உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கலவரத்துக்கு காரணமானவர்களை கைது செய்யாதது ஏன்: கோர்ட் கேள்வி

கலவரத்துக்கு காரணமானவர்களை கைது செய்யாதது ஏன்: கோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா : 'சந்தேஷ்காலி பகுதியில் ஏற்பட்ட கலவரத்துக்கு காரணமான முக்கிய குற்றவாளிகளை கைது செய்யாததது ஏன்' என மேற்கு வங்க அரசுக்கு கோல்கட்டா உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில், சந்தேஷ்காலி என்ற கிராமம் உள்ளது.

பதற்றம்

இங்கு, திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜஹான் ஷேக் என்பவர், பழங்குடியினத்தவர்களின் நிலங்களை அபகரித்ததுடன், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. ஷாஜஹான் ஷேக் தலைமறைவானார்.அவரை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வெடித்த வன்முறையால், சந்தேஷ்காலியில் பதற்றம் நீடிக்கிறது. அங்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பா.ஜ.,வை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி மற்றும் எம்.எல்.ஏ., சங்கர் கோஷ் ஆகியோர் சந்தேஷ்காலிக்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்களை சந்திக்க முயன்றனர். போலீசார் அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு, தனி நீதிபதி அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.அப்போது, பா.ஜ., தலைவர் சுவேந்து அதிகாரி மற்றும் எம்.எல்.ஏ., சங்கர் கோஷ் ஆகியோர் சந்தேஷ்காலிக்கு செல்ல நீதிபதி அனுமதி அளித்தார்.

விசாரணை

இதை எதிர்த்து மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு, தலைமை நீதிபதி சிவஞானம் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட நீதிமன்றம் மறுத்துவிட்டது. சுவேந்து அதிகாரி மற்றும் சங்கர் கோஷ் சந்தேஷ்காலிக்கு செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது.மேலும், 'சந்தேஷ்காலி பகுதியில் ஏற்பட்ட கலவரத்துக்கு காரணமான முக்கிய குற்றவாளிகளை கைது செய்யாததது ஏன். குற்றவாளிகளை மாநில அரசு ஏன் பாதுகாக்கிறது' என, மேற்கு வங்க அரசுக்கு கோல்கட்டா உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.இதை தொடர்ந்து, சுவேந்து மற்றும் சங்கர், சந்தேஷ்காலிக்கு நேற்று சென்றனர். அங்கு, பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து உரையாடினர். அதன் பின், செய்தியாளர்களிடம் சுவேந்து அதிகாரி கூறியதாவது:உள்ளூர்வாசிகள் அனுபவித்த வேதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. அவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.சுவேந்துவை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூ., மூத்த தலைவர் பிருந்தா கராத், சந்தேஷ்காலிக்கு நேற்று சென்றார். முதலில் அவருக்கு அனுமதி மறுத்த போலீசார், பின் அனுமதி அளித்தனர். அவரும், பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி