் அரசாங்கத்திலோ, அரசாங்கம் மதத்திலோ தலையிடல் கூடாது. Right time to implement a Board of Devotees to manage the Temples' Administration. Audits can be done by the Competent authority. Govt. must withdraw and handover the Temples to the Devotees Board. நடக்குமா?


அப்பாவி
செப் 22, 2024 22:25

நல்ல மனதிற்கும், வாய்மைக்கும் பக்தி தேவையில்லை. பக்தி இருந்தா கோவில் தேவையில்லை.நமது பாவங்களை போகத்தானே கோவிலுக்கு போய் உண்டியலில் காசு போட்டு, லட்டு வாங்கி தின்னறோம்? பக்தி இருந்தால் அந்த பாவங்களைச் செய்வோமா?


J.Isaac
செப் 22, 2024 22:25

பக்தி வேறு, தெய்வ பக்தி வேறு. தெய்வ பக்தி மூலம் நல்ல மனப்பான்மை. நல்ல எண்ணங்கள், மனிதநேயம், நன்னடத்தை ,நேர்மை போன்ற குணங்களை உருவாக்க வேண்டும்.


Ramesh Sargam
செப் 22, 2024 21:13

இவர் கூறியது மிக சரியாக இருக்கலாம். ஆனால் இவரும் ஒரு சில செய்யத்தகாத செயல்களை செய்துகொண்டிருக்கிறார். மிகவும் படித்த இளைஞர்களை வசியம் செய்து, தனது ஆசிரமத்தில் சேவை என்கிற பெயரில் அவர்களிடம் வேலை வாங்குகிறார். வெளிநாடுகளில் படித்த பல இளைஞர்கள் இவரிடம் வசியப்பட்டு, தங்கள் பெற்றோர்களை எதிர்த்துக்கொண்டு, இவருடைய ஆசிரமத்தில் சிறைப்பட்டிருக்கிறார்கள். முதலில் அவர்களை இவர் விடுவிக்கவேண்டும். அவர்களே இஷ்டப்பட்டால் ஒழிய, அவர்கள் பெற்றோர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களை ஆசிரமத்தில் சேவை செய்ய அனுமதிக்கக்கூடாது.


Yuvaraj Yuvaraj
செப் 22, 2024 23:45

நீங்கள் சொல்வது உண்மை என்றால் சட்டரீதியாக அதை நிருவன படுத்தவேண்டும் நக்கீரன் படித்துவிட்டு வந்து பொய் பேச வேண்டியதில்லை


sridhar
செப் 22, 2024 20:44

நான் இவர் Fan இல்லை , ஆனால் இவர் சொன்ன கருத்து முற்றிலும் உண்மை. தமிழக கோவில்களில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் ஆகம விதிமீறல்கள் எல்லை கடந்து போய்க்கொண்டிருக்கிறது ஹிந்து விரோத ஆட்சியில்.


Ramesh Sargam
செப் 22, 2024 20:24

இவர் கூறியது மிக சரியாக இருக்கலாம். ஆனால் இவரும் ஒரு சில செய்யத்தகாத செயல்களை செய்துகொண்டிருக்கிறார். மிகவும் படித்த இளைஞர்களை வசியம் செய்து, தனது ஆசிரமத்தில் சேவை என்கிற பெயரில் அவர்களிடம் வேலை வாங்குகிறார். வெளிநாடுகளில் படித்த பல இளைஞர்கள் இவரிடம் வசியப்பட்டு, தங்கள் பெற்றோர்களை எதிர்த்துக்கொண்டு, இவருடைய ஆசிரமத்தில் சிறைப்பட்டிருக்கிறார்கள். முதலில் அவர்களை இவர் விடுவிக்கவேண்டும். அவர்களே இஷ்டப்பட்டால் ஒழிய, அவர்கள் பெற்றோர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களை ஆசிரமத்தில் சேவை செய்ய அனுமதிக்கக்கூடாது.


சமீபத்திய செய்தி