உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் உலக தலைவர்கள் யார் யார்? முழு பட்டியல்

பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் உலக தலைவர்கள் யார் யார்? முழு பட்டியல்

புதுடில்லி: பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் உலக தலைவர்கள் குறித்த பட்டியல் மற்றும் அவர்கள் வருகை குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது.நாளை(ஜூன்9) இரவு 7:15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், மோடி தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் ஆக பதவியேற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். முன்னாள் பிரதமர் நேருக்கு பிறகு, தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்கும் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைக்க உள்ளது. விழாவில் பங்கேற்க பல நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9a979f1s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், விழாவில் பங்கேற்க டில்லி வர உள்ள உலக தலைவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.இதன்படி பதவியேற்பு விழாவில்இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேமாலத்தீவு அதிபர் முகமது முயிசுசீஷெல்ஸ் துணை அதிபர் அஹமது அபிப்வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாமொரிஷீயஸ் பிரதமர் பிரவின் குமார் ஜெகநாத்நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தாபூடான் பிரதமர் ஷெரீங் டோப்கே ஆகியோர் பங்கேற்கின்றனர்.இதன்படி, வங்கதேச பிரதமரும், சீஷெல்ஸ் துணை அதிபரும் இன்று டில்லி வருகின்றனர்.மொரிஷீயஸ், நேபாள, பூடான் பிரதமர்கள், இலங்கை மற்றும் மாலத்தீவு அதிபர்கள் நாளை டில்லி வர உள்ளனர்.உலகத் தலைவர்கள் வருகையை முன்னிட்டு டில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய ஓட்டல்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். ஓட்டலில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு செல்ல தனியாக வழியை போலீசார் ஏற்படுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Syed ghouse basha
ஜூன் 08, 2024 19:38

அடேங்கப்பா உலகவல்லரசுகளில் பெரும் தலைவர்கள்லே கலந்துகிறாங்க???


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 09, 2024 07:04

ஒட்டக மூளைக்கு மோடிஜியின் ராஜதந்திரங்கள் புரியாது. நன்றாக படி, நமது நாட்டை சுற்றி உள்ள அணைத்து தலைவர்களையும் அழைத்துள்ளார்கள்.


thiruvazhimaruban kuttalampillai
ஜூன் 08, 2024 14:28

ஆப்கானிஸ்தான் பிரதமரை அழைக்கலாம்


Anand
ஜூன் 08, 2024 16:52

முல்லாக்களுக்கு அழைப்பில்லை.


Velan Iyengaar
ஜூன் 08, 2024 14:11

இனி ரிலீஸ் செய்யும் ஒவ்வொரு போட்டோவும் நிதிஷ் மற்றும் நாயுடு ஒப்புதல் இல்லாம வெளிவராது ஹா ஹ ஹா ஹா ஹா ஆஹா


Velan Iyengaar
ஜூன் 08, 2024 14:10

ஹி ஹி ஹி ஹி ....


Velan Iyengaar
ஜூன் 08, 2024 15:48

ரிமோட் கண்ட்ரோல்..... கேட்கவே ரொம்போ நன்னா இருக்கு பேஷ் பேஷ்


மேலும் செய்திகள்