அமைதி காப்பது ஏன்?
பீஹாரில், வாக்காளர் பட்டியல் முறைகேடு பற்றி பேசும் ராகுல், ஆந்திராவில்
நடந்த ஓட்டு திருட்டு பற்றி அமைதி காப்பது ஏன்? முதல்வர் சந்திரபாபுவுடன்
நெருங்கிய தொடர்பில் இருப்பதால் அவர் பேசவில்லையா? லோக்சபா தேர்தலின்போதே
ஆந் திராவில், 48 லட்சம் போலி ஓட்டுகள் பதிவாகின. ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திர முன்னாள் முதல்வர், ஒய்.எஸ்.ஆர்.காங். கவனஈர்ப்புக்காக குற்றச்சாட்டு!
கர்நாடகாவில் ஓட்டு திருட்டு நடந்ததாக ராகுல் குற்றஞ்சாட்டுவது உண்மையில் ஓட்டு திருட்டுக்காக அல்ல. தன் மீது கவனத்தை திருப்ப வேண்டும் என்பதற்கான கவன திருட்டு. அவரை எதிர்த்து பேசிய கர்நாடக அமைச்சர் ராஜண்ணாவின் பதவியை கட்டாயப்படுத்தி பறித்துள்ளார். இது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல். பிரஹலாத் ஜோஷி மத்திய அமைச்சர், பா.ஜ.,பாதுகாக்கும் பா.ஜ.,!
தேர்தல் கமிஷன் மீது ராகுல் கேள்வி எழுப்பினால், அதை பா.ஜ., பாதுகாப்பு அரணாக காக்கிறது. வாக்காளர் பட்டியல் முறைகேடுகளுக்கு அக்கமிஷன் தன்னிச்சையாக பதிலளிப்பதை தவிர்க்கிறது. அரசியல் தலையீடு இன்றி, அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் செயல்பட வேண்டிய தார்மீக பொறுப்பு தேர்தல் கமிஷனுக்கு உள்ளது. சச்சின் பைலட் ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர், காங்.,,