மேலும் செய்திகள்
தேசிய நலன் மீதான பற்றால் உச்சத்தை தொட்டவர் பிரதமர் மோடி; அமித் ஷா
1 hour(s) ago | 1
இளம்பெண் தற்கொலை முயற்சி
3 hour(s) ago
சிப்பி காளான் வளர்ப்பு செயல் விளக்கம்
3 hour(s) ago
ஹூப்பள்ளி: ''தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தை மறைக்க மோடி அரசு முயற்சிக்கிறது,'' என, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் குற்றஞ்சாட்டினார்.ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:மோடி அரசில் நீதிபதிகள், துாக்கி வீசப்பட்டனர். தேர்தல் கமிஷனில் இருந்து துாக்கி எறியப்பட்டனர்.சுயாட்சி அமைப்புகள், பா.ஜ., கூறியபடி நடக்க வேண்டும். இது தான் நாட்டில் நடக்கிறது. அனைத்து கமிஷன்களும், அமைப்புகளும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக உள்ளன. இதில் தேர்தல் ஆணையமும் ஒன்று தான்.நாட்டில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. பா.ஜ.,வுக்கு 6,000 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை வந்துள்ளது. பல பெரிய நிறுவனங்கள், பா.ஜ.,வுக்கு நன்கொடை அளித்துள்ளன. இது ஊழலின் உச்சம் என்பதை தெளிவாக காட்டுகிறது.காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் தினமும் 'ரெய்டு' நடத்தப்படுகிறது. இம்மாதிரியான அமைப்பு, நாட்டில் கட்டமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பத்திரத்தில் பல பிரச்னைகள் வெளிவருகின்றன. மோடி அரசு அதை மூடி மறைக்க முயல்கிறது.கர்நாடகத்தின் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். மோடி வரும் வரை நாடு வளர்ச்சி அடையவில்லையா; நாடு நரகமாக இருந்ததா. இப்போது சொர்க்கமாக உள்ளதா?இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago | 1
3 hour(s) ago
3 hour(s) ago