உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்டாய கல்வி உரிமை தொகையை மாநிலங்களுக்கு ஏன் கொடுக்கவில்லை? கேட்கிறது உச்சநீதிமன்றம்

கட்டாய கல்வி உரிமை தொகையை மாநிலங்களுக்கு ஏன் கொடுக்கவில்லை? கேட்கிறது உச்சநீதிமன்றம்

'கட்டாய கல்வி உரிமைக்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றால், மாநில அரசு அந்த தொகையை செலுத்த வேண்டும்' என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.ஏழைக் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, கட்டாய கல்வி உரிமை சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். 'தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்கக்கை நடத்தப்படவில்லை' என, ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி வழங்காமல் இருப்பதாக தமிழக அரசு வாதிட்டது. இதை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 'மத்திய அரசிடம் இருந்து போதுமான நிதி கிடைக்கவில்லை என்றால் தனியார் பள்ளிகளுக்கான கட்டாய கல்வி உரிமைக்கான கட்டணங்களை மாநில அரசு தன் நிதியிலிருந்து வழங்க வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ''கடந்த 2021 -- 22ம் நிதியாண்டில் இருந்து தற்போது வரை கட்டாய கல்வி நிதிக்காக, 153 கோடி ரூபாயை தமிழக அரசு செலவிட்டுள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, 342 கோடி ரூபாயை இன்னும் விடுவிக்காமல் இருக்கிறது. ஏற்கனவே இதே போன்று நிதி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது,'' என, வாதிட்டார். இதை கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது மத்திய அரசு மற்றும் எதிர்மனுதாரரான ஈஸ்வரன் நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

sankaran
செப் 26, 2025 21:15

மத்திய அரசின் கல்வி கொள்கையை ஏற்க மாட்டோமாம்.. ஆனால் நிதி மட்டும் ஒதுக்க வேண்டுமாம்...இது எப்படி இருக்கு?..


ஜெய்ஹிந்த்புரம்
செப் 16, 2025 00:17

இதே போல் செவிலியர் சம்பளத்துக்கும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய 440 கோடியை தராமல் இழுத்தடிக்கிறது. சென்னை உயர்நீதி மன்றம் ஒன்றிய அரசுக்கு ஓலை அனுப்பியுள்ளது. இதுவும் இன்றைய செய்தியில் வந்துள்ளது. தமிழ்நாட்டு வரிப்பணத்தை பிடுங்கி தரவேண்டியதை தராமல் கொடுமை செய்யும் பாஜக ஒன்றிய அரசு


ஜெய்ஹிந்த்புரம்
செப் 15, 2025 23:23

ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் “குட்டு” ன்னு ஏன் தலைப்பை போடவில்லை?


VASANTHA KANNAPIRAN
செப் 03, 2025 17:30

வரி வசூலித்துக்கொண்டவர்கள் பணம் கொடுக்கவேண்டிய ஒருவர் பணம் கொடுத்தால்தான் ஒரு பணி தொடரமுடியும். நான் கொடுக்க மாட்டேன் என ஆடம் பிடித்தால் பரவாயில்லை நீ செய் என்றால் இது எப்படி சாத்தியம். அரசு நீதித்துறை உட்பட ஒவ்வொரு துறைக்கும் பட்ஜெட்டில் போதிய பணம் ஒதுக்காமல் நீயே செலவு செய்துகொள் என்றால் அந்தந்த துறைகளுக்கு சாட்த்தியப்படுமா?


திகழ்ஓவியன்
செப் 02, 2025 12:50

DMK லீகல் விங் வெரி STRONG


visu
செப் 02, 2025 10:38

அயோகியதானம் செய்வது மாநில அரசுதான் ஒரு திட்டத்தில் சேராமல் நிதி மட்டும் கொடுங்க என்றால் எப்படி கொடுப்பாங்க .காங்கிரஸ் அரசு ஒரு திட்டத்த கொண்டு வந்தது பின்னர் வந்த பிஜேபி அரசு வேறு ஒரு திட்டத்தை கொண்டுவந்தது இப்ப நீங்க இல்லாத திட்டத்துக்கு நிதி கேட்டா எப்படி கொடுக்க முடியும் ஆட்சி முடியும் நேரம் நீதிமன்றத்தில் வழக்கை போட்டுட்டு கம்முன்னு இருந்திடுவாங்க


NAGARAJAN
செப் 02, 2025 09:49

மத்திய அரசின் இந்த அயோக்கியத்தனம் புதியதில்லையே.. இதே பாஜக ஆளும் மாநிலங்களில் உடனடியாக கொடுத்திருப்பார்கள்.. இந்த பாரபட்சம் இந்தியாவிற்கு நல்லதில்லை


Mahendran Puru
செப் 02, 2025 08:28

தமிழக நலனுக்கு எதுவும் செய்யாது மத்திய அரசு. ராஜ் பவனில் உட்கார்ந்துகொண்டு தமிழ் மக்கள் செலவில் வாழும் கவர்னர் இதெல்லாம் கேட்க மாட்டாரா?


vivek
செப் 02, 2025 10:45

முதலில் கணக்கு சொல்லு


Sangi Mangi
செப் 02, 2025 11:25

உக்காந்து தமிழக மக்களின் காசை தின்னும் நீதாண் கணக்கு சொல்லணும்


GMM
செப் 02, 2025 07:13

சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி வழங்க தமிழகம் கோரிக்கை. ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசிடம் இருந்து போதுமான நிதி கிடைக்கவில்லை என்றால் தனியார் பள்ளிகளுக்கான கட்டாய கல்வி உரிமைக்கான கட்டணங்களை மாநில அரசு தன் நிதியிலிருந்து வழங்க வேண்டும் என்கிறது. திமுக வழக்கறிஞர் வில்சன், 153 கோடி தமிழக செலவு. 342 கோடி மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்கிறார் . வில்சன் முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போடுகிறார். தமிழகம் தன் நிதியிலிருந்து செலவு செய்ய வேண்டும் என்கிறது. வில்சன் பழைய பிரச்சனை கொண்டு திசை திருப்பி விவாதிக்கிறார். உச்ச நீதிபதிக்கு வழக்கு புரியவில்லை


Sangi Mangi
செப் 02, 2025 11:21

நீ மிக பெரிய பு த்திசாலி தான் உடனே உனக்கு புரிந்து விட்டது


ramani
செப் 02, 2025 05:24

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஸ்வீட் பாக்ஸ் போயி விட்டது போலிருக்கிறது


சமீபத்திய செய்தி