உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமான இன்ஜினை மாற்றாதது ஏன்?: ஏர் இந்தியாவுக்கு டி.ஜி.சி.ஏ., சம்மன்

விமான இன்ஜினை மாற்றாதது ஏன்?: ஏர் இந்தியாவுக்கு டி.ஜி.சி.ஏ., சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஏர் இந்தியா'வின் 'ஏர் பஸ் - 320' விமானத்தின் இன்ஜின்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றத்தவறிய அதன் நிர்வாகத்திற்கு, டி.ஜிw.சி.ஏ., விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியது தெரியவந்துள்ளது.ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில் இயக்கப்பட்ட 'ஏர் பஸ் - 320' என்ற விமானத்தில் இன்ஜினை மாற்றும்படி ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்திஉள்ளது.எனினும் அவற்றை மாற்றாமல், மாற்றப்பட்டது போல் அந்நிறுவனம் பதிவு செய்துள்ளதை, டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கண்டறிந்து, கடந்த மார்ச்சில் ஏர் இந்தியாவுக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியது தெரியவந்துள்ளது. இந்த சம்மனில், 'குறிப்பிட்ட கால அளவிற்குள் ஏர் பஸ் - 320 விமானத்தின் இன்ஜினை மாற்றாதது ஏன்? எனினும், மாற்றப்பட்டது போல் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பு?' என, குறிப்பிட்டுள்ளது. இச்சம்மனை தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் அதன் தரக்கட்டுப்பாட்டு மேலாளரை நீக்கியுள்ளது. இதுபோன்ற இன்ஜின் பராமரிப்பில் மெத்தனமாக செயல்படுவது, மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என, விமான விபத்துகளை விசாரிக்கும் ஆணையத்தின் முன்னாள் தலைவர் விபூதி சிங் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Senthoora
ஜூலை 05, 2025 10:04

இன்ஜின் மாற்றியது செலவு காட்டப்பட்டிருக்கு. ஆனால் இன்ஜின் தான் மாற்றப்படவில்லை.


அப்பாவி
ஜூலை 05, 2025 09:52

260 கோடீஸ்வரர்களை உருவாக்கிட்டாங்க.


அப்பாவி
ஜூலை 05, 2025 07:25

பராமரிப்பில் கஞ்சத்தனம். டாட்டா ஆளுங்களே ஏர் இந்தியாவில் போக மாட்டாங்க. தனி விமானத்தில் போவாய்ங்க.


N Sasikumar Yadhav
ஜூலை 05, 2025 07:02

டாடா கம்பெனி ரத்தன் டாடா மறைவுக்கு பின் சீரழிந்துவிட்டது


அப்பாவி
ஜூலை 05, 2025 08:40

அவுரு ஒழுங்கா என்ன? அவர் காலத்தில்தான் ஏர் இந்தியா வாங்கபட்டது. அப்போதிலிருந்தே இஞ்சின் மாத்தலையாம்.


Seekayyes
ஜூலை 05, 2025 06:45

எந்த வகையில் பார்த்தாலும் ஏர் இந்தியாவின் விமான சேவை கேள்விகுரியாக இருக்கும் பட்சத்தில் டி ஜி சி ஏ ஏன் இந்த டாடா குழும கம்பெனியை தரை இரக்க கூடாது?


Varadarajan Nagarajan
ஜூலை 05, 2025 05:27

ஒரு டாடா குழுமம் இதுபோன்ற முக்கியமான அதுவும் பயணியர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொண்டது மட்டுமல்லாமல் மாற்றாத எஞ்சினை மாற்றியதுபோல ஆவணங்களில் மறைத்தது மிகவும் ஆச்சர்யமானதாகவும் வியப்பானதாகவும் உள்ளது. மக்களிடையே பல நூற்றாண்டுகளாக டாடா குழுமத்திற்கு உள்ள நற்பெயருக்கு இதுபோன்ற ஏதோவொரு அதிகாரியால் அவப்பெயர் ஏற்படுவதை நம்பமுடியவில்லை.


சமீபத்திய செய்தி