உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானா, காஷ்மீரில் ஆட்சி அமைப்பது யார்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

ஹரியானா, காஷ்மீரில் ஆட்சி அமைப்பது யார்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

புதுடில்லி: ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியும், காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.90 தொகுதிகளை கொண்ட காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 63.45 சதவீத ஓட்டுகள் பதிவாகின. அதேபோல் 90 தொகுதிகள் கொண்ட ஹரியானா சட்டசபைக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 61 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. இந்த மாநிலங்களில் ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.அதன்படி,ஹரியானா மாநிலம்

டைம்ஸ் நவ்

பா.ஜ.,: 18- 24காங்கிரஸ்: 55-62ஜே ஜேபி: 0 -03மற்ற கட்சிகள்: 02 - 05

ரிபப்ளிக் டிவி- மேட்ரிஸ்

பா.ஜ., : 18-24காங்கிரஸ்: 55-62இந்திய தேசிய லோக்தளம்: 03-06ஜேஜேபி: 00 -03மற்ற கட்சிகள்: 02 -05

சிஎன்என் நியூஸ் 18

பா.ஜ.,: 24காங்கிரஸ்: 58ஜேஜேபி : 2இந்திய தேசிய லோக்தளம்: 02

துருவ் ரிசர்ச்

பாஜ.,: 22-32காங்கிரஸ்: 50-64ஜேஜேபி: 0இந்திய தேசிய லோக்தளம்: 0

பீப்பிள்ஸ் பல்ஸ் அமைப்பு

பா.ஜ.,:20-32காங்கிரஸ்: 49-61ஜேஜேபி: 0-1இந்தய தேசிய லோக் தளம்: 2-3

டைனிக் பாஸ்கர்

காங்.,: 44-54பா.ஜ.,:15-29ஜேஜேபி:0-1இந்திய தேசிய லோக் தளம்:1-5ஆம் ஆத்மி:0-1மற்ற கட்சிகள்: 4-9

என்டிடிவி

பா.ஜ.,:24காங்.,:55ஜேஜேபி: 01இந்திய தேசிய லோக்தளம்:3மற்ற கட்சிகள் :7

காஷ்மீர்

தைனிக் பாஸ்கர்

பா.ஜ.,:20-25காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி: 35-40மக்கள் ஜனநாயக கட்சி: 4-7மற்ற கட்சிகள்: 12 - 16

சிஎன்என்- நியூஸ் 18

காங்., கூட்டணி-40பா.ஜ.,-26மற்ற கட்சிகள் 17மக்கள் ஜனநாயக கட்சி-7

பீப்பிள்ஸ் பல்ஸ்

பா.ஜ., :23-27காங்.,- தேசிய மாநாட்டு கட்சி: 46-50மக்கள் ஜனநாயக கட்சி :7-11மற்ற கட்சிகள் : 4-6

இண்டியா டுடே- சி வோட்டர்

பா.ஜ.,: 27 - 32காங்., - தேசிய மாநாட்டு கட்சி:40-48மக்கள் ஜனநாயக கட்சி :6-12மற்ற கட்சிகள்: 6-11

என்டிடிவி

பா.ஜ.,:26காங்., - தேசிய மாநாட்டு கட்சி:43மக்கள் ஜனநாயக கட்சி:8மற்ற கட்சிகள்:13


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

r parthasarathy
அக் 05, 2024 22:42

காங் + க்ராஸ்.. வந்து பா ஜ க போனால்.. இந்தியர்கள்.. சோமாலியா நாட்டு மக்கள் போல் பிச்சை எடுக்கும் நிலை வந்து விடும்..


தேவதாஸ் புனே
அக் 05, 2024 22:18

படித்தவர்கள் கூட காங்கிரஸ் vs பாஜக ஆட்சி காலத்தில் நடந்த வளர்ச்சி பணிகள், வித்தியாசம் பற்றி அறிய முற்படவில்லை...... தெரிந்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை...... அவர்களின் போக்கு...... இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை என்பதுதான்..... அதனால் தான் என்னவோ..... பாஜக வும் இலவசங்களை நம்பி களத்தில் இறங்குகின்றன..... இது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல...... ஆனால் விதி வலியது.....


Oviya Vijay
அக் 05, 2024 22:05

ஒவ்வொரு மாநிலத்திலும் இதே போல் கொஞ்சம் கொஞ்சமாக பிஜேபி தூக்கி எறியப்படும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை...


Sathyanarayanan Sathyasekaren
அக் 06, 2024 04:15

அப்போதானே ஓவிய விஜய் போன்ற கொத்தடிமை திருடர்கள், கொள்ளையர்கள் உழைக்கமாக ஊழல் செய்து பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்க கொள்ளை அடிக்க முடியும். வெட்கக்கேடு.


Prasanna Krishnan R
அக் 06, 2024 06:45

You just do Christian missionary work. Don't ever try to come to us.


Raman
அக் 05, 2024 21:42

Anti national spotted


ஆரூர் ரங்
அக் 05, 2024 21:41

யூனியன் பிரதேசம் என்பதால் மாநில அரசின் அனுமதியில்லாமலே ராணுவம் செயல்படும். முன்பு போல தேசீய காங்கி வாலாட்ட முடியாது. தொடர்ந்து ஒழுங்கான ஆட்சி நடந்தால்தான் முழு மாநில அந்தஸ்துக்கு பரிசீலிப்பர்.


ஆரூர் ரங்
அக் 05, 2024 21:38

லோக்சபா தேர்தல் கணிப்புகள் நினைவுக்கு வருகிறது இரண்டு மாநிலங்களிலும் இதுவரை பிஜெபி தனித்து ஆட்சியைப் பிடித்தில்லை. இழக்க ஒன்றுமில்லை. ஆனால் காஷ்மீரில் இதுவரை காணாத அளவு சீட் நிச்சயம். யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைப்பது கடினம். காஷ்மீரில் கூட்டணி ஆட்சிகள் நிலைத்ததுமில்லை.


கிஜன்
அக் 05, 2024 21:24

கார்கே ராசியான ஆளு .... சென்ற இடமெல்லாம் வெற்றி தான் ....


RAJ
அக் 05, 2024 21:00

ஆகமொத்ததுல , காஷ்மீருக்கும் , ஹரியானாவுக்கும் சூன்யம் தொடங்கப்போவுதுனு ஆருடம் சொல்றிங்க .. விதி வலியது..


கல்யாணராமன்
அக் 05, 2024 20:44

காங்கிரஸ் மகளிர் உரிமை தொகை ஹரியானா மாநிலத்தில் ரூ 2000 மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரூ 3000 கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஒவ்வொரு கட்சியும் இப்படி வாக்குறுதி அளிக்க காரணம் மதுவினால் வரும் வருமானத்தின் மூலம் அரசு பணத்தை லஞ்சமாக கொடுப்பது போல் வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடிக்கிறது. இதற்கு வித்திட்டது திமுக. இதை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்தி கடிவாளம் போட வேண்டும்.


GMM
அக் 05, 2024 20:22

கருத்து கணிப்பு தேர்தல் சீர்திருத்த அவசியத்தை உறுதி செய்கிறது. பிஜேபி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் யார் ஆண்டாலும் தேச பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். ஒரு கட்சிக்கு வாக்காளர் ஆதரவை கூட்டணி முறையில் அறிய முடியாது. பதிவு கட்சிகள் போட்டி கட்டாயம். 50 சதவீதம் மேல் வாக்கு பெற்றவர் புதிய மசோதாவிற்கு ஓட்டளிக்க தகுதி போன்ற எராள சீர் திருத்தம். இல்லாவிட்டால் 16ம் நூற்றாண்டின் நிலை திரும்பும். சித்திரவதை குறைய கல்லூரியில் அடிமை வாழ்வு முறை பாட நூல் அவசியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை