உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தைகளுக்கான முட்டையை திருடியது யார்? சிறையில் தள்ளுவதாக அமைச்சர் ஆவேசம்!

குழந்தைகளுக்கான முட்டையை திருடியது யார்? சிறையில் தள்ளுவதாக அமைச்சர் ஆவேசம்!

கோலார்: ''அங்கன்வாடியில் கடந்த இரண்டு மாதங்களாக குழந்தைகள், கர்ப்பிணியருக்கு முட்டை, மதிய உணவு ஏன் வழங்கவில்லை. இதை திருடி தின்றவர்களை பணி நீக்கம் செய்வது மட்டுமின்றி சிறையில் தள்ள வேண்டும்,'' என்று கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ் கோபமாக கூறினார்.கர்நாடக மாநில வளர்ச்சி திட்டக் கூட்டம், நேற்று முன்தினம் கோலார் ஜில்லா பஞ்சாயத்து அரங்கில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ் தலைமையில் நடந்தது.அமைச்சர்: சீனிவாசப்பூர் தாலுகா ஹக்கி பிக்கி கிராமத்தின் அங்கன்வாடியில் ஊழியர்களின் குழந்தைகள், கர்ப்பிணியருக்கு முட்டை, மதிய உணவு வழங்கவில்லை என்ற புகார், மாநில மகளிர் ஆணையத்துக்கு வந்துள்ளது. இதற்கு காரணமானோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆணைய தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார். இவைகளை திருடி தின்றது யார். இத்தகையோரை பணி நீக்கம் செய்வது மட்டுமின்றி, சிறையில் தள்ள வேண்டும். நாராயணசாமி - மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை துணை இயக்குனர்: சம்பந்தப்பட்ட ஊழியரை பணியில் இருந்து நீக்கி உள்ளோம். இத்தகைய முறைகேடு நடக்காத படி பார்த்து கொள்ளப்படும்.அமைச்சர்: சமூக நலத்துறையின் மாணவர் விடுதிகளில் சாப்பிட தட்டுகள், படுக்கைகள் இல்லை என்றும் புகார்கள் வந்துள்ளன. இனிமேல் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மாலுார் மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் போன்று வேறு எங்கும் நடக்க கூடாது.ரஹ்மத் நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் தனியார் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இங்கு, 2 கோடி ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். இதற்கான டெண்டர் விரைவில் விடப்பட்டு துரிதமாக கட்டப்படும்.கோலார் நகர அபிவிருத்தி குழுமும் சார்பில் 25 லட்சம் ரூபாய், எம்.எல்.ஏ., - எம்.எல்.சி., - எம்.பி., நிதி ஆகியவை வழங்க வேண்டும். அரசின் நிதியுதவியும் பெற்றுத் தருவேன். இன்போசிஸ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதியில் இருந்து, கோலாரம்மா ஏரியை சுற்றி, 8 கோடி ரூபாய் செலவில் நடைபாதை பணிகள் முடிந்துள்ளன.சீனிவாஸ், சிறிய நீர்வளத்துறை: ஏரி நடைபாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பது குறித்து மாவட்ட கலெக்டருடன் பேசி முடிவு செய்ய வேண்டும்.அமைச்சர்: கே.டி.பி., கூட்டத்திற்கு மட்டுமே அதிகாரிகள் வருகின்றனர். விழாவுக்கு வருமாறு அழைப்பிதழ் தருவதற்கு வருகிறீர்கள். கோலார் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஒரு அதிகாரி கூட என்னை சந்திக்க வந்ததே இல்லை. எல்லா அதிகாரிகளுமே சோம்பேறிகளாக உள்ளனர்.மல்லேஸ்பாபு, எம்.பி., - ம.ஜ.த., கோலார்: வளர்ச்சி பணிகள் குறித்து, இதுவரை அதிகாரிகள் யாரும், என்னை சந்தித்ததே இல்லை. கோலாரில் 10 ஏக்கர் நிலம் வழங்கினால், விளையாட்டு வளாகம் கட்டுவதற்கு மத்திய அரசிடம் நிதி பெற்று தருவேன்.நஞ்சே கவுடா, காங்., - எம்.எல்.ஏ., மாலுார்: மாலுாரில், வீடு இல்லாத 8,600 பேர், மனை கேட்டு 25 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். தரிசு நிலைக்குழுவிடம் மனு அளித்துள்ளனர். பலன் இல்லை.அக்ரம் பாஷா, கலெக்டர்: கோலார் மாவட்டத்தில் 60 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவை பரிசீலனையில் உள்ளன.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை